சங்கீதங்கள் 96

Psalms 96
சங்கீதம் 96

யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 நாளாக 16:23-33சங் 98:1சங் 149:1சங் 33:3வெளி 14:3சங் 67:3-6வெளி 5:9சங் 68:32

பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.

யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, மாற் 16:15சங் 71:15சங் 103:1-2சங் 145:1சங் 40:10ஏசா 40:9சங் 72:17-181 நாளாக 29:20

நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.

தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், தானி 4:1-3லூக் 24:47சங் 22:27ஏசா 19:23-25ஏசா 49:6மத் 28:19மீகா 4:2சங் 117:1-2

எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; சங் 145:3எரே 10:6-7சங் 18:3வெளி 15:4சங் 95:3சங் 66:3சங் 89:7சங் 86:10

எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; சங் 115:15ஏசா 42:51 கொரி 8:4எரே 10:11-12சங் 135:18அப் 19:26ஆதி 1:1ஏசா 44:8-28

யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர்.

மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, சங் 63:2-31 நாளாக 16:27சங் 104:1சங் 93:12 பேது 1:16-17எபி 1:3சங் 29:1-2சங் 27:4

வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

மக்களின் வம்சங்களே, வெளி 19:1மத் 6:131 நாளாக 29:11-13வெளி 5:9சங் 22:27வெளி 7:12யூதா 1:24-25சங் 29:1-2

யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்,

கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, சங் 100:4ரோம 12:1யாத் 34:5-9எபி 13:15-16மல்கி 1:11சங் 108:3-5சங் 45:12சங் 72:10

காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.

பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; சங் 29:2சங் 114:7சங் 110:3தானி 11:45சங் 33:8எசேக் 7:20எஸ்றா 7:27லூக் 21:5-6

பூமியில் உள்ளவர்களே,

நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

யெகோவா ராஜரிகம்செய்கிறார், சங் 93:1சங் 67:4சங் 9:8அப் 17:31சங் 98:9மல்கி 1:11சங் 96:13வெளி 19:11

ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்.

அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள்.

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, ஏசா 49:13சங் 69:34சங் 97:1சங் 98:7-9சங் 148:1-4ஏசா 44:23லூக் 15:10லூக் 2:10

கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.

நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; ஏசா 55:12-13ஏசா 35:1ஏசா 42:10-11ஏசா 44:23சங் 65:12-13

அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.

அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; வெளி 19:112 தீமோ 4:8ஏசா 25:8-91 தெச 4:16-18சங் 67:4சங் 96:10சங் 98:9தீத் 2:13

அவர் உலகத்தை நீதியோடும்,

மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.