நீதிமொழிகள் 13

Proverbs 13
அத்தியாயம் 13

ஞானியின் நடவடிக்கை

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; நீதி 15:5நீதி 9:7-8நீதி 15:20நீதி 10:1நீதி 4:1-141 சாமு 2:25ஏசா 28:14-15நீதி 4:20-22

பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.

மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; நீதி 12:14நீதி 18:20நீதி 10:11நீதி 1:31சங் 140:11ஆப 2:17ஆப 2:8நீதி 1:11-13

துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.

தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; நீதி 21:23நீதி 18:21நீதி 18:7யாக் 3:2-12மத் 12:36-37சங் 39:1யாக் 1:26நீதி 10:19

தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; நீதி 12:24நீதி 12:112 பேது 1:5-11நீதி 10:4நீதி 2:2-9நீதி 11:25யோவா 6:27நீதி 28:25

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;

நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; கொலோ 3:9எபே 4:25சங் 119:163எசேக் 20:43எசேக் 36:31நீதி 3:35வெளி 21:8தானி 12:2

துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.

நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; நீதி 11:3நீதி 11:5-6நீதி 21:12சங் 140:11சங் 15:2சங் 25:21சங் 26:1நீதி 5:22

துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; லூக் 18:11-14வெளி 3:17நீதி 11:24நீதி 12:92 கொரி 4:72 கொரி 6:10யாக் 2:5லூக் 12:21

மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.

மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; மத் 16:261 பேது 1:18-192இராஜா 24:14சங் 49:6-102இராஜா 25:12எரே 39:10யோபு 2:4செப்ப 3:12

தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.

நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; நீதி 24:20நீதி 4:18நீதி 20:20சங் 112:4சங் 97:11யோபு 18:5-6மத் 25:81 இராஜா 11:36

துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.

அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; நீதி 19:20நீதி 12:15-161 தீமோ 6:4நீதி 17:143 யோவா 1:9-10யாக் 3:14-16யாக் 4:1லூக் 22:24

ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; நீதி 20:21நீதி 10:2யாக் 5:1-5நீதி 28:8யோபு 27:16-17நீதி 13:22-23நீதி 27:23-27நீதி 28:20

கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; யோவா 16:22நீதி 13:19சங் 119:81-83நீதி 11:30நீதி 3:18சங் 17:15சங் 69:3சங் 143:7

விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.

திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; எண் 15:312 நாளாக 36:162 யோவா 1:8சங் 119:165எசேக் 20:16எசேக் 20:13சங் 19:11எசேக் 20:24

கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.

ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; நீதி 10:11நீதி 14:27சங் 18:52 சாமு 22:6-7நீதி 16:17நீதி 16:6சங் 116:3நீதி 15:24

அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

நற்புத்தி தயவை உண்டாக்கும்; எரே 2:19நீதி 4:19நீதி 15:10ரோம 6:21அப் 7:10நீதி 3:4சங் 111:10சங் 95:9-11

துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; நீதி 15:2எபே 5:17நீதி 12:22-23பிரச 10:3ஏசா 52:13ரோம 16:191 கொரி 14:201 சாமு 25:10-11

மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; நீதி 25:131 கொரி 4:22 கொரி 5:20எசேக் 33:7-81 தீமோ 1:122 தீமோ 2:2எசேக் 3:182 கொரி 2:17

உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.

புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; நீதி 15:5நீதி 15:31-32நீதி 12:1நீதி 13:13நீதி 25:12நீதி 19:6நீதி 5:9-14நீதி 9:9

கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.

வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; நீதி 13:12வெளி 7:14-17நீதி 29:272 தீமோ 2:19நீதி 16:17சங் 34:142 தீமோ 4:7-8யோபு 28:28

தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.

ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; 1 கொரி 15:33-34நீதி 15:31நீதி 9:62 கொரி 6:14-18சங் 119:63வெளி 18:4மல்கி 3:16நீதி 1:11-19

மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.

பாவிகளைத் தீவினை தொடரும்; சங் 32:10ஏசா 3:10-11நீதி 13:13ரோம 2:7-10ஆதி 4:7சங் 140:11எண் 32:23அப் 28:4

நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பிரச 2:26யோபு 27:16-17நீதி 28:8சங் 37:25சங் 112:2ஆதி 17:7-8சங் 25:12-13எஸ்றா 9:12

பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நீதி 12:11நீதி 28:19பிரச 5:9பிரச 8:5-6சங் 112:5நீதி 27:18நீதி 27:23-27எரே 8:7-10

நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; நீதி 29:17நீதி 23:13-14நீதி 29:15நீதி 19:18எபி 12:6-8நீதி 22:15நீதி 3:12நீதி 8:36

அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; சங் 34:10நீதி 10:3எபி 13:51 தீமோ 4:8உபா 32:24நீதி 6:112 தெச 3:10உபா 28:48

துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.