யோவேல் 3

Joel 3
அத்தியாயம் 3

தேவன் தேசங்களை நியாயம்தீர்த்தல்

இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும், செப்ப 3:19-20எரே 30:3எசேக் 39:25ஆமோ 9:14எரே 29:14சங் 85:1உபா 30:3எரே 23:3-8 நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால், சகரி 14:2-4ஏசா 66:16செப்ப 3:8எசேக் 38:22எசேக் 35:10எசேக் 39:11எரே 25:31யோவே 3:12 அவர்கள் என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை விபச்சாரிகளுக்கு விலையாகக் கொடுத்து, மதுபானம் குடிப்பதற்காக பெண் குழந்தைகளைத் திராட்சைரசத்திற்கு விலையாகக் கொடுத்ததினாலும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன். நாகூ 3:10ஆமோ 2:6ஒபதி 1:11வெளி 18:132 நாளாக 28:8-9 தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் அனைத்து எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமில்லாமல் மிகவேகமாக நீங்கள் சரிகட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படிச் செய்வேன். ஆமோ 1:6-10எரே 47:4ஏசா 34:8ஏசா 59:18எசேக் 25:12-17ஏசா 23:1-22 நாளாக 21:162 நாளாக 28:17-18 நீங்கள் என்னுடைய வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, இன்பமும் உயர்ந்ததுமான என் பொருட்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய், 2 நாளாக 21:16-172இராஜா 24:132இராஜா 12:182இராஜா 16:82இராஜா 18:15-161 சாமு 5:2-52இராஜா 25:13-17தானி 11:38 யூதாவின் மக்களையும் எருசலேமின் மக்களையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள். எசேக் 27:13யோவே 3:3உபா 28:68யோவே 3:8உபா 28:32 இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரச்செய்து, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து, ஏசா 43:5-6எரே 23:82 தெச 1:6எரே 30:16எரே 30:10சகரி 10:6-101 சாமு 15:33எஸ்த 7:10 உங்கள் மகன்களையும், மகள்களையும் யூதா மக்களின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தார்களாகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; யெகோவா இதைச் சொன்னார். ஏசா 60:14யோபு 1:15ஏசா 14:1-2நியாயாதி 2:14உபா 32:30எசேக் 23:42நியாயாதி 4:2நியாயாதி 4:9 இதை அந்நியமக்களுக்குள்ளே அறிவியுங்கள்; போருக்கு ஆயத்தம்செய்யுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; போர்வீரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏறிவரட்டும். எரே 46:3-4எசேக் 38:7ஏசா 8:9-10எரே 31:10எசேக் 21:21-22ஏசா 34:1எரே 50:2சங் 96:10 உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. சகரி 12:8மீகா 4:3ஏசா 2:42 நாளாக 25:8லூக் 22:36 சகல மக்களே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஒன்றாக வந்து கூடுங்கள்; யெகோவாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கிவரச்செய்வீராக. ஏசா 13:3செப்ப 3:82 தெச 1:7எசேக் 38:9-18ஏசா 10:34ஏசா 37:36யோவே 3:2மீகா 4:12 மக்கள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள மக்களை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன். யோவே 3:2ஏசா 2:4ஏசா 3:13சங் 96:13சங் 98:9யோவே 3:14மீகா 4:3சங் 7:6 பயிர் முற்றியது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய ஒழுக்கக்கேடு பெரியது. வெளி 14:15-20ஓசி 6:11மாற் 4:29ஏசா 63:3எரே 51:33மத் 13:39உபா 16:9ஆதி 18:20 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே மக்கள் திரள்திரளாக இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது. ஏசா 34:2-8யோவே 3:2பிலி 3:2வெளி 16:14-162 பேது 3:7யோவே 1:15யோவே 2:1வெளி 19:19-21 சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமங்கும். யோவே 2:10யோவே 2:31லூக் 21:25-26மத் 24:29ஏசா 13:10வெளி 6:12-13 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் யெகோவா தமது மக்களுக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் மக்களுக்கு பாதுகாப்பான கோட்டையுமாக இருப்பார். ஆமோ 1:2யோவே 2:10-11எரே 25:30-31ஆகா 2:6ஏசா 42:13எரே 16:19நீதி 18:10எசேக் 38:19 என் பரிசுத்த மலையாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாக இருக்கும்; அந்நியர்கள் இனி அதைக் கடந்துபோவதில்லை. யோவே 2:27ஏசா 52:1நாகூ 1:15ஏசா 4:3வெளி 21:27எரே 31:23யோவே 3:21சகரி 14:20-21

தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆசீர்வதித்தல்

அக்காலத்தில் மலைகள் திராட்சைரசத்தைப் பொழியும், மலைகள் பாலாக ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் கரைபுரண்டு ஓடும்; ஒரு ஊற்று யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும். எசேக் 47:1-12ஏசா 35:6வெளி 22:1-2சகரி 14:8ஆமோ 9:13-14ஏசா 30:25எண் 25:1ஏசா 41:17-18 யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும். ஏசா 19:1-15எரே 51:35சகரி 14:18-192 தெச 1:6ஆமோ 1:11-12எசேக் 25:1-17எசேக் 35:1-15ஏசா 11:15 ஆனால் யூதாவோ நீண்டகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும். எசேக் 37:25ஏசா 33:20ஆமோ 9:15 நான் தண்டிக்காமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டிக்காமல் 1 விடமாட்டேன்; யெகோவா சீயோனிலே வாசமாயிருக்கிறார். எசேக் 36:25ஏசா 4:4வெளி 21:3எசேக் 36:29எசேக் 48:35யோவே 3:17மத் 27:25