எரேமியா 12

Jeremiah 12
அத்தியாயம் 12

எரேமியாவின் முறையீடு

யெகோவாவே, உம்முடன் நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்முடன் நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகம் செய்துவருகிற அனைவரும் சுகமாக இருக்கிறதென்ன? மல்கி 3:15சங் 92:7சங் 37:1சங் 37:35சங் 51:4சங் 73:3-28தானி 9:7ஆப 1:4 நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர். ஏசா 29:13தீத் 1:16மத் 15:8எரே 11:17எசேக் 17:5-10எசேக் 33:31எரே 45:4எசேக் 19:10-13 யெகோவாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களை அகற்றிப்போட்டு, கொலைசெய்யப்படும் நாளுக்கு அவர்களை நியமியும். 2இராஜா 20:3எரே 17:18சங் 139:1-4யாக் 5:5சங் 17:3எரே 50:27சங் 139:23சங் 26:1 எதுவரை தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்புக்காக மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லை என்கிறார்கள். எரே 9:10சங் 107:34ஓசி 4:3எரே 4:25எரே 23:10எரே 5:31எரே 7:20ரோம 8:22

தேவனின் பதில்

நீ காலாட்களுடன் ஓடும்போதே உன்னை சோர்வடையச் செய்தார்களானால், குதிரைகளுடன் எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பெருகிவரும்போது நீ என்ன செய்வாய்? 1 பேது 4:12நீதி 24:10எபி 12:3-4எரே 49:19எரே 50:44சங் 42:7சங் 69:1-2நீதி 3:11 உன் சகோதரரும், உன் தகப்பன் வம்சத்தாரும் உனக்குத் துரோகம்செய்து, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்செய்தார்கள்; அவர்கள் உன்னுடன் இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம். நீதி 26:25எரே 9:4சங் 12:2ஆதி 37:4-11மீகா 7:5-6மத் 10:21எரே 11:19எரே 11:21 நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் பங்கை இழந்துவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய எதிரியின் கையில் ஒப்புக்கொடுத்தேன். ஏசா 2:6சங் 78:59-60எரே 11:15ஓசி 9:15புலம் 2:1-22எசேக் 24:21எசேக் 7:20-21எரே 51:5 என் பங்கு காட்டிலுள்ள சிங்கத்தைப்போல எனக்கானது; அது எனக்கு விரோதமாக கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன். ஆமோ 6:8ஓசி 9:15சகரி 11:8எரே 2:15எரே 51:38 என் பங்கை பலநிறமான பறவையைப்போல 1 எனக்கானது; ஆகையால், பறவைகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியின் எல்லா உயிரினங்களே அதை அழிப்பதற்காக கூடிவாருங்கள். ஏசா 56:9எரே 7:332இராஜா 24:2எசேக் 23:22-25வெளி 19:17-18எசேக் 16:36-37எசேக் 39:17-20எரே 15:3 அநேக மேய்ப்பர்கள் என் திராட்சைத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்திரமாக்கினார்கள். ஏசா 5:1-7ஏசா 63:18எரே 23:1எரே 3:19எரே 6:3லூக் 20:9-16சங் 80:8-16ஏசா 43:28 அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை. ஏசா 42:25எரே 23:10எரே 14:2பிரச 7:2ஏசா 57:1எரே 10:22எரே 10:25எரே 12:4-8 கொள்ளைக்காரர் வனாந்திரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; யெகோவாவுடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனை துவங்கித் தேசத்தின் மறுமுனைவரை அழித்துக் கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை. ஆமோ 9:4எரே 47:6எசேக் 14:17ஏசா 34:6எசேக் 5:2ஏசா 57:21ஏசா 66:15-16எரே 15:2 கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பலனடையமாட்டார்கள்; யெகோவாவுடைய கடுங்கோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள். உபா 28:38ஆகா 1:6மீகா 6:15ஏசா 55:2லேவி 26:16ஆப 2:13எரே 25:37-38எரே 4:26 இதோ, நான் என் மக்களாகிய இஸ்ரவேலுக்குச் சொந்தமாகக் கொடுத்த என் பங்கைத் தொடுகிற கொடியவரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று யெகோவா அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இல்லாமல் பிடுங்கிப்போடுவேன். எரே 3:18சகரி 2:8எரே 49:7சகரி 10:6-12செப்ப 2:8-10உபா 30:3எசேக் 25:1-17ஏசா 11:11-16 அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிறகு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள்தங்கள் சொந்த இடத்திற்கும் தங்கள்தங்கள் பூமிக்கும் திரும்பச்செய்வேன். எரே 49:6எரே 48:47எரே 49:39ஆமோ 9:14உபா 30:3உபா 3:20ஏசா 23:17-18எண் 32:18 பின்பு அவர்கள் என் மக்களுக்குப் பாகாலின்மேல் சத்தியம் செய்ய கற்றுக்கொடுத்ததுபோல, யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் பெயரின்மேல் வாக்குக்கொடுக்க என் மக்களின் வழிகளை நன்றாகக் கற்றுக்கொண்டால், அவர்கள் என் மக்களின் நடுவில் உறுதியாகக் கட்டப்படுவார்கள். எரே 4:2யோசு 23:7செப்ப 1:5உபா 10:20-21எரே 3:17சகரி 2:11எபே 2:19-22ஏசா 45:23 கேட்கவில்லை என்றால் தேசங்களையும் மக்களையும் அழித்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 60:12சங் 2:8-121 பேது 2:6-82 தெச 1:8தானி 11:4தானி 7:4-8எசேக் 19:12எரே 12:14-17