ஏசாயா 50

Isaiah 50
அத்தியாயம் 50

இஸ்ரவேலின் பாவமும் ஊழியக்காரனின் கீழ்ப்படிதலும்

யெகோவா சொல்கிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களின்காரணமாக நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களின்காரணமாக உங்களுடைய தாய் அனுப்பிவிடப்பட்டாள். உபா 32:30எரே 3:8மத் 18:252இராஜா 4:1நெகே 5:5ஏசா 52:3உபா 24:1-4ஓசி 2:2-4 நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுமொழி கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கமுடியாதபடிக்கு என் கரம் குறுகிவிட்டதோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கடிந்துகொள்ளுதலினாலே கடலை வற்றச்செய்து, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாற்றமெடுக்கின்றது. ஏசா 59:1ஏசா 66:4எண் 11:23யோசு 3:16ஆதி 18:14நீதி 1:24யாத் 14:21யாத் 7:21 நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன். வெளி 6:12சங் 18:11-12யாத் 10:21மத் 27:45 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். லூக் 21:15எரே 1:9யாத் 4:11-12யோவா 7:15-17நீதி 25:11நீதி 15:23சங் 143:8சங் 119:147 யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. யோவா 14:31எபி 5:8ஏசா 35:5பிலி 2:8யோவா 8:29ஏசா 48:8யோவா 15:10மத் 26:39 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. மத் 26:67மாற் 14:65மாற் 15:19லூக் 22:63-64மத் 27:30ஏசா 53:5புலம் 3:30யோவா 18:22 யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன். எபி 13:6எசேக் 3:8-9யோவா 16:33ஏசா 42:1ரோம 1:16லூக் 9:51சங் 89:21-271 பேது 4:16 என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். ரோம 8:32-34ஏசா 41:1வெளி 12:10ஏசா 41:21ஏசா 43:261 தீமோ 3:16உபா 19:17யாத் 22:9 இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும். யோபு 13:28எபி 1:11-12ஏசா 41:10சங் 102:26ஏசா 51:6-8சங் 39:11 உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக. யோவா 12:46ஏசா 26:3-4மீகா 7:7-9யோவா 8:12சங் 23:4சங் 27:13-14புலம் 3:25-26சங் 25:14 இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும். எரே 17:5-7ரோம 1:21-22யோவா 8:24ரோம 10:3மத் 15:6-8சங் 20:7-8ஏசா 28:15-20யோனா 2:8