நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. யோவா 1:12கலா 3:262 கொரி 6:18கலா 4:5-6யோவா 3:16யோவா 17:25சங் 36:7-91 யோவா 4:9-10 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். பிலி 3:21கொலோ 3:41 கொரி 13:122 கொரி 3:18சங் 17:15ரோம 8:291 கொரி 15:49வெளி 22:4 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். 2 கொரி 7:11 யோவா 2:62 பேது 3:14மத் 5:48எபி 12:14எபி 7:26அப் 15:9கொலோ 1:5 பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். 1 யோவா 5:17ரோம 3:20ரோம 4:15எண் 15:311 யோவா 3:8-92 கொரி 12:21தானி 9:11யாக் 2:9-11 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவம் இல்லை. 2 கொரி 5:21எபி 9:281 பேது 2:241 பேது 3:18எபி 9:26யோவா 1:291 யோவா 1:71 யோவா 4:9-14 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை. 3 யோவா 1:111 யோவா 2:41 யோவா 3:91 யோவா 4:8யோவா 15:4-71 யோவா 5:181 யோவா 3:21 யோவா 2:28 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான். 1 யோவா 2:291 பேது 1:15-16ரோம 2:131 யோவா 3:31 யோவா 2:11 யோவா 2:26அப் 10:35சங் 45:7 பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். எபி 2:14யோவா 8:44கொலோ 2:15யோவா 12:31யோவா 16:11ரோம 16:202 பேது 2:4எபே 2:2 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான். 1 யோவா 5:181 பேது 1:23யோவா 1:131 யோவா 5:11 யோவா 2:29மத் 7:18யோவா 3:31 யோவா 5:4 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை. 1 யோவா 4:83 யோவா 1:111 யோவா 4:21யோவா 8:44லூக் 6:35மத் 13:381 யோவா 3:7-8யோவா 8:47
ஒருவரையொருவர் நேசியுங்கள்
நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது. யோவா 15:122 யோவா 1:51 யோவா 4:71 யோவா 4:211 பேது 3:8யோவா 13:34-35எபே 5:21 பேது 4:8 சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே. எபி 11:4ஆதி 4:4-15நீதி 29:27ஆதி 4:25யூதா 1:11லூக் 11:51நீதி 29:10சங் 37:12 என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள். யோவா 15:18-19யோவா 17:14லூக் 21:172 தீமோ 3:12யாக் 4:4லூக் 6:22மாற் 13:13பிரச 5:8 நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான். 1 யோவா 5:2யோவா 13:35யோவா 5:241 யோவா 4:20-211 தெச 4:91 யோவா 4:7-81 பேது 1:22எபி 13:1 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். மத் 5:21-22நீதி 26:24-26வெளி 21:8யோவா 8:44லேவி 19:16-18அப் 23:14யாக் 4:1-2அப் 23:12 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். 1 யோவா 4:9-11எபே 5:2யோவா 13:34யோவா 3:16ரோம 5:8யோவா 15:12-13வெளி 1:51 பேது 3:18 ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? எபி 13:16ஏசா 58:7-101 யோவா 4:20உபா 15:7-11நீதி 19:17லூக் 3:112 கொரி 9:5-9யாக் 2:15 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம். யாக் 2:15-16ரோம 12:91 பேது 1:22கலா 5:131 கொரி 13:4-7கலா 6:1-2எபே 4:1-3மத் 25:41-45 இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். எபி 10:221 யோவா 3:21ஏசா 32:17எபி 6:10-11யோவா 18:371 யோவா 1:82 தீமோ 1:12யோவா 13:35 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். சங் 139:1-4எரே 17:10எபி 4:131 கொரி 4:41 யோவா 4:4எரே 23:24யோவா 10:29-30சங் 44:20-21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து, 1 யோவா 2:28எபி 4:162 கொரி 1:12சங் 101:2சங் 7:3-51 யோவா 5:141 யோவா 4:17எபி 10:22 அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். யோவா 15:7யோவா 9:311 யோவா 5:14மத் 21:22மாற் 11:24யோவா 16:23-24சங் 34:4யோவா 14:13 நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது. யோவா 6:29யோவா 13:341 பேது 1:22யோவா 15:121 பேது 4:81 யோவா 3:111 யோவா 4:211 தெச 4:9 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம். 1 கொரி 3:161 யோவா 4:15-161 யோவா 4:12-131 கொரி 6:192 தீமோ 1:141 யோவா 2:6யோவா 14:21-23ரோம 8:9-17