மனம்திரும்ப அழைப்பு
தரியு 1 அரசாண்ட இரண்டாம் வருடம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் மகனாகிய சகரியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தை: மத் 23:35நெகே 12:4எஸ்றா 4:24ஆகா 1:1சகரி 1:7சகரி 7:1ஆகா 2:10லூக் 11:51 யெகோவா உங்கள் முன்னோர்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். எரே 44:6எசேக் 22:31புலம் 5:7சங் 79:5-6அப் 7:52மத் 23:30-32செப்ப 2:1-32 நாளாக 36:13-20 ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 3:22மல்கி 3:7யோவே 2:12உபா 30:2-10எரே 4:1ஓசி 6:1ஏசா 31:6எரே 12:15 உங்கள் முன்னோர்களைப்போல் இருக்காதீர்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத செயல்களையும்விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடுக்காமலும் என்னைக் கவனிக்காமலும் போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். சங் 78:8எசேக் 33:11எரே 35:15சங் 106:6-72 நாளாக 36:15-16ஏசா 1:16-19எரே 11:6-8மத் 3:8-10 உங்கள் முன்னோர்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ? 2 பேது 3:2-4பிரச 12:5பிரச 12:7எபி 9:27யோபு 14:10-12சங் 90:10அப் 13:36பிரச 1:4 இல்லாமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரர்களுக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் முன்னோர்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் செயல்களின்படியாகவும் சேனைகளின் யெகோவா எங்களுக்குச் செய்ய தீர்மானித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார். புலம் 2:17எசேக் 12:25-28உபா 28:15எரே 23:20மத் 24:35ஆமோ 9:10தானி 9:11-12எரே 44:28
குதிரைகளைப்பற்றிய தரிசனம்
தரியு அரசாண்ட இரண்டாம் வருடம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் மகன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டானது; அவன் சொன்னது: சகரி 1:1 இதோ, இன்று இரவிலே சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு மனிதனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் இருந்தன. வெளி 6:4ஏசா 55:13ஏசா 41:19வெளி 2:1சகரி 13:71 இராஜா 3:5தானி 2:19தானி 7:13 அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னுடன் பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார். வெளி 7:13-14சகரி 4:4-5தானி 9:22-23ஆதி 31:11சகரி 1:19சகரி 2:3சகரி 5:5தானி 10:11-14 அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்த மனிதன் மறுமொழியாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் யெகோவா அனுப்பினவர்கள் என்றார். சகரி 1:11எபி 1:14சகரி 6:5-8யோபு 1:7யோபு 2:1-2சங் 103:20-21சகரி 1:8சகரி 4:10 பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற யெகோவாவுடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலாக இருக்கிறது என்றார்கள். சகரி 1:10மத் 24:30-31சங் 103:20-21சகரி 1:15சகரி 1:81 தெச 5:3தானி 10:20ஏசா 14:7 அப்பொழுது யெகோவாவுடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் யெகோவாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல, தானி 9:2எரே 29:10சங் 102:13சங் 74:10சகரி 7:5வெளி 6:102 நாளாக 36:21எபி 7:25 அப்பொழுது யெகோவா, என்னுடன் பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் மறுமொழியாகச் சொன்னார். ஏசா 40:1-2எரே 29:10ஆமோ 9:11-15எரே 30:10-22எரே 31:3-14சகரி 1:14-16சகரி 1:9சகரி 2:4-12 அப்பொழுது என்னுடன் பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். யோவே 2:18ஏசா 40:6ஏசா 40:1சகரி 1:17சகரி 1:9ஓசி 11:8ஏசா 38:22ஏசா 42:13 நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் தீங்கை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாக வாழுகிற அன்னியமக்கள்மேல் நான் கடுங்கோபம்கொண்டேன். எசேக் 25:12-17எரே 51:24ஏசா 54:8ஏசா 47:6-9ஏசா 10:5-7எரே 48:11-13ஒபதி 1:10-16சங் 123:4 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று யெகோவா சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூறு என்றார். சகரி 8:3எசேக் 37:24-28எஸ்றா 6:14-15சகரி 2:10-11ஏசா 54:8-10யோபு 38:5சகரி 4:9எசேக் 39:25-29 இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் நிரம்பியிருக்கும்; இன்னும் யெகோவா சீயோனைத் தேற்றரவு செய்வார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று மேலும் கூறு என்றார். ஏசா 51:3சகரி 2:122 நாளாக 6:6எசேக் 36:10-11ஏசா 14:1ஏசா 44:26ஏசா 54:8ஏசா 61:4-6
கொம்புகளைப்பற்றிய தரிசனம்
நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன். 2இராஜா 24:1-20தானி 8:3-14யோசு 5:13சகரி 5:92இராஜா 15:292இராஜா 17:1-62இராஜா 18:9-12தானி 11:28-35 அவைகள் என்னவென்று என்னுடன் பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும், இஸ்ரவேலையும், எருசலேமையும் சிதறடித்த தேசங்கள் என்றார். எஸ்றா 4:4சகரி 1:21சகரி 2:2சகரி 8:14எஸ்றா 4:1எஸ்றா 4:7எரே 50:17-18சகரி 1:9 பின்பு யெகோவா எனக்கு நான்கு தொழிலாளிகளைக் காண்பித்தார். சகரி 10:3-5சகரி 12:2-6சகரி 9:12-161 சாமு 12:11உபா 33:25ஏசா 54:15-17நியாயாதி 11:16நியாயாதி 11:18 இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கமுடியாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த தேசங்களுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார். சங் 75:10புலம் 2:17சங் 75:4-5சகரி 1:19தானி 12:7