இஸ்ரவேலின் தனிமை
லீபனோனே, நெருப்பு உன் கேதுருமரங்களை அழிக்க உன் வாசல்களைத் திற. எரே 22:23எரே 22:6-7லூக் 21:23-24உபா 32:22ஆப 2:17ஆப 2:8ஆகா 1:8லூக் 19:41-44 தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது. லூக் 23:31ஆமோ 6:1எசேக் 20:46எசேக் 31:17எசேக் 31:2-3ஏசா 10:33-34ஏசா 2:12-17ஏசா 32:15-19 மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனதினால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனதினால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கிறது. எரே 50:44எரே 25:34-361 சாமு 4:21-22அப் 22:21-22அப் 6:11-14அப் 7:52ஆமோ 8:8எசேக் 19:3-6 என் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், கொலைசெய்யப்படுகிற ஆடுகளை மேய்க்கவேண்டும். சகரி 11:7மத் 23:37ரோம 15:8எபே 1:3எசேக் 34:23-24ஏசா 40:9-11ஏசா 49:4-5யோவா 20:17 அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று நினைக்கிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் ஆனோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை. எரே 50:71 தீமோ 6:5-10ஓசி 12:82இராஜா 4:12 பேது 2:3உபா 29:19-21எசேக் 22:25-27எசேக் 34:10 நான் இனி தேசத்து மக்கள்மேல் இரக்கம் வைக்காமல் மனிதர்களில் அனைவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கைகளிலும் அகப்படச்செய்வேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று யெகோவா சொல்லுகிறார். எரே 13:14எபி 10:26-31ஏசா 9:19-21மத் 22:7மீகா 5:8சங் 50:221 தெச 2:16தானி 9:26-27 கொலை செய்யப்படுகிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு தண்டனை என்றும் பெயரிட்டு மந்தையை மேய்த்து, ஏசா 11:4சகரி 11:14சகரி 11:4எசேக் 37:16-23எபே 2:13-16ஏசா 61:1சங் 23:4சகரி 11:10-11 ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பர்களையும் அழித்தேன்; என் ஆத்துமா அவர்களை வெறுத்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது. யோவா 15:18யோவா 7:7ஏசா 49:7மத் 23:34-36ஓசி 5:7யோவா 15:23-25லூக் 19:14உபா 32:19 இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று சாப்பிடவேண்டும் என்று நான் சொல்லி, எரே 43:11மத் 13:10-11வெளி 22:11அப் 13:46-47அப் 28:26-28உபா 28:53-56எசேக் 5:10ஏசா 9:19-21 அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த மக்கள் அனைவருடனும் செய்திருந்த என் உடன்படிக்கை முறிந்துபோகும்படி அதை அழித்துப்போட்டேன். சகரி 11:7சங் 89:39எபி 8:8-13எரே 14:21எரே 31:31-321 சாமு 2:30எபி 7:17-22லூக் 21:5-6 அந்நாளிலே அது இல்லாமல்போனது; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது யெகோவாவுடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன. ஏசா 40:31யாக் 2:5-6புலம் 3:25-26செப்ப 3:12அப் 1:21-22உபா 28:49-68உபா 31:21உபா 31:29 உங்கள் பார்வைக்கு நல்லது என்று கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களுடன் சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்தார்கள். மத் 26:15யாத் 21:32லூக் 22:3-6மாற் 14:10-11யோவா 13:27-30ஆதி 37:281 இராஜா 21:2யோவா 13:2 யெகோவா என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று யெகோவாவுடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். மத் 27:3-10அப் 1:18-19ஏசா 53:2-3அப் 4:11ஏசா 54:7-10மத் 27:12 நான் யூதாவிற்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர ஐக்கியத்தை இல்லாமல் போகச்செய்ய தண்டனை என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் உடைத்தேன். ஏசா 9:21யாக் 3:16அப் 23:7-10எசேக் 37:16-20கலா 5:15ஏசா 11:13யாக் 3:14யாக் 4:1-3 யெகோவா என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள். எசேக் 13:3ஏசா 6:10-12எரே 2:26-27புலம் 2:14லூக் 11:40மத் 15:14மத் 23:17 இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பச்செய்வேன்; அவன் அழிக்கிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறிப்போனதைத் தேடாமலும், காயப்பட்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய பாதங்களை உடைத்துப்போடுவான். எசேக் 34:2-6எரே 23:2யோவா 10:1யோவா 10:12-13லூக் 12:45-46மத் 23:13-291 சாமு 17:34-35எசேக் 34:10 மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ, பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார். எரே 23:1எசேக் 13:31 கொரி 8:4எசேக் 34:2ஏசா 42:19-20மத் 23:161 கொரி 10:19-20ஆமோ 8:9-10