சங்கீதங்கள் 95

Psalms 95
சங்கீதம் 95

யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, 1 கொரி 10:4சங் 81:12 சாமு 22:47சங் 150:6சங் 96:1-21 நாளாக 16:9யாத் 15:21சங் 47:6-7

நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள்.

துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, எபே 5:19சங் 100:4எரே 31:12-13சங் 105:2மீகா 6:6சங் 100:2சங் 17:13யாக் 5:13

பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம்.

யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். சங் 96:4எரே 10:6-7சங் 145:3சங் 135:5சங் 97:9யாத் 18:11மத் 5:35சங் 47:2

பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; சங் 135:6ஆப 3:6ஆப 3:10நாகூ 1:5யோபு 9:5மீகா 1:4யோபு 11:10சங் 65:6

மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.

கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; ஆதி 1:9-10நீதி 8:29எரே 5:22யோபு 38:10-11யோனா 1:9சங் 146:6சங் 33:7நீதி 8:26

காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.

நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக பிலி 2:10சங் 100:3எபே 3:14சங் 95:11 கொரி 6:20தானி 6:10ஏசா 54:52 நாளாக 6:13

நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.

அவர் நம்முடைய தேவன்; எபி 4:7எபி 3:15வெளி 3:20எபி 3:7-11யோவா 10:14-16சங் 48:141 பேது 2:25சங் 74:1

நாம் அவர் மேய்ச்சலின் மக்களும்,

அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், யாத் 17:7எபி 3:8-9எண் 20:13எண் 14:11எபி 3:15-19எண் 14:221 சாமு 6:6உபா 6:16

வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல,

உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.

அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, எண் 14:221 கொரி 10:9சங் 78:56சங் 78:17-18சங் 78:40-41யோவா 15:24மத் 11:20-22

என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள்.

நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து, எபி 3:17எபி 3:9-10நீதி 1:22-29அப் 13:18ஏசா 63:17அப் 7:36உபா 2:14-16எரே 9:6

அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும்,

என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,

என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று, எபி 4:3எண் 14:23எபி 3:11எபி 4:5எபி 3:18எரே 6:16மத் 11:28-29உபா 1:34-35

என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.