தாவீதின் பாடல்.
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; சங் 37:7நீதி 23:17நீதி 24:19நீதி 3:31நீதி 24:1சங் 73:3கலா 5:21யாக் 4:5-6
நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, சங் 92:7சங் 90:5-6யாக் 1:10-11யோபு 14:2சங் 37:35-36யோபு 20:5-91 பேது 1:24சங் 73:17-20
பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
யெகோவாவை நம்பி நன்மைசெய்; எரே 17:7-8மத் 6:31-33சங் 62:81 கொரி 15:57-58சங் 34:9-10லூக் 22:35சங் 4:5எபி 6:10-12
தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; யோவா 15:7சங் 145:19யோவா 15:16ஏசா 58:141 யோவா 5:14-15சங் 21:1-2யோபு 22:261 பேது 1:8
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, நீதி 16:31 பேது 5:7பிலி 4:6-7மத் 6:25சங் 55:22யாக் 4:15யோபு 22:28லூக் 12:29-30
அவர்மேல் நம்பிக்கையாயிரு;
அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.
உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், ஏசா 54:17யோபு 11:17ஏசா 58:8மீகா 7:8-9மத் 13:43ஏசா 58:10மல்கி 3:18சங் 31:20
உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; யாக் 5:7-11சங் 27:14சங் 62:5எபி 10:36-37புலம் 3:25-26நீதி 20:22ஆப 2:3எரே 12:1
காரியசித்தியுள்ளவன் மேலும்
தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; நீதி 14:29நீதி 16:32யாக் 1:19-20எபே 4:31எபே 4:26யாக் 3:14-18யோபு 5:2கொலோ 3:8
பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; ஏசா 60:21சங் 25:13நீதி 2:21சங் 37:29ஏசா 57:13சங் 37:11-12சங் 55:23ஏசா 58:14
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ
பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; யோபு 24:241 பேது 4:7சங் 103:16சங் 107:42-43சங் 37:35-36எபி 10:36-37யோபு 7:10சங் 52:5
அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மத் 5:5கலா 5:22-23ஏசா 26:3யாக் 3:13சங் 119:165பிலி 4:7ஏசா 48:181 தீமோ 6:11
மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, மீகா 2:1சங் 35:16தானி 8:12மத் 26:16சங் 31:131 சாமு 18:211 சாமு 23:7-92 சாமு 15:10-12
அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; சங் 2:4நீதி 1:261 சாமு 26:10தானி 5:26எசேக் 21:25எசேக் 21:29எரே 50:27யோபு 18:20
அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், நீதி 29:27சங் 11:21 யோவா 3:12நீதி 29:101 சாமு 24:111 சாமு 24:17அப் 12:11அப் 7:52
செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும்,
துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; சங் 7:14-15சங் 35:81 சாமு 31:42 சாமு 17:23ஓசி 1:5ஓசி 2:18எரே 51:56சங் 46:9
அவர்கள் வில்லுகள் முறியும்.
அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதி 16:8நீதி 15:16-171 தீமோ 6:6நீதி 13:25பிரச 4:6நீதி 3:33பிரச 2:26மத் 6:11
நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; ஏசா 41:10சங் 63:8சங் 145:14ஏசா 42:1சங் 37:24சங் 119:116-117சங் 51:12யூதா 1:24
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; சங் 1:6சங் 103:17ரோம 6:232 தீமோ 2:191 பேது 1:4-5சங் 31:7சங் 49:5சங் 73:24
அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, நீதி 10:3சங் 33:19யோபு 5:20-22ஏசா 33:16ஆமோ 5:13எபே 5:16பிரச 9:12மீகா 2:3
பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், சங் 68:2சங் 102:3லூக் 13:3உபா 33:14-16நியாயாதி 5:312 பேது 2:12ஆதி 19:28லேவி 3:3-11
யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல
புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.
துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; எபி 13:16சங் 112:5நீதி 22:7லூக் 6:30சங் 112:9உபா 28:122 கொரி 8:92 கொரி 9:6-15
நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; நீதி 3:331 கொரி 16:22கலா 3:13சங் 37:9கலா 3:10யோபு 5:3மத் 25:41சங் 115:15
அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.
நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், நீதி 16:9சங் 119:133நீதி 4:261 சாமு 2:9சங் 40:2சங் 121:8சங் 85:13எரே 10:23
அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; நீதி 24:16சங் 145:14சங் 94:18மீகா 7:7-8யோவா 10:27-30லூக் 22:31-32சங் 40:2சங் 34:19-20
யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
நான் இளைஞனாயிருந்தேன், எபி 13:5சங் 37:28சங் 112:2சங் 25:131 சாமு 12:222 கொரி 4:9சங் 94:14சங் 71:18
முதிர்வயதுள்ளவனுமானேன்;
ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்,
அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், சங் 112:5சங் 37:21மத் 5:7உபா 15:8-10எரே 32:39லூக் 6:35-38நீதி 20:7சங் 112:9
அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சங் 34:14நீதி 16:61 யோவா 2:16-171 தெச 5:15எபி 13:162 தீமோ 2:19தீத் 2:11-14எபி 13:21
என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; நீதி 2:22சங் 11:7சங் 21:10ஏசா 59:211 பேது 1:5ஏசா 14:20-21ஏசா 61:8யோபு 27:14
அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை;
அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்;
துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.
நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, நீதி 2:21சங் 37:92 பேது 3:13சங் 37:11சங் 37:18வெளி 21:7உபா 30:20வெளி 21:3-4
என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, கொலோ 4:6நீதி 25:11-13எபே 4:29நீதி 15:7மத் 12:35நீதி 10:31நீதி 10:21சங் 71:15
அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; சங் 40:8உபா 6:6ஏசா 51:7சங் 119:11எரே 31:33சங் 37:23சங் 121:3உபா 11:18-20
அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, எரே 20:10லூக் 14:1லூக் 19:47-48லூக் 20:20சங் 10:8-10அப் 9:24லூக் 11:54லூக் 6:7
அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; சங் 109:312 பேது 2:9ரோம 8:1ரோம 8:33-342 தீமோ 4:17சங் 31:7-8சங் 124:6-71 சாமு 23:26-28
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, சங் 27:14நீதி 20:22சங் 37:9மத் 24:13சங் 37:7சங் 52:5-6யோபு 23:10-12நீதி 4:25-27
அவருடைய வழியைக் கைக்கொள்;
அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;
துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் யோபு 5:3யோபு 21:7-17சங் 73:3-11எஸ்த 5:11எசேக் 31:18எசேக் 31:6-10ஏசா 14:14-19யோபு 8:13-19
அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், சங் 37:10அப் 12:22-23யாத் 15:19ஏசா 10:16-19ஏசா 10:33-34யாத் 15:9-10யோபு 20:5-29
அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன்,
அவன் காணப்படவில்லை.
நீ உத்தமனை நோக்கி, ஏசா 32:17ஏசா 57:1-22 தீமோ 4:6-8அப் 7:59-60யோபு 1:1யோபு 42:12-17லூக் 2:25-29நீதி 14:32
செம்மையானவனைப் பார்த்திரு;
அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; நீதி 14:32சங் 52:52 தெச 1:8-9மத் 13:49-50சங் 1:4-6சங் 9:17மத் 13:30மத் 25:46
அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; சங் 9:9சங் 91:15ஏசா 12:2சங் 3:82 தீமோ 4:17சங் 46:1எபே 2:8கொலோ 1:11
இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, ஏசா 31:51 நாளாக 5:20தானி 3:17தானி 6:23ஏசா 46:4தானி 3:281 யோவா 5:18சங் 22:4-5
அவர்களை விடுவிப்பார்;
அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால்,
அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.