ஏசாயா 28

Isaiah 28
அத்தியாயம் 28

எப்பிராயீமுக்கு ஐயோ

எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு 1 ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் பூவே! ஓசி 7:5ஏசா 28:72இராஜா 14:25-27ஏசா 28:3-42 நாளாக 28:62 நாளாக 30:6-72இராஜா 15:292இராஜா 18:10-12 இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான். எசேக் 13:11ஏசா 30:30நாகூ 1:8ஏசா 27:1ஏசா 29:6எசேக் 30:10-11ஏசா 25:4ஏசா 28:15-19 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும். எபி 10:29ஏசா 26:62இராஜா 9:33தானி 8:13ஏசா 28:1வெளி 11:2ஏசா 25:10புலம் 1:15 செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய பூ, பருவகாலத்திற்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும். நாகூ 3:12மீகா 7:1ஓசி 6:4ஏசா 28:1ஓசி 13:1ஓசி 13:15ஓசி 9:10-11ஓசி 9:16 அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும், 1 பேது 5:4ஏசா 60:19ஏசா 62:3ரோம 11:5-6ஏசா 41:16ஏசா 45:25எரே 9:23-24யோபு 29:14 நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், போரை அதின் வாசல்வரை திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார். சங் 18:32-34யோவா 5:30ஏசா 11:2-4யோசு 1:9எண் 11:16-17ஏசா 32:15-16யோவா 3:341 கொரி 12:8 ஆனாலும் இவர்களும் திராட்சைரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிவிலகிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சைரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிவிலகி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். ஏசா 56:10-12லூக் 21:34பிரச 10:17ஏசா 19:14மத் 24:29மீகா 2:11நீதி 20:1எசேக் 44:21 உணவு உண்ணும் இடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. எரே 48:26நீதி 26:11ஆப 2:15-16 அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கச்செய்யப்பட்டவர்களுக்குமே. சங் 131:2எரே 6:10யோவா 12:38மத் 11:25மத் 21:15-161 பேது 2:2ஏசா 53:1ஏசா 54:13 கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். ஏசா 28:132 தீமோ 3:7எரே 11:7எரே 25:3-7எபி 5:12நெகே 9:29-302 நாளாக 36:15-16உபா 6:1-6 பரியாச உதடுகளினாலும் அந்நிய மொழியினாலும் இந்த மக்களுடன் பேசுவார். 1 கொரி 14:21உபா 28:49எரே 5:15ஏசா 33:19 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறச்செய்யும் இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களிடம் அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். மத் 11:28-29ஏசா 30:15எரே 6:16ஏசா 11:10எபி 12:25எரே 44:16சகரி 7:142 நாளாக 14:11 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், யெகோவாவுடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். மத் 13:14ஏசா 6:9-102 பேது 3:16ஏசா 28:10ஏசா 8:14-15எரே 23:36-38மத் 21:44சங் 69:22 ஆகையால் எருசலேமிலுள்ள இந்தமக்களை ஆளுகிற நிந்தனைக்காரரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். ஏசா 28:22ஏசா 1:10ஏசா 29:20அப் 13:41ஓசி 7:5ஏசா 5:9நீதி 1:22நீதி 29:8 நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. ஏசா 8:7-8ஆமோ 2:4தானி 11:22பிரச 8:8எசேக் 13:22ஓசி 2:18ஏசா 28:18எரே 5:31 ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான் 2. சங் 118:22அப் 4:11-121 பேது 2:6-8லூக் 20:17-18ரோம 9:33மாற் 12:10மத் 21:42ஏசா 8:14-15 நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை பெருவெள்ளம் அடித்துக்கொண்டுபோகும். 2இராஜா 21:13ஆமோ 7:7-9வெளி 16:21ஏசா 28:2எரே 7:14வெளி 11:19ரோம 2:2ரோம 2:5 நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். ஏசா 7:7ஏசா 8:10ஏசா 28:15தானி 11:40ஏசா 28:3மல்கி 4:1-3தானி 8:9-13தானி 9:26-27 அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும். ஆப 3:162இராஜா 24:2தானி 7:28தானி 8:27ஏசா 10:5-6ஏசா 33:7ஏசா 36:22ஏசா 37:3 கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது. 1 கொரி 1:18-31ஏசா 64:6ரோம 9:30-32ஏசா 57:12-13ஏசா 59:5-6ஏசா 66:3-6எரே 7:8-10 யெகோவா தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார். 1 நாளாக 14:112 சாமு 5:20யோசு 10:12யோசு 10:101 நாளாக 14:162 சாமு 5:25புலம் 2:15உபா 29:21-24 இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் செய்யாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் தீர்மானிக்கப்பட்ட அழிவின் செய்தியைச் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன். ஏசா 10:22-23ஏசா 24:1-232 நாளாக 30:102 நாளாக 36:16அப் 13:40-41அப் 17:32தானி 9:26-27ஏசா 28:14-15 செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். ஏசா 1:2எரே 22:29உபா 32:1வெளி 2:11வெளி 2:14வெளி 2:29வெளி 2:7 உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ? ஓசி 10:11-12எரே 4:3 அவன் அதை மேலாக பரப்பினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ? எசேக் 4:9மத் 23:23யாத் 9:31-32 அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துவிக்கிறார். யாத் 31:3-6யாத் 36:2தானி 1:17யாத் 28:3யாக் 1:17யோபு 35:11யோபு 39:17சங் 144:1 உளுந்து இரும்புக்கோலாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டியின் உருளை சுற்றவிடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும். ஏசா 41:152இராஜா 13:7ஆமோ 1:3ஏசா 27:7-8எரே 10:24எரே 46:28 அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை. 1 கொரி 3:91 கொரி 9:9-10ஆமோ 9:9ஏசா 21:10யோவா 12:24மத் 13:37-43மத் 3:12லூக் 22:31-32 இதுவும் சேனைகளின் யெகோவாவாலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். ரோம 11:33எரே 32:19யோபு 5:9ஏசா 9:6சங் 40:5சங் 92:5தானி 4:2-3யோபு 37:23