இயேசுவின் பிறப்பு
அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. லூக் 3:1மத் 24:14அப் 25:21மத் 22:17பிலி 4:22அப் 11:28ரோம 1:8அப் 25:11 சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. லூக் 3:1அப் 13:7அப் 18:12அப் 23:26அப் 26:30அப் 5:37மத் 4:24 எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு, மீகா 5:2யோவா 7:421 சாமு 16:1லூக் 1:26-27மத் 2:23லூக் 4:16ரூத் 4:171 சாமு 20:6 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். மத் 1:18-19உபா 22:22-27 அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது. சங் 33:11மீகா 5:2வெளி 12:1-5நீதி 19:21லூக் 1:57 அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள். கலா 4:42 கொரி 8:9ஏசா 53:2-3யோவா 1:14லூக் 2:11-12மத் 1:25மத் 8:20ஏசா 7:14
மேய்ப்பர்களும் தேவதூதர்களும்
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். ஆதி 31:39-40சங் 78:70-711 சாமு 17:34-35யோவா 10:8-12எசேக் 34:8யாத் 3:1-2 அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். ஏசா 60:12 கொரி 3:181 இராஜா 8:11அப் 27:23வெளி 18:1அப் 26:13-14அப் 22:6-9அப் 5:19 தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். ஏசா 40:9ஏசா 61:1ஏசா 52:7ஆதி 12:3மத் 28:18லூக் 1:30மத் 14:27அப் 13:32 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். ஏசா 9:6மத் 1:21அப் 2:36தீத் 3:4-7மத் 16:161 யோவா 5:1யோவா 4:42லூக் 1:43 குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். ஏசா 7:14ஏசா 53:1-2ஏசா 7:11சங் 22:62இராஜா 19:291 சாமு 10:2-71 சாமு 2:342இராஜா 20:8 உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து: வெளி 5:11சங் 103:20-21சங் 148:21 இராஜா 22:19எபி 1:14லூக் 15:10தானி 7:10யோபு 38:7
“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், ரோம 5:1லூக் 19:38லூக் 1:79கொலோ 1:20ஏசா 9:6-7எபி 13:20-21சங் 85:9-12வெளி 5:13
பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, 1 பேது 3:22மத் 2:1-2யாத் 3:3லூக் 24:51மத் 2:9-112இராஜா 2:12இராஜா 2:11யோவா 20:1-10 வேகமாக வந்து, மரியாளையும் யோசேப்பையும், கால்நடைத் தீவனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள். லூக் 19:32லூக் 2:12லூக் 2:7லூக் 22:13லூக் 1:39பிரச 9:10 பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள். லூக் 8:39சங் 66:16லூக் 2:38சங் 71:17-18மல்கி 3:16சங் 16:9-10யோவா 1:41-46யோவா 4:28-29 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். லூக் 1:65-66லூக் 4:36ஏசா 8:18லூக் 2:33லூக் 2:47லூக் 5:9-10 மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். லூக் 2:51லூக் 1:66நீதி 4:41 சாமு 21:12ஆதி 37:11ஓசி 14:9லூக் 9:43-44 மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். சங் 106:48அப் 11:181 நாளாக 29:10-12ஏசா 29:19மத் 9:8சங் 72:17-19அப் 2:46-47லூக் 18:43
இயேசுவின் விருத்தசேதனம்
குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள். ஆதி 17:12லேவி 12:3லூக் 1:31லூக் 1:59கலா 4:4-5மத் 1:21மத் 3:15பிலி 2:8 மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு, லேவி 12:1-8 முதலில் பிறக்கும் ஆண்பிள்ளை கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி குழந்தையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதற்காகவும், யாத் 13:2யாத் 22:29எண் 3:13யாத் 34:19எண் 18:15எண் 8:16-17யாத் 13:12-15 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள். லேவி 12:6-8லேவி 12:22 கொரி 8:9 அப்பொழுது சிமியோன் என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தான்; பரிசுத்த ஆவியானவர் அவனோடுகூட இருந்தார். ஏசா 25:9லூக் 1:6லூக் 2:38தீத் 2:11-14மாற் 15:43லூக் 1:412 பேது 1:21ஆதி 6:9 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காண்பதற்கு முன்பே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவராலே அவனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது. யோவா 8:51எபி 11:5லூக் 9:27அப் 10:38யோவா 20:31சங் 25:14அப் 2:36சங் 89:48-49 சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது, லூக் 2:22அப் 10:19லூக் 2:41லூக் 2:48லூக் 2:51மத் 4:1அப் 11:12அப் 16:7 சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: லூக் 1:64லூக் 2:13-14லூக் 2:20மாற் 9:36லூக் 1:46லூக் 1:68மாற் 10:16சங் 105:1-3
