லூக்கா 12

Luke 12
அத்தியாயம் 12

எச்சரிக்கையும் உற்சாகப்படுத்துதலும்

அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 1 கொரி 5:7-81 பேது 2:1யாக் 3:17மத் 16:6-12மாற் 8:15-211 கொரி 15:3லூக் 12:562இராஜா 7:17 வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. மாற் 4:22லூக் 8:172 கொரி 5:10பிரச 12:14மத் 10:26-331 கொரி 4:5ரோம 2:16வெளி 20:11-12 ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும். மத் 10:27பிரச 10:20மத் 12:36பிரச 10:12-13யோபு 24:14-15யூதா 1:14-15 என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள். மத் 10:28எரே 1:8வெளி 2:10பிலி 1:281 பேது 3:14ஏசா 51:7-13அப் 20:24தானி 3:16-17 நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 2 பேது 2:4மத் 10:28வெளி 14:7சங் 9:17எபி 10:311 தெச 4:6எரே 5:22மத் 25:41 இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை. லூக் 12:24சங் 145:15-16சங் 147:9மத் 10:29சங் 113:5-6சங் 50:10-11லூக் 12:27 உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். மத் 10:30-31மத் 6:26ஏசா 43:3-42 சாமு 14:11லூக் 21:181 சாமு 14:45அப் 27:34சங் 8:6 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார். மத் 10:32-331 யோவா 2:23ரோம 10:9-102 தீமோ 2:12லூக் 15:10வெளி 2:13வெளி 3:4-5வெளி 2:10 மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான். 2 தீமோ 2:12மாற் 8:38லூக் 9:26மத் 10:33மத் 7:23வெளி 3:81 யோவா 2:23மத் 25:12 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. மத் 12:31-321 யோவா 5:161 தீமோ 1:13எபி 6:4-8மாற் 3:28-30எபி 10:26-31லூக் 23:34 அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள். மத் 10:17-20அப் 4:5-7லூக் 12:22லூக் 21:12-14மத் 23:34மாற் 13:9-11அப் 6:9-15அப் 5:27-32 நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். லூக் 21:15மத் 10:20அப் 4:8அப் 6:10யாத் 4:11அப் 7:55அப் 7:2-53அப் 26:1-32

அறிவற்ற செல்வந்தனின் உவமை

அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 1 தீமோ 6:5லூக் 6:45எசேக் 33:31அப் 8:18-19சங் 17:14 அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். ரோம 2:3ரோம 9:20யாத் 2:14யோவா 6:15ரோம 2:1யோவா 18:35-36யோவா 8:11லூக் 5:20 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். எபி 13:51 தீமோ 6:6-10சங் 119:36-37நீதி 15:16நீதி 16:16மத் 6:25-26பிரச 5:10-16லூக் 16:14 அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. ஆதி 26:12-14ஆதி 41:47-49ஓசி 2:8யோபு 12:6மத் 5:45சங் 73:12சங் 73:3அப் 14:17 அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; மத் 5:42ஏசா 58:72 கொரி 9:6-15ரோம 12:131 யோவா 3:16அப் 16:30லூக் 11:41லூக் 16:9 நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, யாக் 3:15யாக் 4:15லூக் 12:21லூக் 18:6சங் 17:14லூக் 18:4 பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். நீதி 27:1யாக் 4:13-151 கொரி 15:32மத் 6:19-21பிரச 11:9ஏசா 5:11பிலி 3:19யாக் 5:5 தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார். யோபு 27:8எரே 17:111 தீமோ 6:7சங் 39:6யாக் 4:14யோபு 27:16-17சங் 49:17-19லூக் 16:22-23 தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். மத் 6:19-20லூக் 12:33யாக் 2:5யாக் 5:1-31 தீமோ 6:18-19வெளி 2:9ஆப 2:9ஓசி 10:1

