புதிய உடன்படிக்கையின் பிரதான ஆசாரியன்
மேலே சொல்லியவைகளின் முக்கியமான பொருள் என்னவென்றால்; பரலோகத்தில் உள்ள மகத்துவமான சிங்காசனத்தின் வலதுபக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாக, எபி 1:3கொலோ 3:1வெளி 3:21எபி 12:2எபி 7:26-28எபி 2:171 நாளாக 29:11எபி 10:12 பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்ல, கர்த்தரால் நிறுவப்பட்ட உண்மையான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியம் செய்கிறவருமாக இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு. யாத் 33:72 கொரி 5:1ரோம 15:8எபி 9:23-24கொலோ 2:11யாத் 28:1யாத் 28:35எபி 10:21 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக நியமிக்கப்படுகிறான்; ஆகவே, செலுத்துவதற்கு எதாவது ஒன்று இவருக்கும் அவசியமாக இருக்கிறது. எபே 5:2எபி 5:1எபி 9:14எபி 10:9-12எபி 7:27தீத் 2:14யோவா 6:51 பூமியிலே கிறிஸ்து இருப்பாரானால் ஆசாரியராக இருக்கமாட்டார்; ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே; எபி 7:11-15எபி 5:12 நாளாக 26:18-19எண் 16:40எண் 17:12-13எண் 18:5எபி 11:4 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்தில் இருப்பவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தைக் கட்டப் போகும்போது: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாக இரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். யாத் 25:40கொலோ 2:17எபி 10:1யாத் 26:301 நாளாக 28:19யாத் 27:81 நாளாக 28:12எபி 9:23-24 கிறிஸ்துவானவர் விசேஷித்த வாக்குத்தத்தங்களினால் நிறுவிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராக இருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். எபி 7:22கலா 3:16-21எபி 12:242 பேது 1:4லூக் 22:202 கொரி 3:6-11ரோம 9:4தீத் 1:2 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால், இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே. எபி 7:11கலா 3:21எபி 7:18எபி 8:6 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களைப் பார்த்து: இதோ, கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது. எரே 31:31-34எபி 10:16-17எபி 12:24எரே 32:40எபி 9:15எசேக் 37:262 கொரி 3:61 கொரி 11:25 அவர்களுடைய முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவர நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு செய்த உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைத்து நிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரே 31:32கலா 4:24மாற் 8:232இராஜா 17:15-18அப் 13:11அப் 9:8ஆமோ 5:22உபா 29:1 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடு செய்யும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள். எசேக் 36:26-28எரே 31:332 கொரி 3:3எசேக் 11:19-20எபி 10:16-17உபா 30:6எரே 24:71 பேது 2:9 அப்பொழுது சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும் எல்லோரும் என்னை அறிவார்கள்; ஆகவே, கர்த்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டியது இல்லை. எரே 31:34ஏசா 54:13யோவா 6:451 யோவா 2:27எரே 24:71 யோவா 5:201 நாளாக 28:9அப் 8:10 ஏனென்றால், நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாக மன்னித்து, அவர்கள் பாவங்களையும், அக்கிரமங்களையும் இனி நினைக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசா 43:25எபி 10:16-17ரோம 11:27மீகா 7:191 யோவா 1:7-9அப் 13:38-39எரே 33:8எபே 1:7 புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது. 2 கொரி 5:17எபி 7:18-19எபி 7:11-12எபி 9:15எபி 9:9-101 கொரி 13:8ஏசா 51:6மத் 24:35