தேவ பிள்ளைகளுக்கு இளைப்பாறுதல்
ஆகவே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்குத் தகுந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாக இல்லாமலிருக்கக் கவனமாக இருப்போம். எபி 12:15எபி 4:9நீதி 28:141 கொரி 9:26-27எபி 4:111 கொரி 10:12எபி 13:7எபி 4:3-5 ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை. 1 தெச 2:13ரோம 10:16-17எபி 11:6எபி 3:18-191 தீமோ 4:8அப் 13:46யாக் 1:211 கொரி 13:3 விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம்; விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார். சங் 95:11மத் 11:28-291 பேது 1:20எபே 1:4ஆதி 1:31எபி 9:26எபி 3:11ஏசா 28:12 ஏனென்றால், தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். யாத் 20:11யாத் 31:17ஆதி 2:1-2எபி 2:6 அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். சங் 95:11எபி 3:11எபி 4:3 எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும், மத் 21:43எபி 3:18-19அப் 13:46-47அப் 28:28எபி 4:2மத் 22:9-10கலா 3:8எபி 4:9 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று நீண்டகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். சங் 95:7எபி 3:7-8எபி 3:15மத் 22:432 சாமு 23:1-2அப் 28:251 இராஜா 6:1அப் 2:29 யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. யோசு 1:15யோசு 22:4உபா 12:9எபி 11:13-15யோசு 23:1அப் 7:45சங் 78:55உபா 25:19 எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது. 1 பேது 2:10வெளி 21:4வெளி 7:14-17எபி 3:11ஏசா 11:10எபி 4:3எபி 11:25எபி 4:1 ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான். வெளி 14:13எபி 4:3-41 பேது 4:1-2யோவா 19:30எபி 10:12எபி 1:3 எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம். மத் 11:28-30லூக் 13:24எபி 3:18எபே 5:6எபி 6:112 பேது 1:10-11எபி 3:12பிலி 2:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது. எரே 23:29ஏசா 55:11எபே 6:17சங் 119:1301 பேது 1:23ஏசா 49:2வெளி 1:161 தெச 2:13 அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். 1 கொரி 4:5சங் 33:13-15நீதி 15:3பிரச 12:141 சாமு 16:72 கொரி 5:10எரே 17:10யோபு 34:21
இயேசு மகா பிரதான ஆசாரியர்
வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம். எபி 9:24எபி 12:2எபி 10:23எபி 9:12எபி 6:20எபே 4:10எபி 2:17எபி 8:1 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். எபி 2:17-182 கொரி 5:21ஏசா 53:4-51 யோவா 3:51 பேது 2:22பிலி 2:7-8எபி 7:26எபி 4:14 எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம். எபே 3:12எபி 7:25எபி 10:19-23எபி 13:6பிலி 4:6-7ஏசா 55:6-7எபே 2:181 பேது 2:10