பிரசங்கி 12

Ecclesiastes 12
அத்தியாயம் 12

காரியத்தின் முடிவு

நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்., புலம் 3:27பிரச 11:8சங் 71:17-18நீதி 22:6லூக் 18:16சங் 34:112 தீமோ 3:151 சாமு 16:12-13 சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், இருளாகாமல் இருப்பதற்கு முன்னும், ஏசா 5:301 சாமு 3:21 சாமு 4:151 சாமு 4:18பிரச 11:7-8எசேக் 32:7-8ஆதி 27:1ஆதி 48:10 மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதால் ஓய்ந்து, ஜன்னல் வழியாகப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், சங் 90:9-10சங் 102:231 சாமு 3:22 சாமு 21:15-17ஆதி 27:1ஆதி 48:10சகரி 8:4 எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும், 1 எரே 25:102 சாமு 19:35வெளி 18:22 மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், யோபு 17:13எரே 9:17-20யோபு 30:23நீதி 16:31ஆதி 50:3-10யோபு 15:10லேவி 19:32சங் 49:10-14 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, சகரி 4:2-3 இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை. தானி 12:2பிரச 3:20-21சங் 146:4ஆதி 3:19யோபு 34:14-15சகரி 12:1ஏசா 57:16ஆதி 2:7 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். பிரச 1:2பிரச 6:12பிரச 8:8பிரச 1:14பிரச 2:17பிரச 4:4சங் 62:9 மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் மக்களுக்கு அறிவைப் போதித்து, கவனமாகக் கேட்டு ஆராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். 1 இராஜா 4:32நீதி 1:1நீதி 25:11 இராஜா 10:8நீதி 10:11 இராஜா 8:12-21 இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். கொலோ 1:51 தீமோ 1:15நீதி 16:21-24நீதி 1:1-6நீதி 15:26நீதி 22:17-21நீதி 25:11-12நீதி 8:6-10 ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் 2 அளிக்கப்பட்டது. அப் 2:37எபி 4:12எரே 23:29எசேக் 34:232 கொரி 10:4ஏசா 40:11யோவா 3:10நீதி 1:6 என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. பிரச 1:18யோவா 21:252 பேது 1:19-21யோவா 5:391 இராஜா 4:32லூக் 16:29-31யோவா 20:31 காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே. உபா 10:12மீகா 6:8உபா 6:2சங் 111:10யோபு 28:28சங் 145:19லூக் 1:50பிரச 8:12 ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். 2 கொரி 5:10ரோம 2:16மத் 12:361 கொரி 4:5மத் 10:26ரோம 14:10-12பிரச 11:9லூக் 12:1-2