தீமோத்தேயுவிற்கு பவுலின் அறிவுரைகள்
ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். 2 தீமோ 3:1-92 பேது 2:12 கொரி 11:13-15யூதா 1:182 தெச 2:3-122 பேது 3:3யூதா 1:42 கொரி 11:3 திருமணம் செய்யக்கூடாது என்றும், எபே 4:19ரோம 16:18அப் 20:302 பேது 2:1-32 தீமோ 3:5மத் 24:24மத் 7:15வெளி 16:14 விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள். 1 தீமோ 4:4எபி 13:4ரோம 14:61 கொரி 10:30-311 கொரி 8:8கொலோ 2:16ஆதி 9:31 கொரி 7:28 தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை. ரோம 14:201 கொரி 10:25ரோம 14:141 கொரி 10:23அப் 21:25அப் 11:7-91 தீமோ 4:3அப் 15:20-21 அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். 1 தீமோ 4:3லூக் 4:41 கொரி 7:14தீத் 1:15லூக் 11:41ஆதி 1:25ஆதி 1:31 இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய். தீத் 2:7-10கொலோ 3:162 பேது 3:1-22 தீமோ 3:14-17கொலோ 4:7மத் 13:52தீத் 2:11 கொரி 4:1-2 சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு. 2 தீமோ 2:16தீத் 2:121 தீமோ 1:42 பேது 1:5-8தீத் 3:9எபி 5:141 தீமோ 6:112 தீமோ 2:23 சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. மத் 6:331 தீமோ 6:6சங் 37:3-4நீதி 19:23நீதி 22:4கொலோ 2:21-23சங் 37:11யோபு 5:19-26 இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது. 1 தீமோ 1:15 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 1 தீமோ 2:41 யோவா 2:2யோவா 1:291 யோவா 4:141 தீமோ 2:6யோவா 3:15-17யோவா 4:42ரோம 15:12-13 இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. 1 தீமோ 6:22 தீமோ 4:21 தீமோ 5:7தீத் 2:15தீத் 3:8 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. தீத் 2:72 தீமோ 2:222 தீமோ 2:151 பேது 5:32 பேது 1:5-81 கொரி 11:11 தெச 1:62 தீமோ 2:7 நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு. அப் 6:42 தீமோ 4:2தீத் 2:151 தீமோ 4:16அப் 17:112 தீமோ 2:15-171 தீமோ 4:6யோவா 5:39 சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம். 2 தீமோ 1:61 பேது 4:9-111 தீமோ 1:18அப் 6:61 தீமோ 5:221 தெச 5:19அப் 13:3அப் 8:17 உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு. மத் 5:16சங் 143:5பிலி 2:15-16சங் 104:34அப் 6:4சங் 119:481 தீமோ 4:6யோசு 1:8 உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். தீத் 1:9தீத் 2:72 யோவா 1:8-91 கொரி 3:10-11எசேக் 33:7-9அப் 20:26-28ஏசா 55:111 நாளாக 28:10