இஸ்ரவேலை எச்சரித்தல்
பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ காண்கிறதை சாப்பிடு; இந்தச் சுருளை நீ சாப்பிட்டு, இஸ்ரவேல் மக்களிடம் போய் அவர்களுடன் பேசு என்றார். வெளி 10:9-10எசேக் 3:17-21எசேக் 2:8-91 தீமோ 4:15எசேக் 3:15எரே 24:1-7எசேக் 2:3எசேக் 3:10-11 அப்படியே என்னுடைய வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு சாப்பிடக்கொடுத்து: எரே 25:17அப் 26:19 மனிதகுமாரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன்னுடைய வயிற்றிற்கு உட்கொண்டு, அதினால் உன்னுடைய குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதை சாப்பிட்டேன்; அது என்னுடைய வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாக இருந்தது. எரே 15:16வெளி 10:9-10சங் 119:103சங் 19:10கொலோ 3:16நீதி 2:10-11சங் 119:11சங் 119:97 பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ போய், இஸ்ரவேல் மக்களிடம் போய், என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு அவர்களுடன் பேசு. அப் 1:8மத் 15:24எசேக் 2:3எசேக் 2:7எசேக் 3:11மத் 10:5-6 புரியாத பேச்சும், கடினமான மொழியுமுள்ள மக்கள் அருகில் அல்ல, இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். யோனா 1:2ஏசா 33:19அப் 26:17-18எசேக் 3:6ஏசா 28:11யோனா 3:2-4சங் 81:5 புரியாத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான மொழியுமுள்ள திரளான மக்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உன்னுடைய பேச்சை கேட்பார்களோ? யோனா 3:5-10லூக் 11:30-32மத் 11:20-24மத் 12:41-42ரோம 9:30-33அப் 27:28 இஸ்ரவேல் மக்களோவெனில், உன்னுடைய பேச்சை கேட்கமாட்டார்கள்; என்னுடைய பேச்சையே கேட்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள். லூக் 10:161 சாமு 8:7எசேக் 2:4யோவா 15:20-24எசேக் 24:7ஏசா 3:9எரே 25:3-4எரே 3:3 இதோ, உன்னுடைய முகத்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவும், உன்னுடைய நெற்றியை அவர்களுடைய நெற்றிக்கு முன்பாகவும் கடினமாக்கினேன். எரே 1:18அப் 7:51-561 இராஜா 21:20யாத் 11:4-8யாத் 4:15-16எபி 11:27எபி 11:32-37ஏசா 50:7 உன்னுடைய நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன், கன்மலையைவிட கடினமாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்களுடைய முகங்களுக்கு கலங்காமலும் இரு என்றார். எசேக் 2:6எரே 1:8ஏசா 41:10ஏசா 50:7சகரி 7:121 தீமோ 2:3ஏசா 41:14எரே 17:18 பின்னும் அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நான் உன்னுடனே சொல்லும் என்னுடைய வார்த்தைகளையெல்லாம் நீ உன்னுடைய காதாலே கேட்டு, உன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, யோபு 22:22சங் 119:11லூக் 8:15எசேக் 2:8எசேக் 3:1-31 தெச 2:131 தெச 4:1நீதி 19:20 நீ போய், சிறைப்பட்ட உன்னுடைய மக்களிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களுடன் சொல் என்றார். எசேக் 2:7எசேக் 2:5எசேக் 3:27எசேக் 33:2எசேக் 33:12எசேக் 33:17எசேக் 33:30அப் 20:26-27 அப்பொழுது தேவனுடைய ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; யெகோவாவுடைய இடத்திலிருந்து வெளிப்பட்ட அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன். அப் 8:39எசேக் 8:3அப் 2:2எசேக் 11:11 இராஜா 18:12எசேக் 3:141 சாமு 4:21-222இராஜா 2:16 ஒன்றோடொன்று இணைந்திருக்கிற உயிர்களுடைய இறக்கைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன். எசேக் 1:24எசேக் 10:16-17எசேக் 10:52 சாமு 5:24எசேக் 1:15 தேவனுடைய ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என்னுடைய ஆவியின் கடுங்கோபத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் யெகோவாவுடைய கரம் என்மேல் பலமாக இருந்தது. 