மத்தேயு 6

Matthew 6
அத்தியாயம் 6

தர்மம் செய்யும் முறை

“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. மத் 23:5யோவா 12:43எபி 6:10மத் 23:28-30லூக் 16:15கலா 6:12மத் 6:4-6எசேக் 33:31 ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 6:52 கொரி 9:6-15மத் 6:16யோவா 5:41யாக் 2:15-161 யோவா 3:17-19லூக் 20:461 பேது 4:11 நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. யோவா 7:4மத் 9:30மாற் 1:44மத் 12:19மத் 8:4 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார். மத் 6:18மத் 6:6எரே 17:10லூக் 14:14சங் 44:21மத் 25:34-40எரே 23:24லூக் 8:17

ஜெபம்

அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 6:2லூக் 18:10-11லூக் 18:13மாற் 11:25ஏசா 55:6-7எரே 29:12ஏசா 1:15யாக் 4:6 நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார். 2இராஜா 4:33மத் 14:23ஏசா 65:24அப் 9:40சங் 34:15ஏசா 26:20மத் 6:18மத் 26:36-39 அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். பிரச 5:2-3பிரச 5:71 இராஜா 18:26-29மத் 6:32மத் 26:44தானி 9:18-19மத் 26:42அப் 19:34 அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத் 6:32லூக் 12:30பிலி 4:6யோவா 16:23-27சங் 38:9சங் 69:17-19 நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: வெளி 4:11லூக் 11:1-4ரோம 8:15ஏசா 64:8சங் 111:9எசேக் 36:23மல்கி 1:11ஏசா 57:15

“பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே,

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

உம்முடைய ராஜ்யம் வருவதாக; எபி 10:36மத் 26:42மத் 12:50யோவா 4:341 தெச 5:18யோவா 6:40ரோம 12:2கொலோ 1:9

உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல

பூமியிலேயும் செய்யப்படுவதாக.

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். நீதி 30:8லூக் 11:3மத் 4:4சங் 34:10யோவா 6:31-59சங் 33:18-19யோபு 23:12ஏசா 33:16

எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எபே 4:32மாற் 11:25எபே 1:7மத் 18:21-35கொலோ 3:131 யோவா 1:7-9லூக் 11:4லூக் 6:37

எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.

எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், 1 கொரி 10:13யோவா 17:15மத் 26:41வெளி 7:14-172 தெச 3:3மத் 6:10வெளி 19:1எரே 15:21

தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்,

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்

என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். எபே 4:32மாற் 11:25கொலோ 3:13மத் 7:2யாக் 2:13மத் 18:21-35மத் 6:12நீதி 21:13 மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார். மத் 18:35

உபவாசிக்கும் முறை

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏசா 58:3-5மத் 9:14-15நெகே 1:4தானி 9:3லூக் 18:12சங் 69:10அப் 14:23எஸ்த 4:16 நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. ரூத் 3:3பிரச 9:82 சாமு 12:20தானி 10:2-32 சாமு 14:2 அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார். மத் 6:4மத் 6:62 கொரி 10:182 கொரி 5:91 பேது 2:13கொலோ 3:22-241 பேது 1:7ரோம 2:6

பரலோகத்திலுள்ள சொத்துக்கள்

பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். எபி 13:51 யோவா 2:15-16லூக் 12:21நீதி 23:4-5நீதி 11:4யாக் 5:1-3நீதி 16:161 தீமோ 6:17 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. லூக் 12:33மத் 19:211 தீமோ 6:19யாக் 2:5லூக் 18:22எபி 11:261 தீமோ 6:17வெளி 2:9 உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். கொலோ 3:1-3லூக் 12:342 கொரி 4:18நீதி 4:23ஏசா 33:6எபி 3:12எரே 4:14மத் 12:34 கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். லூக் 11:34-362 கொரி 11:3கொலோ 3:22எபே 6:5அப் 2:46 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்! 1 யோவா 2:11மத் 6:22ஏசா 5:20-21எரே 4:22நீதி 26:121 கொரி 3:18-191 கொரி 1:18-20ஏசா 44:18-20 இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது. 1 யோவா 2:15-16லூக் 16:13யாக் 4:41 தீமோ 6:9-10யோசு 24:15கலா 1:10மத் 4:10ரோம 6:16-22

கவலைப்படாமலிருங்கள்

ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? பிலி 4:6ரோம 8:321 பேது 5:7சங் 55:22லூக் 12:22-31மத் 6:31மத் 6:27-28மாற் 4:19 வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத் 10:29-31சங் 147:9யோபு 38:41லூக் 12:24-32சங் 145:15-16சங் 104:27-28லூக் 12:6-7மத் 6:32 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? லூக் 12:25-26பிரச 3:14மத் 5:36சங் 39:5-61 கொரி 12:18 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; மத் 6:25பிலி 4:6லூக் 12:27லூக் 22:35-36மத் 6:31லூக் 3:11மத் 10:10 என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 2 நாளாக 9:20-222 நாளாக 9:4-61 இராஜா 10:4-71 பேது 3:2-51 தீமோ 2:9-10 விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? லூக் 12:28மத் 14:311 பேது 1:24மத் 16:8மத் 8:26யாக் 1:10-11யோவா 20:27மாற் 4:40 ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள். 1 பேது 5:7லூக் 12:29மத் 4:4சங் 55:22மத் 15:332 நாளாக 25:9சங் 37:3சங் 78:18-31 இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார். மத் 6:8லூக் 12:30எபே 4:17லூக் 11:11-13சங் 17:14மத் 20:25-261 தெச 4:5சங் 103:13 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். லூக் 12:31மத் 5:6யோவா 6:27சங் 34:9-10சங் 84:11-12மாற் 10:29-30ரோம 14:17நீதி 3:9-10 ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். மத் 6:25யோவா 14:27எபி 13:5-6யோவா 16:33லூக் 11:3புலம் 3:23மத் 6:111 இராஜா 17:14-16