ஒபதியா 1

Obadiah 1
அத்தியாயம் 1

ஏதோமின்மேல் வரப்போகும் நியாயத்தீர்ப்பு

ஒபதியாவின் தரிசனம்; யெகோவாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக போரிட எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க, பிரதிநிதி மக்களிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் யெகோவா சொல்லக்கேட்டோம். ஆமோ 1:11-12யோவே 3:19எசேக் 25:12-14எசேக் 35:3-15ஏசா 63:1-6மல்கி 1:3-4சங் 137:7எரே 6:4-5 இதோ, நான் உன்னை தேசங்களில் சிறுகும்படிச் செய்தேன்; நீ மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கிறாய். ஏசா 23:9எண் 24:18லூக் 1:51-52யோபு 34:25-29மீகா 7:101 சாமு 2:7-8எசேக் 29:15சங் 107:39-40 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த பகுதியிலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றுகிறது. ஏசா 14:13-15நீதி 29:23எரே 49:162இராஜா 14:7ஏசா 16:6ஏசா 47:7-8மல்கி 1:4நீதி 16:18 நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஆமோ 9:2ஆப 2:9ஏசா 14:12-15யோபு 20:6-7எரே 49:16எரே 51:53யோபு 39:27-28 நீ எவ்வளவாகச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடர்களோ, இரவில் கொள்ளையடிக்கிறவர்களோ உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானஅளவு திருடுவார்கள் அல்லவோ? திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ? உபா 24:21எரே 49:92 சாமு 1:19ஏசா 17:6புலம் 1:1ஏசா 14:12ஏசா 24:13எரே 50:23 ஏசாவினுடையவைகள் எவ்வளவாகத் கொள்ளையடிக்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாக ஆராய்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. எரே 49:10தானி 2:22மத் 6:19-20சங் 139:1ஏசா 10:13-14ஏசா 45:3எரே 50:37 உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை. சங் 41:9யோவா 13:18எரே 30:14எரே 49:7எசேக் 23:22-25ஓசி 13:13ஏசா 19:11-14ஏசா 27:11 அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலையிலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 29:14யோபு 5:12-14சங் 33:10ஏசா 19:13-14ஏசா 19:31 கொரி 3:19-20 தேமானே, ஏசாவின் மலையிலுள்ள மனிதர்கள் அனைவரும் கொலையினால் அழிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள். எசேக் 25:13ஆமோ 1:12ஏசா 63:1-3ஆதி 36:11ஏசா 34:5-8எரே 49:22எரே 49:7யோபு 2:11

ஏதோம் தன் சகோதரனை அற்பமாகப் பார்த்தல்

நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் காரணமாக வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவாய். ஆமோ 1:11ஆதி 27:41மல்கி 1:3-4எசேக் 35:9சங் 137:7சங் 89:45எசேக் 25:12-14எசேக் 35:5-7 நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர்கள் அவனுடைய படையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார்கள் அவனுடைய வாசல்களுக்குள் நுழைந்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய். சங் 137:7யோவே 3:3நாகூ 3:10சங் 50:182இராஜா 25:11எரே 52:28-302இராஜா 24:10-16 உன் சகோதரன் அந்நியர்கள்வசமான அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பார்க்காமலும், யூதா மக்களுடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாகப் பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது. நீதி 17:5எசேக் 35:15மீகா 4:111 சாமு 2:3மத் 27:40-43நீதி 24:17-182 பேது 2:18எசேக் 25:6-7 என் மக்களின் ஆபத்து நாளிலே நீ அவர்களுடைய வாசல்களுக்குள் நுழையாமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ விருப்பத்துடன் பார்க்காமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்களுடைய சொத்தில் கைவைக்காமலும், எசேக் 35:5சகரி 1:152 சாமு 16:12எசேக் 35:10சங் 22:17 அவர்களில் தப்பினவர்களை அழிக்க வழிச்சந்திப்புகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடுக்காமலும் இருக்கவேண்டியதாயிருந்தது. ஆமோ 1:6ஆமோ 1:9ஆதி 35:3ஏசா 37:3எரே 30:7ஒபதி 1:12சங் 31:8 எல்லா தேசங்களுக்கும் விரோதமான நாளாகிய யெகோவாவுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். யாக் 2:13ஆப 2:8மத் 7:2எசேக் 30:3நியாயாதி 1:7எரே 49:12எரே 50:29யோவே 3:11-14 நீங்கள் என் பரிசுத்தமலையின்மேல் மதுபானம் குடித்ததுபோலவே எல்லா மக்களும் எப்பொழுதும் மதுபானம் குடிப்பார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இல்லாதவர்களைப்போல் இருப்பார்கள். யோவே 3:17எரே 49:12ஏசா 51:22-23எரே 25:15-161 பேது 4:17ஆப 1:9ஏசா 29:7-8ஏசா 49:25-26

இஸ்ரவேலின் இறுதி வெற்றி

ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பவர்கள் உண்டு, அவர்கள் பரிசுத்தமாக இருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார்கள் தங்களுடைய சொத்துக்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். ஆமோ 9:11-15வெளி 21:27ஏசா 14:1-2யோவே 3:19-21ஆமோ 9:8யோவே 2:32ஏசா 60:21யோவே 3:17 யாக்கோபு வம்சத்தார்கள் நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள் நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்; ஏசா வம்சத்தார்களோ வைக்கோல் துரும்பாக இருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச் சொன்னார். சகரி 12:6ஏசா 10:17எசேக் 37:19மீகா 5:8ஏசா 5:241 கொரி 3:122 சாமு 19:20ஆமோ 5:15 தென்தேசத்தார்கள் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார்கள் பெலிஸ்தரின் தேசத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள். ஆமோ 9:12எரே 32:44செப்ப 2:4-7எசேக் 36:28எசேக் 37:21-25எரே 31:4-6மல்கி 1:4-51 நாளாக 5:26 சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களாகிய இந்தப் படையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப் பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 1 இராஜா 17:9-10லூக் 4:26எரே 32:44எரே 33:13ஆமோ 9:14-15எசேக் 34:12-13ஓசி 1:10-11எரே 13:19 ஏசாவின் மலையை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்துசேர்வார்கள்; அப்பொழுது இராஜ்யம் யெகோவாவுடையதாக இருக்கும். சகரி 14:9யாக் 5:20தானி 7:27வெளி 11:151 தீமோ 4:16ஏசா 19:20சங் 22:281 கொரி 6:2-3