“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி வெளி 14:13ஆதி 15:15ஆதி 46:30பிலி 1:23ஏசா 57:1-2லூக் 2:26சங் 37:37
நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், ஏசா 49:6ஆதி 49:18ஏசா 52:10லூக் 2:10-11லூக் 3:62 சாமு 23:1-5அப் 4:10-12
உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி, ஏசா 42:1-4ஏசா 62:1-2சங் 98:2-3ஏசா 42:10-12ஏசா 45:21-25சங் 96:10-13சங் 97:6-8சங் 96:1-3
அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான். ஏசா 60:1-3ஏசா 49:6அப் 26:23அப் 13:47-48ஏசா 42:6-7ஏசா 9:2வெளி 21:23அப் 28:28
இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். ஏசா 8:18லூக் 1:65-66லூக் 2:48 பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து: இதோ, இந்தக் குழந்தையினாலே, இஸ்ரவேலில் அநேகர் தேவனைவிட்டு விலகுவதற்கும், தேவனிடத்தில் வருவதற்கும், மக்களால் விரோதமாகப் பேசப்படும் அவர்களை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகவும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 1 கொரி 1:231 பேது 2:7-8ஏசா 8:14-15மத் 21:442 கொரி 2:15-16அப் 9:1-20ஓசி 14:91 பேது 4:14 முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான். 1 கொரி 11:19உபா 8:2அப் 8:21-23நியாயாதி 5:15-16யோவா 15:22-24யோவா 19:25லூக் 16:14-15மத் 12:24-35 ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள். சங் 92:14யாத் 15:20ஆதி 30:13அப் 2:18அப் 21:9நியாயாதி 4:41 கொரி 12:12இராஜா 22:14 எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். 1 தீமோ 5:5சங் 23:6அப் 14:23அப் 13:3சங் 27:4அப் 26:7யாத் 38:8லூக் 5:33 அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள். லூக் 2:252 கொரி 9:15லூக் 1:68லூக் 24:21மாற் 15:43எபே 1:3லூக் 1:46-56லூக் 2:28-32 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள். லூக் 2:4உபா 12:32கலா 4:4-5மத் 3:15லூக் 2:21-24லூக் 2:51மத் 2:22-23லூக் 1:6 அந்தப் பிள்ளை வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. லூக் 2:52லூக் 1:80ஏசா 11:1-5யோவா 1:141 சாமு 2:261 சாமு 3:19ஏசா 53:1-2லூக் 2:47
தேவாலயத்தில் சிறுவன் இயேசு
இயேசுவின் பெற்றோர் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள். உபா 12:18உபா 16:1-8யாத் 12:14யாத் 23:14-17யாத் 34:23லேவி 23:5எண் 28:161 சாமு 1:21 இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள். பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது. 2 நாளாக 25:172 நாளாக 30:21-23யாத் 12:15 இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள். ஏசா 2:3சங் 122:1-4சங் 42:4 அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள். ஏசா 49:1-2லூக் 5:17அப் 5:34ஏசா 50:4மத் 12:40மத் 27:63-641 இராஜா 12:51 இராஜா 12:12 இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மத் 7:28லூக் 4:32சங் 119:99யோவா 7:15யோவா 7:46லூக் 4:22மாற் 1:22 இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள். லூக் 2:49மத் 12:46லூக் 3:23லூக் 4:22 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். யோவா 6:38யோவா 8:29மல்கி 3:1சங் 40:8யோவா 4:34லூக் 2:48யோவா 5:17மத் 21:12 ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. லூக் 18:34லூக் 9:45மாற் 9:32 பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். லூக் 2:19தானி 7:28ஆதி 37:11மாற் 6:31 பேது 2:21எபே 5:21எபே 6:1-2மத் 3:15 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார். லூக் 2:40நீதி 3:3-41 சாமு 2:26ரோம 14:18லூக் 1:80அப் 7:9-10