ஆதலால், என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. 2 கொரி 12:9-102 தீமோ 1:7எபே 6:10பிலி 4:131 கொரி 16:13ஆகா 2:42 பேது 3:181 தீமோ 1:18 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஒப்புவி. 2 தீமோ 1:13-141 தீமோ 4:61 தீமோ 6:12மல்கி 2:7தீத் 1:5-92 தீமோ 3:10எஸ்றா 7:25எரே 23:28 நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக தீங்கு அனுபவி. எபி 12:2-3யாக் 1:122 தீமோ 4:52 தீமோ 1:8எபே 6:11-182 கொரி 10:3-5எபி 10:322 தீமோ 2:10 படையில் சேர்ந்துகொண்ட எவனும், தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்குப் பிரியமாக இருக்கும்படி, பிழைப்புக்கடுத்த வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான். 1 தெச 2:4லூக் 8:142 பேது 2:201 கொரி 7:22-231 கொரி 9:25-26லூக் 9:59-622 கொரி 5:92 தீமோ 4:10 மேலும் ஒரு விளையாட்டு வீரன் சட்டத்தின்படி விளையாடாவிட்டால் முடிசூட்டப்படமாட்டான். 1 கொரி 9:24-27வெளி 3:112 தீமோ 4:7-8கொலோ 1:29யாக் 1:12லூக் 13:24எபி 2:7பிலி 1:15 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முதலாவதாக பங்கடையவேண்டும். எபி 10:361 கொரி 9:7-111 கொரி 3:6-91 கொரி 9:23யோவா 4:35-38லூக் 10:2ஏசா 28:24-26மத் 20:1 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். யாக் 1:51 யோவா 5:20ஆதி 41:38-39லூக் 24:45எபே 1:17-18யோவா 14:26நீதி 2:3-61 தீமோ 4:15 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என்னுடைய நற்செய்தியின்படியே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள். அப் 2:24ரோம 2:161 கொரி 15:11-202 தெச 2:14மத் 1:11 கொரி 15:41 தீமோ 2:7எபி 12:2-3 இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. அப் 28:312 தீமோ 1:8பிலி 1:7எபே 6:19-20கொலோ 4:32 தீமோ 4:171 பேது 2:12அப் 9:16 ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். 1 பேது 5:10கொலோ 1:242 கொரி 1:62 தீமோ 2:31 கொரி 9:221 பேது 2:101 தெச 5:91 தீமோ 1:13-14 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்; ரோம 6:8கொலோ 3:3-4ரோம 6:51 தீமோ 1:152 கொரி 4:10யோவா 14:191 தெச 5:102 கொரி 13:4 அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; ரோம 8:17மத் 10:33வெளி 20:4லூக் 12:9வெளி 20:6வெளி 5:10லூக் 9:261 பேது 4:13-16 நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். எண் 23:19ரோம 3:31 தெச 5:242 தெச 3:3தீத் 1:21 கொரி 1:9எபி 6:18மத் 24:35
தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியக்காரன்
இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் தோல்வியடையச் செய்வதற்கு ஏதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு. தீத் 3:9-112 தீமோ 2:232 தீமோ 4:1ரோம 14:11 தீமோ 5:211 தீமோ 6:4-5எபி 13:9அப் 15:24 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும் சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு. 1 தெச 2:42 பேது 1:101 தீமோ 4:62 கொரி 10:182 கொரி 5:91 தீமோ 4:12-16கலா 1:102 பேது 3:14 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தி உள்ளவர்கள் ஆவார்கள்; தீத் 3:91 தீமோ 6:202 தீமோ 2:142 தெச 2:7-8தீத் 1:14ஓசி 12:11 தீமோ 4:7எஸ்றா 10:10 அவர்களுடைய வார்த்தை அழுகல் நோயைப்போல பரவும்; இமெனேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; 1 தீமோ 1:20நாகூ 3:15யாக் 5:3 அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறார்கள். 1 கொரி 15:121 தீமோ 1:19எபி 3:101 கொரி 11:191 யோவா 2:191 தீமோ 6:101 தீமோ 6:212 தீமோ 2:14 ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது. யோவா 10:141 கொரி 8:3நாகூ 1:71 யோவா 3:7-10எண் 16:5யோவா 10:27-30லூக் 13:27கொலோ 3:5-8 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களும் உண்டு; அவைகளில் சில மதிப்புமிக்கவைகளும், சில மதிப்பற்றவைகளும் ஆகும். ரோம 9:21-231 பேது 2:51 தீமோ 3:151 கொரி 3:9எபே 2:22எஸ்றா 1:6எஸ்றா 6:51 கொரி 3:16-17 ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான். 2 தீமோ 3:17எபே 2:102 கொரி 7:1சங் 119:91 பேது 1:221 யோவா 3:32 தீமோ 2:20ஏசா 52:11 அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 1 பேது 2:111 பேது 3:111 கொரி 6:181 தீமோ 6:11சங் 119:9எபி 12:141 தீமோ 4:12சங் 66:18-19 புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு. 2 தீமோ 2:14தீத் 3:91 தீமோ 4:71 தீமோ 6:4-51 தீமோ 1:42 தீமோ 2:16 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். தீத் 3:2யாக் 1:19-20தீத் 1:71 தெச 2:71 தீமோ 3:2-3எபே 4:2பிலி 2:141 தீமோ 6:11 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், அப் 11:18கலா 6:11 தீமோ 2:41 யோவா 5:16அப் 8:22மத் 11:291 பேது 3:15அப் 2:38 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். 1 தீமோ 3:7ஏசா 49:25-26சங் 124:7கொலோ 1:13ஏசா 42:6-7எபே 5:14ஏசா 8:15வெளி 20:2-3