பிரசங்கி 5

Ecclesiastes 5
அத்தியாயம் 5

தேவனுக்குரிய பொருத்தனையில் நிலைத்தல்

நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன்னுடைய நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைவிட கேட்டறிவதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாமல் இருக்கிறார்கள். யாக் 1:19எபி 12:28-29நீதி 15:8ஏசா 1:12-201 பேது 2:1-2நீதி 21:27யாத் 3:5ஏசா 66:3 தேவ சமுகத்தில் நீ துணிகரமாக உன்னுடைய வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன்னுடைய வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக. மத் 6:7நீதி 10:19ஏசா 55:9மத் 6:9பிரச 5:3பிரச 5:7ஆதி 18:27எண் 30:2-5 தொல்லையின் மிகுதியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் மிகுதியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். நீதி 15:2பிரச 10:12-14நீதி 10:19யோபு 11:2 நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை செய்துகொண்டால், அதைச் செலுத்தத் தாமதிக்காதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். எண் 30:2உபா 23:21-23சங் 76:11மத் 5:33சங் 66:13-14சங் 50:14சங் 119:106எபி 10:6 நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைவிட, நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே நலம். அப் 5:4உபா 23:22நீதி 20:25 உன்னுடைய சரீரத்தைப் பாவத்திற்குள்ளாக்க உன்னுடைய வாய்க்கு இடம்கொடுக்காதே; அது புத்திமாறி செய்தது என்று தூதனுக்குமுன்பு சொல்லாதே; தேவன் உன்னுடைய வார்த்தைகளினாலே கோபம் கொண்டு, உன்னுடைய கைகளின் செயல்களை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்? யாக் 1:262 யோவா 1:8யாக் 3:2பிரச 5:1-2மல்கி 2:7லேவி 5:4-6ஆதி 48:161 கொரி 3:13-15 அநேக சொப்பனங்கள் மாயையாக இருப்பதுபோல அநேக வார்த்தைகளும் மாயையாக இருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு. மத் 12:36பிரச 12:13பிரச 8:12பிரச 5:3ஏசா 50:10-11நீதி 23:17பிரச 7:18பிரச 3:14

செல்வமும் மாயையே

ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாக இருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு. சங் 12:5பிரச 4:1பிரச 3:161 இராஜா 21:19-20மத் 13:41-42சங் 58:10-11சங் 82:1வெளி 17:6-7 பூமியில் விளையும் பலன் எல்லோருக்கும் உரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான். 1 இராஜா 4:7-23சங் 115:16ஆதி 1:29-30சங் 104:14-151 நாளாக 27:26-311 சாமு 8:12-17ஆதி 3:17-19எரே 40:10-12 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. 1 தீமோ 6:10மத் 6:24லூக் 12:15மத் 6:19பிரச 4:8பிரச 4:4பிரச 2:26சங் 62:10 பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன? 1 யோவா 2:16ஆப 2:13நீதி 23:5சங் 119:36-37பிரச 6:91 இராஜா 5:13-16பிரச 11:9ஆதி 12:16 வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது. நீதி 3:24சங் 4:8எரே 31:26சங் 127:2 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். பிரச 6:1-2லூக் 18:22-23ஆதி 19:14லூக் 16:22-23யாக் 5:1-4பிரச 4:8பிரச 8:9ஆதி 14:16 அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை. பிரச 2:26ஆகா 1:9ஆகா 2:16-17யோபு 20:15-29யோபு 5:5மத் 6:19-20நீதி 23:51 இராஜா 14:26 தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் 1 திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. யோபு 1:21சங் 49:171 தீமோ 6:7லூக் 12:20 அவன் வந்தபடியே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்காக உழைத்ததால் அவனுக்கு லாபம் என்ன? பிரச 1:3நீதி 11:29மாற் 8:36பிரச 5:13யோவா 6:271 சாமு 12:21பிரச 2:22-23ஓசி 8:7 அவன் தன்னுடைய நாட்களிலெல்லாம் இருளிலே சாப்பிட்டு, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான். சங் 127:21 கொரி 11:30-321 இராஜா 17:122 நாளாக 16:10-122 நாளாக 24:24-252இராஜா 1:22இராஜா 1:62இராஜா 5:27 இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. பிரச 2:24பிரச 3:12-13பிரச 3:22பிரச 9:71 தீமோ 6:17பிரச 2:10பிரச 8:15பிரச 11:9 தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி. உபா 8:18பிரச 3:13பிரச 6:22 நாளாக 1:12பிரச 2:24-261 இராஜா 3:13 அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு தயவு செய்கிறபடியினால், அவன் தன்னுடைய உயிருள்ள நாட்களை அதிகமாக நினைக்கமாட்டான். ஏசா 65:13-14ஏசா 65:21-24சங் 37:16சங் 4:6-7ரோம 5:1உபா 28:47உபா 28:8-12ஏசா 64:5