இஸ்ரவேல் தலைவர்களின் நியாயத்தீர்ப்பு
பின்பு தேவ ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு முகமாக இருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து ஆண்கள் இருந்தார்கள்; அவர்களின் நடுவே மக்களின் பிரபுக்களாகிய அசூரின் மகனாகிய யசனியாவையும், பெனாயாவின் மகனாகிய பெலத்தியாவையும் கண்டேன். எசேக் 11:13எசேக் 11:24எசேக் 3:12எசேக் 3:14எசேக் 8:16எசேக் 8:31 இராஜா 18:122 கொரி 12:1-4 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள். ஏசா 30:1எரே 5:5சங் 2:1-2சங் 52:2ஏசா 59:4எஸ்த 8:3எரே 18:18மீகா 2:1-2 இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள். எசேக் 12:22எசேக் 12:272 பேது 3:4ஆமோ 6:5எசேக் 11:7-11எசேக் 24:3-14எசேக் 7:7ஏசா 5:19 ஆகையால் அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம்சொல்லு, மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம்சொல்லு என்றார். எசேக் 20:46-47எசேக் 21:2எசேக் 25:2எசேக் 3:17-21எசேக் 3:2-15ஓசி 6:5ஓசி 8:1ஏசா 58:1 அப்பொழுது யெகோவாவுடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்களே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்களுடைய மனதில் எழும்புகிறதை நான் அறிவேன். எரே 17:10எசேக் 2:2எரே 16:17வெளி 2:231 நாளாக 28:91 சாமு 10:101 சாமு 10:6எசேக் 2:4-5 இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பினீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 7:23எசேக் 22:12எசேக் 22:2-6எசேக் 22:27ஏசா 1:15ஓசி 4:2-3மீகா 3:2-32இராஜா 21:16 ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 24:3-13மீகா 3:2-32இராஜா 25:18-22எரே 52:24-27எசேக் 3:9-11 பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள், வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். நீதி 10:24ஏசா 24:17-18ஏசா 66:4யோபு 3:251 தெச 2:15-16ஆமோ 9:1-4ஏசா 30:16-17எரே 38:19-23 நான் உங்களை அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன். எசேக் 5:8உபா 28:36சங் 106:41உபா 28:49-50எசேக் 16:412இராஜா 24:4பிரச 8:11எசேக் 16:38 பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 2இராஜா 14:252இராஜா 25:19-21எசேக் 6:7எரே 39:6எரே 52:9-101 இராஜா 8:65எசேக் 13:14எசேக் 13:21 இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன். எசேக் 11:3எசேக் 11:7-10 என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். எசேக் 8:10எசேக் 8:14எசேக் 8:16சங் 106:35-391 இராஜா 11:332 நாளாக 13:92 நாளாக 28:32 நாளாக 33:2-9 நான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, பெனாயாவின் மகனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாக: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களை முற்றிலும் அழித்துப்போடுவீரோ என்று முறையிட்டேன். எசேக் 11:1எசேக் 9:8அப் 5:51 நாளாக 21:16-171 இராஜா 13:4அப் 13:11அப் 5:10ஆமோ 7:2 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீங்கள் யெகோவாவைவிட்டுத் தூரமாகப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன்னுடைய சகோதரர்களுக்கும், உன்னுடைய குடும்பத்தாருக்கும், உன்னுடைய சொந்த மக்களுக்கும், இஸ்ரவேலர்கள் அனைவருக்கும், எருசலேமின் வாழ்கிறவர்கள் சொல்லுகிறார்கள். எசேக் 33:24ஏசா 65:5ஏசா 66:5எரே 24:1-5யோவா 16:2
வாக்குத்தத்தம் இஸ்ரேலுக்குத் திரும்புதல்
ஆகையால் நான் அவர்களைத் தூரமாக அந்நியஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்திற்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல். ஏசா 8:14உபா 30:3-4சங் 90:1சங் 91:1எரே 30:11எரே 31:10லேவி 26:44நீதி 18:10 ஆதலால் நான் உங்களை மக்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு. எசேக் 28:25எசேக் 34:13எரே 3:18எசேக் 36:24ஏசா 11:11-16எரே 24:5ஆமோ 9:14-15எசேக் 20:41 அவர்கள் அங்கே வந்து, அதில் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாக இருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். எசேக் 37:23எசேக் 5:11எசேக் 42:7-8எசேக் 7:20கொலோ 3:5-8எசேக் 11:21ஓசி 14:8ஏசா 1:25-27 அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். எசேக் 36:26-27எரே 31:33சங் 51:10எரே 32:39-40எரே 24:72 கொரி 3:3உபா 30:6எசேக் 18:31 அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன். எசேக் 14:11சங் 105:45எரே 30:22தீத் 2:11-12எரே 31:33லூக் 1:6சங் 119:4-51 கொரி 11:2 ஆனாலும் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்களுடைய இருதயத்தின் ஆசையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். பிரச 11:9எசேக் 9:10எசேக் 11:18எசேக் 22:31யாக் 1:14-15எரே 1:16எசேக் 16:43எசேக் 20:31 அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. எசேக் 10:19எசேக் 1:19-20 யெகோவாவுடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது. சகரி 14:4எசேக் 8:4எசேக் 10:4எசேக் 43:2எசேக் 10:18எசேக் 43:4எசேக் 9:3மத் 23:37 பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய்விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுக்கப்பட்டுப்போனது. எசேக் 11:1எசேக் 3:12எசேக் 8:3அப் 10:16எசேக் 1:32 கொரி 12:2-42இராஜா 2:16எசேக் 3:15 யெகோவா எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பில் இருந்தவர்களுக்குச் சொன்னேன். எசேக் 3:4எசேக் 3:17எசேக் 3:27எசேக் 2:7