கவலைப்படாமலிருங்கள்

பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பிலி 4:6மத் 6:25-34எபி 13:51 கொரி 7:32லூக் 12:29 உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது. யோபு 2:6நீதி 13:8யோபு 2:4அப் 27:18-19யோபு 1:12ஆதி 19:17அப் 27:38 காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். லூக் 12:7மத் 10:31சங் 147:9யோபு 38:41சங் 145:15-16யோபு 35:111 இராஜா 17:1-6லூக் 12:30-32 கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மத் 6:27மத் 5:36லூக் 19:3 மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? 1 பேது 5:7பிரச 7:13சங் 39:6லூக் 12:29 காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 6:28-30லூக் 12:241 இராஜா 10:1-132 நாளாக 9:1-12யாக் 1:10-11 இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஏசா 40:6மத் 14:311 பேது 1:24மத் 17:20மத் 6:30மத் 16:8மத் 17:17லூக் 8:25 ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். லூக் 12:22லூக் 22:35மத் 6:31லூக் 10:7-8 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார். மத் 6:32மத் 6:8எபே 4:17லூக் 12:321 பேது 4:2-41 தெச 4:5மத் 18:14மத் 10:20 தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத் 6:33எபி 13:5சங் 34:91 இராஜா 3:11-13யோவா 6:271 தீமோ 4:8சங் 84:11சங் 37:25 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார். எபி 12:281 பேது 1:3-5வெளி 1:6பிலி 2:13லூக் 10:21மத் 25:34ஏசா 40:11ரோம 8:28-32 உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை. மத் 19:21அப் 2:45அப் 4:34-35லூக் 18:22மத் 6:19-21லூக் 16:9லூக் 12:211 தீமோ 6:17-19 உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். மத் 6:21கொலோ 3:1-3பிலி 3:20

விழித்திருங்கள்

உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும், 1 பேது 1:13எபே 6:14மத் 25:4-10ஏசா 5:27மத் 25:1மத் 5:16ஏசா 11:5பிலி 2:15 தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள். யூதா 1:20-21யாக் 5:7-8புலம் 3:25-26வெளி 3:20ஏசா 64:4மத் 25:1-13மாற் 13:34-37லூக் 2:25-30 எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 2 பேது 3:14மத் 24:42யோவா 13:4-51 கொரி 2:9யோவா 12:26மத் 24:45-472 பேது 1:11லூக் 12:43 அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள். 1 தெச 5:4-5மத் 25:6 திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். 2 பேது 3:10வெளி 3:3வெளி 16:15மத் 24:43-441 தெச 5:2-3மத் 6:19 அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார். 1 தெச 5:6மத் 25:13மத் 24:44ரோம 13:112 பேது 3:12-14வெளி 19:7மத் 24:42மாற் 13:33-36 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். மாற் 13:371 பேது 4:7மாற் 14:371 பேது 5:8 அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்? மத் 24:45-461 கொரி 4:1-21 பேது 4:101 பேது 5:1-4எபி 13:172 தீமோ 4:2அப் 20:28லூக் 19:15-19 எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 22:29-30தானி 12:2-3லூக் 19:17-19மத் 24:47வெளி 3:18 அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால், மத் 24:48-50எசேக் 34:8எரே 20:2வெளி 18:7-81 தெச 5:72 கொரி 11:202 பேது 2:132 பேது 2:19 அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான். லூக் 12:40வெளி 16:15மத் 24:51சங் 11:5லூக் 12:19-20மத் 13:41-42மத் 13:49-50சங் 37:9 தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். யாக் 4:17யோவா 9:41யோவா 12:48யோவா 15:22-24உபா 25:2-3அப் 17:30எண் 15:30-312 கொரி 2:15-16 அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள். யாக் 3:1லேவி 5:17லூக் 16:10-12மத் 25:14-29யோவா 15:22மத் 13:121 தீமோ 1:13ரோம 2:12-16

சமாதானமல்ல பிரிவினையே

பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன். மல்கி 4:1மல்கி 3:2-3மத் 3:10-12லூக் 12:51-52ஏசா 11:4யோவே 2:30-31யோவா 9:4யோவா 12:17-19 ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். யோவா 12:27-28யோவா 19:30யோவா 4:34யோவா 7:6-8மாற் 10:32-38மத் 20:17-22சங் 40:8அப் 20:22 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 10:34-36லூக் 12:49மத் 24:7-10சகரி 11:10-11சகரி 11:14சகரி 11:7-8 எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். அப் 14:1-4யோவா 15:18-21மீகா 7:5-6அப் 28:24யோவா 10:19-21யோவா 16:2யோவா 9:16அப் 13:43-46 தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார். மீகா 7:6மத் 10:21-22மத் 24:10சகரி 13:2-6

காலங்களை நிதானித்தல்

பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும். 1 இராஜா 18:44-45மத் 16:2-4 தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும். மத் 20:12யோபு 37:17 மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன? மத் 16:3மத் 24:32-33மத் 11:251 நாளாக 12:32லூக் 19:42-44தானி 9:24-26கலா 4:4மல்கி 4:2 நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன? யோவா 7:24உபா 32:291 கொரி 11:14அப் 13:26-38அப் 2:40லூக் 21:30மத் 21:32மத் 21:21 உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான். மத் 5:23-26ஏசா 55:6யோபு 23:7லூக் 13:24-28நீதி 25:8-91 சாமு 25:18-352 கொரி 6:2ஆதி 32:3-28 நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மாற் 12:42மத் 18:342 தெச 1:3மத் 25:41மத் 25:46லூக் 16:26