சங்கீதங்கள் 39

Psalms 39
சங்கீதம் 39

எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய நீதி 21:23சங் 141:3யாக் 1:26சங் 119:9மீகா 7:5-6சங் 34:13யாக் 3:2-8நீதி 18:21

வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், அப் 4:20மத் 27:12-14ஏசா 53:7சங் 38:13-14யோபு 32:19-20மத் 7:6

நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்;

ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது;

என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; எரே 20:9லூக் 24:32எசேக் 3:14

நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது;

அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், சங் 90:12சங் 103:14சங் 119:84யோபு 14:13

என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.

இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; சங் 144:4சங் 89:47சங் 62:9சங் 90:9-10பிரச 2:11சங் 39:11யாக் 4:14யோபு 14:1-2

என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது;

எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)

நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; லூக் 12:20-21பிரச 2:26யாக் 4:141 கொரி 7:31பிரச 12:13சங் 127:21 பேது 5:7பிரச 2:17-21

வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான்.

யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான்.

இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை. ரோம 15:13சங் 38:15சங் 119:81ஆதி 49:18யோபு 13:15சங் 119:166லூக் 2:25சங் 130:5-6

என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், சங் 44:13சங் 51:14யோவே 2:17மீகா 7:19யோவே 2:19சங் 130:8சங் 25:11சங் 25:18

மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம்.

நீரே இதைச் செய்தீர் என்று நான் யோபு 2:101 சாமு 3:182 சாமு 16:10தானி 4:35யோபு 1:21யோபு 40:4-5லேவி 10:3சங் 38:13

என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.

என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; யோபு 9:34யோபு 13:21சங் 25:16-17சங் 32:4சங் 38:3-41 சாமு 6:5யோபு 40:8

உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.

அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, யோபு 13:28எபி 12:6ஏசா 50:91 கொரி 11:30-32வெளி 3:191 கொரி 5:5சங் 102:10-112 பேது 2:16

அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்;

நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா)

யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, 1 பேது 2:11எபி 11:132இராஜா 20:5லேவி 25:23ஆதி 47:9சங் 116:3சங் 119:191 நாளாக 29:15

என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்;

என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்;

என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல

நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.

நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, யோபு 10:20-21யோபு 14:10-12யோபு 14:5-6யோபு 7:19ஆதி 42:36ஆதி 5:24

தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.