2இராஜா 3:15எசேக் 37:1எரே 20:7-9எசேக் 8:32இராஜா 2:16எசேக் 1:3எசேக் 3:121 இராஜா 18:46 கேபார் நதியின் அருகிலே தெலாபீபிலே தங்கியிருக்கிற சிறைப்பட்டவர்களிடத்திற்கு நான் வந்து, அவர்கள் வாழ்கிற இடத்திலே வாழ்ந்து, ஏழுநாட்கள் அவர்களின் நடுவிலே பிரமித்தவனாகத் தங்கினேன். யோபு 2:13சங் 137:1எசேக் 1:1ஆதி 50:10எசேக் 10:15ஆப 3:16எரே 23:9எசேக் 3:23 ஏழுநாட்கள் முடிந்தபின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரே 42:7 மனிதகுமாரனே, உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயராலே அவர்களை எச்சரிப்பாயாக. 2 நாளாக 19:10எபி 13:17ஏசா 52:8கொலோ 1:28ஏசா 62:6எரே 6:171 கொரி 4:141 தெச 5:14 இறக்கவே இறப்பாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கமான வழியில் இல்லாதபடி எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடு காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே இறப்பான்; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னிடம் கேட்பேன். எசேக் 33:6யாக் 5:19-20எசேக் 3:20அப் 20:26-27எசேக் 33:8-10லூக் 13:51 தீமோ 4:16அப் 2:40 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன்னுடைய துன்மார்க்கத்தையும் தன்னுடைய ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமல்போனால், அவன் தன்னுடைய துன்மார்க்கத்திலே மரிப்பான்; நீயோவென்றால் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றுவாய். எசேக் 33:91 தீமோ 4:16எசேக் 14:202 தெச 1:8-9எசேக் 14:14எபி 12:25அப் 20:26எபி 10:26-27 அப்படியே, நீதிமான் தன்னுடைய நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் மரிப்பான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன்னுடைய பாவத்திலே மரிப்பான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னுடைய கையிலே கேட்பேன். எசேக் 18:24எசேக் 18:26எசேக் 33:12-13எசேக் 3:18எபி 10:38ரோம 2:7-82 பேது 2:18-22சங் 125:5 நீதிமான் பாவம் செய்யாதபடி நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவம்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றினாய் என்றார். 1 தீமோ 4:161 கொரி 4:14யாக் 5:20நீதி 9:9தீத் 2:151 யோவா 3:6-9அப் 20:31எசேக் 3:19-20 அந்த இடத்திலே யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து சமவெளிக்கு புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடன் பேசுவேன் என்றார். அப் 9:6எசேக் 1:3எசேக் 37:1எசேக் 8:4எசேக் 3:14 அப்படியே நான் எழுந்திருந்து, சமவெளிக்கு புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியின் அருகிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே யெகோவாவுடைய மகிமை வெளிப்பட்டது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன். எசேக் 1:28அப் 7:55வெளி 1:17தானி 10:8-9தானி 8:17எசேக் 1:1-4எசேக் 10:18எசேக் 9:3 உடனே தேவனுடைய ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கச்செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன்னுடைய வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு. எசேக் 2:2தானி 10:19தானி 10:8-10எசேக் 37:10எசேக் 4:1-4 இதோ, மனிதகுமாரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம். எசேக் 4:8அப் 20:23அப் 21:11-13அப் 9:16யோவா 21:18மாற் 3:21 நான் உன்னுடைய நாக்கை உன்னுடைய மேல்வாயுடன் ஒட்டிக்கொள்ளச்செய்வேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனிதனாக இல்லாமல், ஊமையனாக இருப்பாய்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள். எசேக் 24:27ஆமோ 8:11-12லூக் 1:20-22மீகா 3:6-7சங் 137:6சங் 51:15ஆமோ 5:10எசேக் 2:3-8 நான் உன்னுடன் பேசும்போது, உன்னுடைய வாயைத் திறப்பேன்; அப்பொழுது யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதைச் சொன்னார் என்று அவர்களுடன் சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேட்காதவன் கேட்காமல் இருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார். எசேக் 12:2-3எசேக் 24:27எசேக் 3:11எசேக் 29:21எபே 6:19யாத் 4:11-12எசேக் 11:25எசேக் 2:5