ஞானமே பிரதானம்
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, எபி 2:1சங் 34:11நீதி 1:8நீதி 2:1-51 தெச 2:11-12நீதி 5:1நீதி 19:20நீதி 22:17
புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; 1 தீமோ 4:6தீத் 1:9உபா 32:2யோபு 33:3நீதி 8:6-9சங் 89:30-321 நாளாக 28:92 நாளாக 7:19
என் உபதேசத்தை விடாதிருங்கள்.
நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், 1 நாளாக 22:51 நாளாக 29:1ரோம 12:161 நாளாக 3:51 இராஜா 1:13-172 சாமு 12:24-25எரே 10:23சகரி 12:10
என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: நீதி 3:1எபே 6:4யோவா 12:501 நாளாக 28:9நீதி 7:22 தீமோ 3:15உபா 6:6ஏசா 55:3
உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக;
என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; யாக் 1:5நீதி 3:13-182 நாளாக 34:2நீதி 1:22-23சங் 44:18யோபு 23:11நீதி 17:16நீதி 8:5
என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; 2 தெச 2:10நீதி 4:21-22எபே 3:17நீதி 2:10-12
அதின்மேல் பிரியமாக இரு,
அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; பிரச 7:12பிரச 9:16-18நீதி 23:23நீதி 16:16பிலி 3:8மாற் 8:36-37மத் 13:44-46சங் 119:104
என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; தானி 12:31 சாமு 2:30நீதி 3:351 இராஜா 3:5-13நீதி 22:4
நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; நீதி 1:91 பேது 5:4எபி 2:7-9ஏசா 28:5நீதி 16:31வெளி 3:211 பேது 3:41 தீமோ 2:9-10
அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; 1 தெச 2:13நீதி 3:2உபா 6:2எரே 9:20நீதி 3:161 தீமோ 1:15யோவா 3:32-33நீதி 8:10
அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.
ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; சங் 25:4-5பிரச 12:9நீதி 8:91 சாமு 12:23-24நீதி 8:6சங் 23:3உபா 4:5நீதி 4:4
செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீதி 3:23சங் 18:361 பேது 2:82 சாமு 22:37யோவா 11:9-101 யோவா 2:10-11சங் 119:165சங் 91:11-12
நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், எபி 2:1நீதி 23:23நீதி 3:181 தெச 5:21உபா 32:47அப் 11:23அப் 2:42யோவா 6:68
அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; சங் 1:11 கொரி 15:33நீதி 1:10நீதி 1:15நீதி 13:20நீதி 9:6நீதி 2:11-12சங் 26:4-5
தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; எபே 5:11யோபு 22:231 தெச 5:22யாத் 23:7யோபு 11:14ஏசா 33:15நீதி 5:8நீதி 6:5
அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; சங் 36:4மீகா 2:1ஏசா 57:202 பேது 2:14நீதி 1:16லூக் 22:66யோவா 18:28
அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, யாக் 5:4-5மீகா 6:12நீதி 20:17நீதி 9:17சங் 14:4ஆமோ 8:4-6எசேக் 22:25-29எரே 5:26-28
கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் யோவா 8:12யோபு 11:17தானி 12:3பிலி 2:152 கொரி 3:182 பேது 1:19மத் 5:14சங் 84:7
அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; யோவா 12:35ஏசா 59:9-10எரே 23:12யோபு 18:5-61 சாமு 2:9எரே 13:16யோவா 11:10யோபு 12:25
தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; நீதி 5:1ஏசா 55:3நீதி 6:20-21நீதி 7:1சங் 78:1சங் 90:12மத் 17:5
என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; நீதி 3:21நீதி 3:3நீதி 7:1-2சங் 40:8நீதி 2:1
அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், நீதி 12:18எரே 33:6நீதி 4:10நீதி 3:8நீதி 4:4
அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், லூக் 6:45மத் 12:34-35மாற் 7:21-23சங் 139:23-24நீதி 13:3எரே 17:9மத் 15:19நீதி 23:19
அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, யாக் 1:26நீதி 8:8நீதி 8:13எபே 4:25-31நீதி 6:121 பேது 2:1யாக் 1:21கொலோ 3:8
உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; சங் 119:37மத் 6:22யோபு 31:1நீதி 23:33நீதி 23:5
உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; எபி 12:13சங் 37:23சங் 119:52 தெச 3:3ஆகா 1:5ஆகா 1:7நீதி 5:21சங் 119:59
உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உபா 5:32யோசு 1:7உபா 28:14நீதி 16:17உபா 12:32ஏசா 1:16ரோம 12:9
உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.