நீதியின் பயன்கள்
கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; உபா 25:13-16நீதி 16:11நீதி 20:23லேவி 19:35-36நீதி 20:10ஓசி 12:7ஆமோ 8:5-6எசேக் 45:10-12
சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
அகந்தை வந்தால் அவமானமும் வரும்; நீதி 29:23நீதி 16:18-19லூக் 18:14நீதி 15:33நீதி 18:12நீதி 3:34-351 கொரி 8:1-2லூக் 14:8-11
தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; நீதி 28:18நீதி 13:6சங் 25:21சங் 26:1யோவா 7:17நீதி 19:3பிரச 7:17நீதி 11:5
துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; செப்ப 1:18நீதி 10:2ஆதி 7:1எசேக் 7:191 தீமோ 4:8சங் 49:6-8லூக் 12:20மத் 16:26
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; நீதி 5:22சங் 9:15-16எஸ்த 7:3-10மத் 27:4-5நீதி 1:31-32நீதி 11:3நீதி 3:62 சாமு 17:23
துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.
செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; பிரச 10:81 இராஜா 2:441 சாமு 12:3-4நீதி 5:22சங் 7:15-161 இராஜா 2:32-33ஆதி 30:33ஆதி 31:37
துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.
துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; நீதி 10:28யோபு 8:13-14யோபு 11:20யாத் 15:9-10லூக் 12:19-20நீதி 14:32சங் 146:4எசேக் 28:9
அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.
நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; தானி 6:23-24நீதி 21:18எஸ்த 7:9-10ஏசா 43:3-4
அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதி 2:10-16நீதி 4:5-61 யோவா 2:271 யோவா 2:211 தீமோ 4:1-32 கொரி 11:13-152 பேது 2:1-32 பேது 3:16-18
நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; நீதி 28:12சங் 58:10-11எஸ்த 8:15-16நியாயாதி 5:31நீதி 28:28யாத் 15:21யோபு 27:23வெளி 19:1-7
துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; நீதி 14:34நீதி 29:8யாக் 3:62 நாளாக 32:20-22பிரச 9:15யோபு 22:302 சாமு 20:1எஸ்த 3:8-15
துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.
மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; 1 பேது 2:23நீதி 10:19லூக் 16:14லூக் 18:9நீதி 14:21சங் 123:3-41 சாமு 10:272இராஜா 18:36
புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; நீதி 20:19லேவி 19:16நீதி 25:91 தீமோ 5:13நீதி 26:20-22யோசு 2:14எரே 38:27யோசு 2:20
ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; நீதி 24:6நீதி 15:22நீதி 20:18நீதி 16:221 இராஜா 12:1-19அப் 15:6-21ஏசா 19:11-14
அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; நீதி 17:18நீதி 6:1-5நீதி 20:16நீதி 22:26-27
பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; நீதி 31:30-31லூக் 10:42அப் 16:14-151 சாமு 25:32-33அப் 9:392 யோவா 1:12 சாமு 20:16-22எஸ்த 9:25
பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.
தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; மத் 5:7யாக் 2:13மத் 25:34-402 கொரி 9:6-14தானி 4:27யாக் 5:1-5மத் 6:14-15பிலி 4:17
கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.
துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; கலா 6:8-9பிரச 10:8ஓசி 10:12-13யாக் 3:18நீதி 22:8சங் 126:5-6நீதி 1:18நீதி 5:22
நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, நீதி 10:16நீதி 12:28நீதி 19:23ரோம 2:8-9நீதி 1:16-19நீதி 7:22-23நீதி 8:361 யோவா 3:10
தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.
மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; சங் 119:11 நாளாக 29:17நீதி 21:29சங் 140:13நீதி 6:14நீதி 8:13சங் 11:7சங் 18:25-26
உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; சங் 112:1-2அப் 2:39எரே 32:39சங் 37:26நீதி 16:5நீதி 13:22ஆதி 17:7-8யாத் 23:2
நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், 1 பேது 3:3-4நீதி 31:30நாகூ 3:4-62 பேது 2:22நீதி 7:10நீதி 9:13ஆதி 24:47எசேக் 16:15-22
பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
நீதிமான்களுடைய ஆசை நன்மையே; மத் 5:6சங் 37:4ரோம 2:8-9ஏசா 26:9எரே 17:16நீதி 10:28சங் 10:17சங் 119:10
துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.
வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; நீதி 19:17லூக் 6:38உபா 15:10சங் 112:9பிரச 11:6ஆகா 1:6ஆகா 1:9-112 கொரி 9:5-11
அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும்
வறுமையடைபவர்களும் உண்டு.
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; மத் 5:72 கொரி 9:6-9ஏசா 58:7-11மத் 25:34-35ஏசா 32:8நீதி 28:27யோபு 29:13-18யோபு 31:16-20
எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; ஆதி 42:6யோபு 29:13ஆமோ 8:4-6நீதி 24:24
விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; சங் 7:15-16நீதி 17:11எஸ்த 7:10சங் 57:6சங் 9:15-16சங் 10:2
தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; 1 தீமோ 6:17எரே 17:8சங் 52:7-8சங் 1:3மாற் 10:24-25சங் 62:10சங் 92:12-14உபா 8:12-14
நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.
தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; பிரச 5:16நீதி 14:19ஆப 2:9-10நீதி 15:271 சாமு 25:171 சாமு 25:31 சாமு 25:38ஆதி 34:30
மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
நீதிமானுடைய பலன் ஜீவமரம்; தானி 12:3யாக் 5:201 கொரி 9:19-231 தெச 2:19நீதி 3:18யோவா 4:36லூக் 5:9-10மத் 4:19
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் 1 பேது 4:17-18எரே 25:291 கொரி 11:30-322 சாமு 12:9-12நீதி 13:212 சாமு 7:14-151 இராஜா 13:24
பாவிக்கும் எத்தனை அதிகம்.