யோவான் 17

John 17
அத்தியாயம் 17

இயேசு தமக்காக ஜெபித்தல்

இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து: யோவா 13:31-32யோவா 17:4-5பிலி 2:9-11யோவா 12:23யோவா 12:27-28அப் 3:13யோவா 7:391 பேது 1:21 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். யோவா 10:28-29யோவா 6:39தானி 7:14யோவா 6:37மத் 28:18யோவா 17:241 யோவா 5:20எபி 2:8-9 ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 1 யோவா 5:201 யோவா 5:11-12எரே 9:23-24யோவா 3:17யோவா 17:25ஓசி 6:3யோவா 14:9-10எபி 8:11-12 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன். யோவா 4:34அப் 20:242 தீமோ 4:7யோவா 14:31யோவா 19:30யோவா 13:31-32யோவா 15:10யோவா 12:28 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். யோவா 1:1-3கொலோ 1:15-17யோவா 10:301 பேது 1:20பிலி 2:6எபி 1:3வெளி 5:9-14எபி 1:10

இயேசு தம்முடைய சீடர்களுக்காக ஜெபித்தல்

நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள். யோவா 17:261 யோவா 5:20யோவா 14:21-24யோவா 10:27-29யோவா 17:24யோவா 6:37யாத் 3:13-15யாத் 34:5-7 நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். யோவா 7:16-17யோவா 16:15யோவா 10:29-30யோவா 17:10யோவா 8:28யோவா 12:49-50யோவா 14:7-10யோவா 14:20 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். யோவா 17:14யோவா 15:15யோவா 16:301 தெச 2:13யோவா 16:27யோவா 12:49யோவா 17:21யோவா 8:42 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே. எபி 9:24யோவா 17:2யோவா 17:6லூக் 22:321 யோவா 2:1-21 யோவா 5:19யோவா 17:20யோவா 14:16 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். யோவா 10:301 பேது 2:9வெளி 5:8-142 தெச 1:101 கொரி 3:21-23கொலோ 1:15-19யோவா 16:14-15கொலோ 2:9 நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். மத் 6:9நீதி 18:10யோவா 17:12-18எபி 9:24யோவா 10:29-30யோவா 17:21-22எபே 4:4பிலி 2:9 நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. சங் 109:6-19யோவா 10:27-28யோவா 18:9யோவா 13:18அப் 1:16-20யோவா 6:37யோவா 6:70-71அப் 1:25 இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன். எபி 12:2கலா 5:22யோவா 15:11யோவா 3:29யோவா 16:22-241 யோவா 1:4யோவா 13:3யோவா 16:33 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. யோவா 17:16யோவா 15:18-211 யோவா 5:19-20யோவா 8:231 யோவா 4:5-6யோவா 7:7நீதி 29:271 பேது 4:4-5 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். சங் 121:71 யோவா 5:182 தெச 3:3மத் 6:131 நாளாக 4:10கலா 1:4லூக் 11:4ஏசா 38:18-19 நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை. யோவா 17:14 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். யோவா 15:3சங் 119:160எபே 5:261 பேது 1:22-23யோவா 17:19யாக் 1:21யோவா 8:322 தெச 2:13 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். 2 கொரி 5:20யோவா 20:21யோவா 17:3எபே 3:7யோவா 4:38மத் 10:5ஏசா 61:1-3யோவா 17:21 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். தீத் 2:14எபி 2:11யோவா 17:171 கொரி 1:2எபி 10:5-101 தெச 4:72 கொரி 4:152 கொரி 8:9

இயேசு எல்லா விசுவாசிகளுக்காகவும்ஜெபித்தல்

நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன். யோவா 17:6-11அப் 2:41அப் 4:4ரோம 15:18-19எபே 4:11ரோம 16:262 தீமோ 1:2 அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 1 கொரி 12:12கொலோ 3:11-14யோவா 17:111 கொரி 12:25-27பிலி 1:27யோவா 13:35யோவா 10:30யோவா 17:22-23 நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 2 கொரி 3:18யோவா 14:20எபே 2:20யோவா 1:16மாற் 16:17-201 யோவா 3:242 கொரி 5:202 கொரி 6:1 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். யோவா 17:21யோவா 16:271 யோவா 3:1யோவா 13:351 யோவா 4:12-16கொலோ 3:14யோவா 17:261 யோவா 1:3 பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன். யோவா 12:26யோவா 17:5யோவா 14:32 கொரி 4:6மத் 25:211 யோவா 3:2ஆதி 45:132 கொரி 3:18 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். யோவா 17:11யோவா 15:21யோவா 16:27யோவா 17:8யோவா 7:29எபி 8:112 கொரி 4:4யோவா 10:15 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். யோவா 17:23யோவா 17:6யோவா 15:91 யோவா 4:13-14எபி 2:12யோவா 14:20யோவா 15:15சங் 22:22