எபிரெயர் 3

Hebrews 3
அத்தியாயம் 3

இயேசு மோசேயிலும் பெரியவர்

இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; பிலி 3:142 தீமோ 1:9எபி 4:14-151 பேது 2:9எபே 4:1எபி 7:26எபே 4:4எபி 2:17 மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார். எண் 12:71 தீமோ 3:15எபே 2:22எபி 3:5-6யோவா 6:38-40எபி 2:17யோவா 17:41 தீமோ 1:12 வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான்; அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார். 1 கொரி 3:91 பேது 2:5-7சகரி 6:12-13எபி 2:9எபி 1:2-4எபி 3:6கொலோ 1:18மத் 16:18 ஏனென்றால், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். எபி 1:2எபி 3:3எஸ்த 2:10எஸ்த 3:9 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான். எண் 12:7எபி 3:2யாத் 14:31அப் 28:23சங் 105:261 தீமோ 1:12உபா 18:15-19உபா 34:5 கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால், நாமே அவருடைய வீடாக இருப்போம். 2 கொரி 6:161 கொரி 3:16எபி 10:351 பேது 2:51 கொரி 6:19எபி 6:11எபி 10:23எபி 3:14

அவிசுவாசத்தைக்குறித்து எச்சரிப்பு

எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், சங் 95:7-11எபி 3:15ஏசா 55:3வெளி 3:20எபி 4:7யோவா 10:27சங் 81:13எபி 3:13 வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள். நீதி 28:14யாத் 17:7மத் 13:15சகரி 7:11-12தானி 5:20எசேக் 3:7-9எரே 7:26சங் 78:18 அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள். அப் 7:36உபா 4:9உபா 4:3உபா 8:4யாத் 19:4அப் 13:8ஆமோ 2:10உபா 29:2 எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி; சங் 95:102 தெச 2:10-12எபே 4:30எரே 4:22சங் 67:2சங் 78:8ஓசி 4:12ஏசா 63:10 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். உபா 1:34-35எபி 4:3உபா 2:14எபி 4:5எண் 14:20-23எண் 14:35எண் 32:10-13எபி 4:9 சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். எரே 17:5எரே 7:24எரே 17:9எரே 18:121 கொரி 10:12எபி 10:38எபி 12:25எரே 11:8 உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க, இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். 1 தெச 5:11எபி 10:24-252 தீமோ 4:21 தெச 4:18அப் 11:23யாக் 1:14எபே 4:22ஒபதி 1:3 நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம். எபி 3:6எபி 6:111 பேது 4:13எபி 12:10எபே 3:6எபி 6:4எபி 3:1ரோம 11:17 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. எபி 3:7-8சங் 95:7எபி 10:38எபி 10:29 கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லோரும் அப்படிச் செய்தார்களல்லவா? எண் 14:2எண் 14:30எண் 26:65உபா 1:38சங் 78:17எண் 14:24எண் 14:38எண் 14:4 மேலும், அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார்? பாவம் செய்தவர்களைத்தானே? அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே. எண் 14:29யூதா 1:5எண் 14:22எண் 14:32-33எண் 26:64-65உபா 2:15-161 கொரி 10:1-13எரே 9:22 பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அவர் யாரைப்பற்றி ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைப்பற்றித்தானே? எபி 4:6உபா 1:34-35எண் 14:30சங் 106:24-26உபா 1:26-32எண் 20:12உபா 9:23எபி 3:11 எனவே, அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம். யூதா 1:5யோவா 3:36யோவா 3:18மாற் 16:161 யோவா 5:102 தெச 2:12