எரேமியா 4

Jeremiah 4
அத்தியாயம் 4

இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. யோவே 2:12எரே 3:22எசேக் 43:9ஆதி 35:2எரே 25:5எரே 3:1எரே 3:121 சாமு 7:3 நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள். ஏசா 65:16ஆதி 22:18எரே 9:241 கொரி 1:312 கொரி 10:17உபா 10:20கலா 3:8ஏசா 45:25 யூதா மக்களுடனும், எருசலேம் மக்களுடனும் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். ஓசி 10:12லூக் 8:14லூக் 8:7கலா 6:7-8மத் 13:7மாற் 4:18-19மத் 13:22மாற் 4:7 யூதா மனிதர்களே, எருசலேமின் குடிமக்களே, உங்கள் செயல்களுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல எழும்பி, அணைப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் யெகோவாவாக்கென்று உங்களை 1. முற்றிலுமாய் அர்ப்பணியுங்கள். உபா 10:16கொலோ 2:11உபா 30:6ரோம 2:28-29எரே 9:26எரே 21:12ஆமோ 5:6எசேக் 20:33

வடக்கிலிருந்து வரும் அழிவு

தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள். எரே 8:14எரே 6:1யோசு 10:20ஓசி 8:1ஆமோ 3:6ஆமோ 3:8எசேக் 33:2-6எரே 11:2 சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா அழிவையும் வரச்செய்கிறேன். எரே 1:13-15எரே 50:2எரே 51:27எரே 4:21எரே 51:12எரே 6:1எரே 6:22ஏசா 62:10 உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார். எசேக் 26:7-10ஏசா 1:7ஏசா 6:11எரே 2:15எரே 5:6தானி 7:4எரே 25:9எரே 50:17 இதினிமித்தம் சணல் ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே. ஏசா 22:12எரே 6:26ஏசா 10:4ஏசா 32:11ஏசா 5:25ஆமோ 8:10எசேக் 21:12எசேக் 30:2 அந்நாளில் ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் சோர்ந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 13:9-16ஏசா 22:3-5ஏசா 29:9-101 சாமு 25:37-382இராஜா 25:4அப் 13:41ஏசா 19:11-12ஏசா 19:16 அப்பொழுது நான்: ஆ! யெகோவாவாகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், உண்மையாகவே இந்த மக்களுக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரச்செய்தீர்; பட்டயம் ஜீவன்வரை எட்டுகிறதே என்றேன். 2 தெச 2:9-12எரே 5:12ஏசா 37:35எரே 14:13-141 இராஜா 22:20-23யாத் 9:14எசேக் 11:13எசேக் 14:9-10 வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது. எசேக் 17:10ஓசி 13:15எசேக் 19:12ஓசி 13:3ஏசா 22:4ஏசா 27:8ஏசா 41:16ஏசா 64:6 இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களுடன் நியாயம் பேசுவேன். எரே 1:16எசேக் 5:8எசேக் 6:11-13எசேக் 7:8-9 இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ, நாம் பாழாக்கப்படுகிறோமே. ஏசா 19:1ஏசா 66:15ஆப 1:8ஏசா 5:28புலம் 4:19உபா 28:49ஏசா 13:5நாகூ 1:3 எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும். யாக் 4:8ஏசா 55:7அப் 8:22லூக் 11:39ரோம 1:211 கொரி 3:20ஏசா 1:16-19எரே 13:27 தாண் பட்டணத்திலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்செய்கிறது. எரே 8:16நியாயாதி 18:29நியாயாதி 20:1எரே 6:1யோசு 17:15யோசு 20:7 தேசங்களுக்கு அதை நீங்கள் பிரபலப்படுத்துங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள். எசேக் 21:22எரே 5:15ஏசா 39:3உபா 28:49-52ஏசா 34:1எரே 16:6எரே 2:15எரே 31:10 அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தது என்று யெகோவா சொல்லுகிறார். எரே 5:232இராஜா 25:1-4தானி 9:7-19எசேக் 2:3-7ஏசா 1:20-23ஏசா 1:8ஏசா 30:9எரே 6:2-3 உன் நடக்கையும் உன் செயல்களுமே இவைகளை உனக்கு சம்பவிக்கச்செய்தன; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயம்வரை எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே. எரே 2:19சங் 107:17ஏசா 50:1எரே 2:17நீதி 1:31எரே 6:19எரே 26:19எரே 5:19 என் குடல்கள், என் குடல்களே வலிக்கிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமைதலாக இருக்கமுடியாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், போரின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே. ஆப 3:16ஏசா 16:11ஏசா 22:4ஏசா 21:3எரே 9:1எரே 9:10தானி 7:15தானி 8:27 நாசத்திற்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; திடீரென்று என் கூடாரங்களும், ஒரு நிமிடத்தில் என் திரைகளும் பாழாக்கப்படுகிறது. சங் 42:72 தெச 1:9எசேக் 7:25-26யோவே 1:15மத் 10:28யாத் 33:5எசேக் 14:21ஏசா 13:6 நான் எதுவரைக்கும் யுத்தத்தின் கொடியைக் கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன். 2 நாளாக 35:252 நாளாக 36:102 நாளாக 36:172 நாளாக 36:32 நாளாக 36:6-7எரே 4:5-6எரே 6:1எரே 4:19 என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். 1 கொரி 14:20ரோம 16:19எரே 5:21ஓசி 4:6ரோம 3:11ரோம 1:22ஓசி 5:4யோவா 16:3 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. மத் 24:29மாற் 13:24-25ஏசா 13:10யோவே 3:15-16ஆதி 1:2லூக் 21:25-26எசேக் 32:7-8ஆமோ 8:9 மலைகளைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன. எசேக் 38:20ஏசா 5:25எரே 10:10நாகூ 1:5-61 இராஜா 19:11நியாயாதி 5:4-5மீகா 1:4சங் 114:4-7 பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. செப்ப 1:2-3எரே 12:4ஓசி 4:3எரே 9:10 மேலும் நான் பார்க்கும்போது, யெகோவாவாலும், அவருடைய கடுங்கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்திரமானது; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோனது. சங் 107:34உபா 29:23-28ஏசா 5:9-10ஏசா 7:20-25எரே 12:4எரே 14:2-6மீகா 3:12சங் 76:7 தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 46:28எரே 5:10எரே 5:18எரே 30:11எசேக் 11:13லேவி 26:44ரோம 11:1-7ரோம 9:27-29 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை. எண் 23:19ஓசி 4:3ஏசா 50:3எரே 12:4ஏசா 5:30யோவே 2:30-311 சாமு 15:29எபே 1:11 குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் எல்லா ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனிதனும் அவைகளில் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும். ஏசா 2:19-21எரே 4:71 சாமு 13:62 நாளாக 33:112இராஜா 25:4-7ஆமோ 9:1ஏசா 30:17எரே 39:4-6 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள். 2இராஜா 9:30புலம் 1:19புலம் 1:2எசேக் 16:36-41எசேக் 23:9-10ஏசா 10:3எசேக் 23:22-24எசேக் 28:13 கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்முறை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், மகளாகிய சீயோனின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ, கொலைபாதகர்களால் என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள். ஏசா 1:15புலம் 1:17எரே 13:211 கொரி 9:161 தெச 5:3எசேக் 23:46-47எசேக் 9:5-6ஆதி 27:46