யாக்கோபு 4

James 4
அத்தியாயம் 4

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்

உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா? 1 பேது 2:11கலா 5:17ரோம 7:23யாக் 1:14ரோம 8:71 யோவா 2:15-17எரே 17:9யூதா 1:16-18 நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை. யோவா 16:24மத் 7:7-8யாக் 1:5லூக் 11:9-13யோவா 4:101 தீமோ 6:9-10யாக் 5:1-5நீதி 1:19 நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். 1 யோவா 5:141 யோவா 3:22யாக் 1:6-7யாக் 4:1நீதி 15:8மீகா 3:4சங் 66:18-19யோபு 35:12 விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். 1 யோவா 2:15-16ரோம 8:7யோவா 15:19மத் 6:24கலா 1:10யோவா 17:14யாக் 1:27யோவா 15:23-24 நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? 2 கொரி 6:161 கொரி 6:19எண் 11:29தீத் 3:3ஆதி 8:21சங் 37:1ஆதி 6:5ஆதி 26:14 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. மத் 23:12நீதி 3:341 பேது 5:5நீதி 18:12சங் 138:6நீதி 29:23நீதி 6:16-17நீதி 22:4 ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 1 பேது 5:8-9எபே 4:27எபே 6:11-121 பேது 5:6லூக் 4:2-13மத் 4:3-11எபி 12:9ரோம 10:3 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள். சங் 145:18எபி 10:22மல்கி 3:7சகரி 1:3ஏசா 55:6-72 நாளாக 15:2ஓசி 6:1-2எரே 4:14 நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும். மத் 5:42 கொரி 7:10-11லூக் 6:25நீதி 14:13யாக் 5:1-2சங் 119:67பிரச 7:2-6எசேக் 16:63 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். மத் 23:12சங் 147:61 பேது 5:6லூக் 14:11யாக் 4:6-7யோபு 22:29லூக் 1:52சங் 113:7 சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய். 1 பேது 2:1யாக் 5:9ரோம 2:1லூக் 6:37மத் 7:1-2சங் 140:11ரோம 14:10-121 கொரி 4:5 நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? ரோம 14:4ரோம 2:1மத் 10:28ஏசா 33:22எபி 7:25யாக் 5:9ரோம 14:13யோபு 38:2

நாளையதினத்தைக்குறித்து பெருமைகொள்ளுதல்

மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள். நீதி 27:1லூக் 12:17-20ஆதி 11:3-4பிரச 2:1எசேக் 7:12ஏசா 24:2ஏசா 56:11-12யாக் 5:1 நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே. 1 பேது 1:24சங் 39:51 யோவா 2:17சங் 102:3யோபு 7:6-7யாக் 1:10யோபு 14:1-2யோபு 9:25-26 ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். நீதி 19:21எபி 6:3புலம் 3:37அப் 18:21ரோம 1:101 கொரி 16:7ரோம 15:321 கொரி 4:19 இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது. நீதி 27:11 கொரி 5:6சங் 52:7நீதி 25:141 கொரி 4:7-8ஏசா 47:10யாக் 3:14சங் 52:1 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல்போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும். யோவா 9:41யோவா 13:17யோவா 15:222 பேது 2:21லூக் 12:47-48ரோம 1:32ரோம 2:17-23ரோம 1:20-21