ஓசியா 6

Hosea 6
அத்தியாயம் 6

மனந்திரும்பாத இஸ்ரவேல்

யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். யோபு 5:18உபா 32:391 சாமு 2:6புலம் 3:40-41ஓசி 14:4ஏசா 2:3ஏசா 55:7யோபு 34:29 இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். 2இராஜா 20:51 கொரி 15:4எசேக் 37:11-13ஏசா 26:19ஓசி 13:14சங் 30:4-5யோவா 14:19ஆதி 17:18 அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார். எரே 24:7ஓசி 14:5நீதி 2:1-5சங் 72:6பிலி 3:13-15மத் 13:11வெளி 22:16சகரி 10:1 எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. ஓசி 11:8ஓசி 13:3சங் 78:34-37சங் 106:12-132 பேது 2:20-22லூக் 13:7-9மத் 13:21லூக் 19:41-42 ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தைகளைக்கொண்டு அவர்களைக் கொன்றேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். எரே 23:29எரே 1:10எபி 4:12எரே 5:14ஏசா 11:4சங் 119:120வெளி 2:16ரோம 2:5 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன். மத் 9:13மத் 12:7நீதி 21:31 சாமு 15:22ஆமோ 5:21பிரச 5:1ஏசா 1:11எரே 22:16 அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாகத் துரோகம் செய்தார்கள். ஆதி 3:11ஓசி 5:7ஓசி 8:1எரே 9:6யோபு 31:332இராஜா 17:15எசேக் 16:59-61ஆதி 3:6 கீலேயாத், அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. ஓசி 12:11ஓசி 4:2மீகா 7:21 இராஜா 2:52 சாமு 20:82 சாமு 3:27அப் 23:12-15அப் 25:3 கொள்ளைக்காரர்களின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியர்களின் கூட்டம் காத்திருக்கிறது; கேடான காரியங்களையே செய்கிறார்கள். நீதி 1:11-19செப்ப 3:3ஓசி 5:1ஓசி 7:1எசேக் 22:27எசேக் 22:9எஸ்றா 8:31எரே 11:9 பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் விபசாரம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று. ஓசி 5:3எரே 23:14எசேக் 23:5எரே 3:6எரே 5:30-311 இராஜா 12:81 இராஜா 15:302இராஜா 17:7 யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. யோவே 3:13யோபு 42:10எரே 51:33மீகா 4:12வெளி 14:15சங் 126:1செப்ப 2:7