சங்கீதங்கள் 78

Psalms 78
சங்கீதம் 78

ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல்.

என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; ஏசா 51:4ஏசா 55:32 நாளாக 15:1-16நியாயாதி 5:3நீதி 8:4-6சங் 49:1-3சங் 50:7சங் 74:1

என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.

என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; மத் 13:34-35மத் 13:11-13மாற் 4:34சங் 49:4நீதி 1:6

ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.

அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; சங் 44:1யாத் 12:26-27யாத் 13:14-15யாத் 13:8சங் 48:8

எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், உபா 11:19உபா 4:9யோவே 1:3சங் 145:4-6உபா 6:7சங் 71:17-18சங் 10:1-5யோசு 4:6-7

யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும்,

அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.

அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, எபே 6:4உபா 4:45உபா 6:7ஆதி 18:19சங் 81:5உபா 11:19ஏசா 38:19ஏசா 8:20

இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி,

அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி

நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, யோவே 1:3சங் 102:18உபா 4:10எஸ்த 9:28சங் 145:4சங் 22:31சங் 90:16யோசு 22:24-25

அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;

தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, உபா 5:29வெளி 14:121 யோவா 5:3உபா 4:9யோவா 14:21-241 யோவா 3:22-24எரே 17:7-8உபா 8:11

தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;

இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், சங் 78:37யாத் 32:92இராஜா 17:14எசேக் 20:18உபா 31:27அப் 7:512 நாளாக 30:7உபா 9:13

தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய

தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் 1 சாமு 31:1உபா 1:41-44யோசு 17:16-18சங் 78:571 சாமு 4:10நியாயாதி 20:39நியாயாதி 9:281 நாளாக 12:2

யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.

அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், உபா 31:20உபா 31:16நியாயாதி 2:10-12நெகே 9:26-292இராஜா 17:14-15எரே 31:32

அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,

அவருடைய செயல்களையும், சங் 106:13உபா 32:18எரே 2:32சங் 106:21-22சங் 78:7

அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, எண் 13:22எசேக் 30:14ஏசா 19:11உபா 6:22யாத் 7:1ஏசா 19:13சங் 135:9உபா 4:34

அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.

கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, யாத் 14:21யாத் 15:8யோசு 3:16சங் 106:9-10சங் 136:13-15சங் 66:61 கொரி 10:2-3ஆப 3:15

தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.

பகலிலே மேகத்தினாலும், சங் 105:39யாத் 13:21-22யாத் 14:24யாத் 40:35-38நெகே 9:12நெகே 9:19

இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, யாத் 17:6எண் 20:11சங் 105:411 கொரி 10:4சங் 114:8ஏசா 41:18ஏசா 43:20ஏசா 48:21

மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.

கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, எண் 20:10-11உபா 8:15எண் 20:8சங் 105:41உபா 9:21

தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.

என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, ஏசா 63:10உபா 9:8எபி 3:16-19உபா 9:12-22சங் 106:13-32சங் 95:8-10சங் 78:32

பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.

தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, எண் 11:4உபா 6:161 கொரி 10:9சங் 106:14-151 கொரி 10:6யாத் 16:2-3யாக் 4:2-3சங் 95:9

தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: எண் 21:5எண் 11:4யாத் 16:3யாத் 16:8-10சங் 23:5எண் 11:13எண் 20:3யோபு 34:37

தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?

இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; எண் 20:11எண் 11:21-23ஆதி 18:12-14எண் 11:18சங் 78:41யாத் 17:6-7

அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ?

தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.

ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; 1 கொரி 10:11யூதா 1:5எண் 11:1-3எபி 12:29எண் 11:101 கொரி 10:5உபா 32:22சங் 78:31

அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும்,

அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,

யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; எபி 3:18-19யூதா 1:5உபா 1:32எபி 11:6எபி 3:121 யோவா 5:10ஏசா 7:9சங் 106:24

இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.

அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, ஆதி 7:11மல்கி 3:102இராஜா 7:19சங் 33:92இராஜா 7:2ஏசா 5:6

வானத்தின் கதவுகளைத் திறந்து,

மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, யாத் 16:4சங் 105:40உபா 8:3யோவா 6:31-71யாத் 16:14நெகே 9:15நெகே 9:20சங் 68:9

வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; யாத் 16:8மத் 14:20மத் 15:37சங் 103:20

அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.

வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, எண் 11:31சங் 135:7

தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,

இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து, யாத் 16:12-13எண் 11:18-19எண் 11:32

அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.

அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; எண் 11:19-20சங் 106:15

அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.

அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; எண் 11:33-34லூக் 16:19-23எண் 22:20-22நீதி 1:32

அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, ஏசா 10:16

அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.

இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், யோவா 12:37எசேக் 20:13லூக் 16:31சங் 78:22எண் 14:1-45சங் 78:11எண் 16:1-17எண் 21:1-6

பின்னும் பாவஞ்செய்தார்கள்.

ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், எண் 14:35எண் 14:29எண் 26:64-65உபா 2:14-16பிரச 12:13-14பிரச 1:13-14பிரச 1:2பிரச 12:8

அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.

அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, ஓசி 5:15எண் 21:7நியாயாதி 3:12-15ஓசி 7:14ஏசா 26:6நியாயாதி 10:7-10நியாயாதி 3:8-9நியாயாதி 4:3

அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உபா 32:4ஏசா 41:14யாத் 15:13தீத் 2:14உபா 32:15உபா 7:8ஏசா 48:17உபா 15:15

உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.

ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, எசேக் 33:31ஏசா 29:13உபா 5:28-29ஓசி 11:12ஏசா 57:11சங் 106:12-13சங் 18:44

தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.

அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அப் 8:21சங் 78:8சங் 51:10உபா 31:20ஓசி 10:2ஓசி 7:14ஓசி 7:16சங் 119:80

அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.

அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; எசேக் 20:17ஏசா 48:9எண் 14:18-202இராஜா 21:20யாத் 34:6-9எசேக் 20:13-14எசேக் 20:21-22ஏசா 44:21-22

அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல்,

அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். ஆதி 6:3யாக் 4:14யோபு 7:7யோபு 7:16யோபு 10:9சங் 103:14-16யோவா 3:6

எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, எபே 4:30சங் 95:8-10எபி 3:15-17ஏசா 63:10எண் 14:11உபா 9:21-22ஏசா 7:13சங் 106:14-33

பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.

அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, எண் 14:22எபி 3:8-11அப் 7:39உபா 6:162 பேது 2:21-22எண் 14:4சங் 78:19-202இராஜா 19:22

இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.

அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள். நியாயாதி 8:34எரே 32:21யாத் 14:12சங் 78:11சங் 106:7-10சங் 136:10-15யாத் 13:9ஏசா 11:11

அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், யாத் 4:21உபா 6:22யாத் 3:19-20உபா 4:34யாத் 7:3நெகே 9:10சங் 105:27-38சங் 135:9

சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய சங் 105:29யாத் 7:17-21வெளி 16:3-6

ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.

அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், யாத் 8:21-24யாத் 8:2-15சங் 105:30-31வெளி 16:3

அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், யாத் 10:12-15சங் 105:34-35ஆமோ 7:1-2யோவே 1:4-7யோவே 2:25வெளி 9:2-11

அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.

கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், யாத் 9:18-34சங் 105:32-33

ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,

அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், யாத் 9:19யாத் 9:28

அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.

தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், 1 இராஜா 22:21-222 சாமு 24:16யாத் 12:13யாத் 15:7புலம் 4:11சங் 11:6ஏசா 42:25யோபு 1:12

பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், எசேக் 7:42 பேது 2:4-5யாத் 9:3-6எசேக் 8:18எசேக் 9:10ரோம 8:32எசேக் 5:11எசேக் 7:9

அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், சங் 105:23சங் 106:22சங் 135:8சங் 105:36சங் 136:10யாத் 12:29-30யாத் 13:15யாத் 12:12

காமின் 1 கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;

தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, நெகே 9:12சங் 77:20ஏசா 63:11-14யோவா 10:11-42ஏசா 40:11லூக் 15:4-6சங் 100:3சங் 105:37

அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;

அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; யாத் 14:19-20யாத் 15:10யாத் 14:27-28யாத் 14:15எபி 11:29சங் 136:15

அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.

அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், யாத் 15:17சங் 44:3தானி 11:45தானி 9:16-20எபே 1:14யாத் 15:13ஏசா 11:9சங் 68:16

தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,

அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, யோசு 13:7சங் 44:2நெகே 9:22-25உபா 6:10-12யோசு 6:1-21எண் 33:54சங் 105:44-45சங் 136:18-22

தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு,

அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, நியாயாதி 2:11-122இராஜா 17:7-23உபா 31:16-20உபா 32:15-21எசேக் 16:15-26நெகே 9:25-26சங் 78:40-41

அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,

தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, ஓசி 7:16எசேக் 20:27-28நியாயாதி 3:5-7சங் 78:8நியாயாதி 3:12சங் 78:10-37சங் 78:41

துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,

தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, உபா 32:21லேவி 26:301 கொரி 10:221 இராஜா 12:311 இராஜா 11:7உபா 12:2உபா 32:16-17யாத் 20:4-5

தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.

தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, சங் 106:40புலம் 2:7உபா 32:19ஆதி 18:20-21லேவி 20:23லேவி 26:44சங் 11:4சங் 14:2-5

இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,

தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள 2 வாசஸ்தலத்தை விட்டுவிலகி, யோசு 18:11 சாமு 4:4-11எரே 26:6-91 சாமு 1:3எரே 7:12-14

தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, சங் 132:81 சாமு 4:171 சாமு 4:21நியாயாதி 18:302 நாளாக 6:41யாத் 40:34சங் 24:7சங் 63:2

தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். 1 சாமு 4:2சங் 89:381 சாமு 4:10-11ஏசா 64:9

அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, எரே 7:34எரே 16:9எண் 11:1உபா 29:20உபா 32:22ஏசா 4:1எரே 25:10சங் 78:21

அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.

அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், 1 சாமு 4:17யோபு 27:151 சாமு 22:18-191 சாமு 4:11எசேக் 24:231 சாமு 2:33-341 சாமு 4:19-20

அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், சங் 44:23ஏசா 51:9சங் 7:6ஏசா 42:13-14சங் 73:20

திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,

தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, 1 சாமு 5:6எரே 23:40யோபு 40:121 சாமு 6:4

அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.

அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; 1 சாமு 6:212 சாமு 6:172 சாமு 6:2

எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,

யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். சங் 87:2ஆதி 49:8-10சங் 132:12-141 சாமு 16:12 நாளாக 6:6ரூத் 4:17-22

தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், 1 இராஜா 6:1-38ஏசா 51:61 நாளாக 29:11 நாளாக 29:191 இராஜா 9:81 சாமு 2:82 நாளாக 2:92 நாளாக 3:4

என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.

தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, 1 சாமு 16:11-12அப் 13:221 இராஜா 19:19-201 சாமு 17:15-542 சாமு 3:182 சாமு 6:212 சாமு 7:8ஆமோ 7:14-15

ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, 2 சாமு 5:21 நாளாக 11:21 பேது 5:21 சாமு 10:11 சாமு 2:7-8எசேக் 34:23-24ஆதி 33:13ஏசா 40:11

தம்முடைய மக்களாகிய யாக்கோபையும்

தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக,

அழைத்துக்கொண்டுவந்தார்.

இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, 1 இராஜா 9:42 தீமோ 2:15ஏசா 11:2-41 இராஜா 15:5அப் 13:22சங் 101:1-81 இராஜா 3:281 இராஜா 3:6-9

தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.