யாக்கோபு 3

James 3
அத்தியாயம் 3

நாக்கை அடக்குதல்

என் சகோதரர்களே, அதிக தண்டனையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகர்களாகாதிருங்கள். 1 தீமோ 1:7லூக் 12:47-481 பேது 5:31 கொரி 12:28மத் 23:13மத் 23:8-102 கொரி 5:10ரோம 2:20-21 நாம் எல்லோரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாக இருக்கிறான். யாக் 1:26நீதி 13:31 பேது 3:10மத் 12:37சங் 34:13யாக் 3:5-6நீதி 20:91 யோவா 1:8-10 பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். சங் 32:9சங் 39:1யாக் 1:262இராஜா 19:28ஏசா 37:29 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அந்த இடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்புகிறான். மத் 8:24அப் 27:14-38சங் 107:25-27யோனா 1:4 அப்படியே, நாக்கானதும் சிறிய உறுப்பாக இருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நீதி 18:21எரே 9:3-8நீதி 12:18நீதி 15:2சங் 17:10சங் 73:8-9சங் 12:2-4சங் 52:1-2 நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! சங் 120:2-3நீதி 16:27மாற் 7:15மத் 15:11-20நீதி 15:1மாற் 7:20-22லூக் 16:24கொலோ 3:8-9 எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீரில்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதர்களால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு. மாற் 5:4 நாக்கை அடக்க ஒரு மனிதனாலும் முடியாது; அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும், மரணத்திற்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. ரோம 3:13சங் 140:3சங் 55:21யாக் 3:6சங் 57:4சங் 64:3-4சங் 58:4சங் 59:7 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனிதர்களை அதினாலேயே சபிக்கிறோம். சங் 10:7ஆதி 1:26-27ஏசா 29:13சங் 62:4ஆதி 9:6சங் 59:122 சாமு 19:21அப் 2:26 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது. ரோம 12:141 பேது 3:91 கொரி 3:3சங் 50:16-201 தீமோ 5:13மீகா 3:11ஆதி 20:9எரே 7:4-10 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்காது. லூக் 6:43-44மத் 12:33மத் 7:16-20எரே 2:21ரோம 11:16-18எசேக் 47:8-11ஏசா 5:2-42இராஜா 2:19-22

இரண்டுவிதமான ஞானம்

உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும். கலா 5:23யாக் 3:17மத் 5:5கொலோ 3:121 பேது 2:12தீத் 3:22 தீமோ 2:25பிலி 1:27 உங்களுடைய இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம்; சத்தியத்திற்கு விரோதமாகப் பொய் சொல்லாமலிருங்கள். யாக் 3:161 கொரி 13:4பிலி 2:31 கொரி 3:3ரோம 13:132 கொரி 12:201 பேது 2:1-2பிலி 1:15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாக இல்லாமல், உலக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதாகவும், பேய்த்தனத்திற்குரியதுமாகவும் இருக்கிறது. யாக் 3:171 கொரி 3:19யாக் 1:171 கொரி 2:14யோவா 3:17பிலி 3:191 தீமோ 4:12 கொரி 1:12 வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லாத் தீயச்செய்கைகளுமுண்டு. யாக் 3:141 கொரி 3:31 கொரி 14:331 யோவா 3:12கலா 5:20ஆதி 11:9அப் 19:29 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது. கலா 5:22-23நீதி 2:61 கொரி 13:4-7யாக் 3:15ரோம 12:9மத் 5:8யாக் 1:5யாக் 1:17 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. மத் 5:9ஓசி 10:12பிலி 1:11ஏசா 32:16-17கலா 6:8நீதி 11:30நீதி 11:18எபி 12:11