முற்றுகையிடப்பட்ட எருசலேம்
பென்யமீன் வம்சத்தாரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஒன்றாய்க்கூடி ஓடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சம் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா அழிவும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது. நெகே 3:142 நாளாக 11:62 சாமு 14:2நியாயாதி 1:21எரே 4:5-6எரே 6:22யோசு 18:21-28ஆமோ 1:1 செல்வமாய் வளர்ந்த அழகுள்ள மகளாகிய சீயோனை அழிப்பேன். ஏசா 1:8எரே 4:31ஏசா 3:16-17புலம் 2:1புலம் 2:13 மேய்ப்பர் தங்கள் மந்தைகளுடன் அவளிடத்திற்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் இடத்தில் மேய்த்து, லூக் 19:43எரே 39:1-32இராஜா 24:10-122இராஜா 24:22இராஜா 25:1-4எரே 12:10எரே 4:16-17நாகூ 3:18 அவளுக்கு விரோதமாய் போர்செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போய்ச்சேருவதற்கு எழுந்திருங்கள்; ஐயோ, பொழுது சாய்ந்து, மாலைநேர நிழல்கள் நீண்டுபோகிறதே; எரே 15:8யோவே 3:9செப்ப 2:4எரே 8:20ஏசா 13:2-5ஏசா 5:26-30எரே 5:10எரே 51:27-28 எழுந்திருங்கள், நாம் இரவுநேரத்திலாவது போய்ச்சேர்ந்து, அவளுடைய அரண்மனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள். ஏசா 32:14எரே 52:132 நாளாக 36:19ஆமோ 2:5ஆமோ 3:10-11ஓசி 8:14எரே 17:27எரே 9:21 சேனைகளுடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கோட்டைமதில் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை. உபா 20:19-20எரே 32:24 ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கச்செய்வதைப்போல, அது தன் தீங்கைச் சுரக்கச்செய்கிறது; அதில் கொடுமையும் தீமையான காரியங்களும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் எப்பொழுதும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது. எசேக் 7:11எசேக் 7:23எரே 20:8ஏசா 57:20யாக் 3:10-12எசேக் 22:3-12மீகா 2:1-2மீகா 2:8-10 எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாமலிருக்கவும், நான் உன்னைப் பாழும் குடியில்லாத தேசமும் ஆக்காமலிருக்கவும் புத்தியைக்கேள். எசேக் 23:18ஓசி 9:12எரே 17:23எரே 32:33எரே 35:13-15சங் 50:17செப்ப 3:7உபா 32:29 திராட்சைக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலின் மீதியாயிருந்த பழத்தைத் திராட்சைச்செடியின் பழத்தைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டு போவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எரே 16:16எரே 49:9ஒபதி 1:5-6எரே 52:28-30வெளி 14:18 அவர்கள் கேட்கும்படி நான் யாருடன் பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய காது விருத்தசேதனமில்லாதது 1; அவர்கள் கேட்கமாட்டார்கள்; யெகோவாவுடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை. அப் 7:51எரே 7:26எபி 11:7யோவா 7:7யாத் 6:12ஏசா 53:12 நாளாக 36:15-162 தீமோ 4:3 ஆகையால் நான் யெகோவாவுடைய கடுங்கோபத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலெங்கும் அதை ஊற்றிவிடுவேன்; ஆண்களும், பெண்களும், முதியவர்களும், மிக வயதானவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள். எரே 20:9எரே 9:21யோபு 32:18-19மீகா 3:8அப் 17:16அப் 18:5அப் 4:20எசேக் 3:14 அவர்களுடைய வீடுகளும், சொந்தநிலங்களும், அவர்களுடைய மனைவிகளுடன் ஏகமாக அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிமக்களுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 8:10ஏசா 5:251 நாளாக 21:16உபா 28:30-33உபா 28:39-43ஏசா 10:4ஏசா 65:21-22ஏசா 9:12 அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்வரை, ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யர். எரே 23:11எரே 8:10மீகா 3:11எரே 22:17மீகா 3:2-3எசேக் 22:25-28ஏசா 57:17எரே 14:18 சமாதானமில்லாமலிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களின் காயங்களை மேலோட்டமாகக் குணமாக்குகிறார்கள். எசேக் 13:10எரே 23:17எரே 4:10புலம் 2:14எரே 14:13எரே 8:11-122 பேது 2:18-19மீகா 2:11 அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? ஆனாலும் வெட்கப்படமாட்டார்கள், வெட்கப்படவும் அவர்களுக்குத் தெரியாது; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 8:12மத் 15:14எரே 3:3பிலி 3:19யாத் 32:34எசேக் 14:9-10எசேக் 16:24-25எசேக் 2:4 வழிகளில் நின்று, முன்னோர்களின் பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதில் செல்லுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதில் நடக்கமாட்டோம் என்கிறார்கள். ஏசா 30:21உபா 32:7எரே 18:15மத் 11:28-29எரே 7:23கொலோ 2:6ஏசா 2:5எரே 18:12 நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்திற்கு செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள். எரே 25:4ஏசா 58:1ஏசா 21:11சகரி 7:11ஆப 2:1ஏசா 56:10அப் 20:27-31ஆமோ 3:6-8 ஆகையால் தேசங்களே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள். உபா 29:24-28ஏசா 5:3எரே 31:10எரே 4:10மீகா 6:5சங் 50:4-6 பூமியே, கேள்; இந்த மக்கள் என் வார்த்தைகளைக் கேட்காமலிருந்து, என் நியாயப்பிரமாணத்தைக் கேட்காமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரச்செய்வேன். ஏசா 1:2அப் 8:22எரே 17:10எரே 8:9ஓசி 10:13ஓசி 4:6எரே 22:29எரே 6:10 சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு எதற்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது. ஏசா 1:11ஆமோ 5:21-22மீகா 6:6-8சங் 40:6யாத் 30:23ஏசா 43:23-24ஏசா 60:6ஏசா 66:3 ஆகையால் இதோ, நான் இந்த மக்களுக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் தகப்பன்களும், பிள்ளைகளும், நண்பர்களும், அண்டைவீட்டுக்காரனும், ஏகமாக இடறுண்டு அழிவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 8:14எசேக் 3:20எரே 13:16ஏசா 9:14-171 பேது 2:82 நாளாக 36:17எசேக் 5:10எசேக் 9:5-7 இதோ, வடதேசத்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்து, பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து ஒரு பெரிய தேசம் எழும்பும். எரே 10:22எரே 50:41-43எரே 1:14-15எரே 25:9எரே 5:15எரே 6:1 அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் கொடியவர்கள், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் கடலின் இரைச்சலைப்போல் இருக்கும்; மகளாகிய சீயோனே, அவர்கள் உனக்கு விரோதமாக போர்செய்யக் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 13:18எரே 50:42எசேக் 23:22-25ஆப 1:6-10ஏசா 19:4ஏசா 5:26-30எரே 30:14எரே 4:13 அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; துன்பமும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் நம்மைப் பிடித்தது. எரே 4:31எரே 49:24எரே 50:43ஏசா 21:3ஏசா 28:19எரே 13:21எரே 30:6எரே 4:19-21 வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு. எரே 49:29எரே 14:18எரே 20:10யோபு 18:11சங் 31:132 நாளாக 15:5ஏசா 1:20நியாயாதி 5:6-7 என் மக்களாகிய மகளே, நீ சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரண்டு, ஒரே மகனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; அழிக்கிறவன் திடீரென்று நம்மேல் வருவான். எரே 4:8சகரி 12:10ஆமோ 8:10எசேக் 27:30-31எசேக் 7:16-18ஏசா 22:12ஏசா 22:4ஏசா 30:13 நீ என் மக்களின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே கோட்டைச்சுவராகவும், பாதுகாப்பாகவும் வைத்தேன். எரே 1:18எரே 15:20எசேக் 20:4எசேக் 22:2எசேக் 3:8-10எரே 9:7 அவர்களெல்லோரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லோரும் கெட்டவர்கள். எரே 9:4எரே 5:23எசேக் 22:18-22எரே 18:18ஏசா 1:4-5ஏசா 31:6எரே 20:10எரே 6:30 தோல்பை வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் வீணாகப்போனது; பொல்லாப்புகள் நீங்கிப்போகவில்லை. 1 பேது 4:12எசேக் 24:13ஓசி 11:7ஏசா 49:4எரே 9:7மல்கி 3:2-3நீதி 17:3சகரி 13:9 அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; யெகோவா அவர்களைத் தள்ளிவிட்டார். ஓசி 9:17ஏசா 1:22சங் 119:119ஏசா 1:25எசேக் 22:18-19எரே 14:19எரே 7:29புலம் 5:22