1 இராஜாக்கள் 4

1 Kings 4
அத்தியாயம் 4

சாலொமோனின் அதிகாரிகளும் அதிபதிகளும்

ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான். 1 நாளாக 12:381 இராஜா 11:131 இராஜா 11:35-361 இராஜா 12:19-202 நாளாக 9:302 சாமு 5:5பிரச 1:12 அவனுக்கு இருந்த அதிகாரிகள்: சாதோக்கின் மகனாகிய அசரியா ஆசாரியனாக இருந்தான். 1 கொரி 12:28யாத் 18:211 நாளாக 27:171 நாளாக 6:8-102 சாமு 20:23-262 சாமு 8:15-18 சீசாவின் மகனாகிய ஏலிகோரேப்பும் அகியாவும் எழுத்தர்களாக இருந்தார்கள்; அகிலூதின் மகன் யோசபாத் மந்திரியாக இருந்தான். 2 சாமு 8:161 நாளாக 18:151 நாளாக 18:62 சாமு 20:24-25ஏசா 62:6 யோய்தாவின் மகன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள். 1 இராஜா 2:351 இராஜா 2:26-27 நாத்தானின் மகன் அசரியா அலுவலர்களின் தலைவனாக இருந்தான்; நாத்தானின் மகன் சாபூத் ராஜாவின் ஆசாரியனும் நண்பனாகவும் இருந்தான். 1 நாளாக 27:332 சாமு 15:372 சாமு 16:161 இராஜா 1:10-531 இராஜா 4:72 சாமு 12:1-152 சாமு 12:252 சாமு 19:37-38 அகீஷார் அரண்மனை அதிகாரியும், அப்தாவின் மகன் அதோனீராம் கட்டாய வேலை செய்கிறவர்களின் அதிகாரியாக இருந்தான். 1 இராஜா 12:181 இராஜா 9:152 சாமு 20:241 இராஜா 5:13-14 ராஜாவிற்கும் அவனுடைய அரண்மனையில் உள்ளவர்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு அதிகாரிகள் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்திற்கு ஒவ்வொருவராக வருடம் முழுவதும் பராமரித்துவந்தார்கள். 1 நாளாக 27:1-15 அவர்களின் பெயர்கள்: ஊரின் மகன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான். யோசு 24:33நியாயாதி 17:1நியாயாதி 19:1 தேக்கேரின் மகன், இவன் மாகாத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான். 1 சாமு 6:121 சாமு 6:20நியாயாதி 1:35யோசு 19:42யோசு 21:16 ஏசேதின் மகன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோக்கோவும் எப்பேர் பூமியனைத்தும் இவனுடைய விசாரிப்பில் இருந்தது. யோசு 12:17யோசு 15:35யோசு 17:2 அபினதாபின் மகன், இவன் தோரின் நாட்டுப்புறம் அனைத்திற்கும் அதிகாரியாக இருந்தான்; சாலொமோனின் மகளாகிய தாபாத் இவனுக்கு மனைவியாக இருந்தாள். யோசு 11:2யோசு 12:23யோசு 17:11நியாயாதி 1:27 அகிலூதின் மகனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான்துவங்கி ஆபேல் மெகொலாவரை யக்மெயாமுக்கு மறுபக்கம்வரை இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது. யோசு 17:111 இராஜா 19:16நியாயாதி 5:19யோசு 3:161 நாளாக 6:681 இராஜா 18:461 இராஜா 7:461 சாமு 31:10 கேபேரின் மகன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் பட்டணமும் இவன் விசாரிப்பில் இருந்தது. உபா 3:4எண் 32:411 இராஜா 22:32இராஜா 9:12இராஜா 9:14உபா 3:13-14உபா 3:8உபா 4:43 இத்தோவின் மகன் அகினதாப், இவன் மகனாயீமில் இருந்தான். 2 சாமு 17:242 சாமு 17:272 சாமு 2:8ஆதி 32:2யோசு 13:26 அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான். 1 இராஜா 4:111 சாமு 18:182 சாமு 15:27யோசு 19:32-39 ஊசாயின் மகன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான். 2 சாமு 15:32யோசு 19:24-31 பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான். யோசு 19:17-23 ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான். 1 இராஜா 1:8யோசு 18:20-28சகரி 12:13 ஊரியின் மகன் கேபேர், இவன் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாக இருந்தான். உபா 2:26யோசு 13:9-12எண் 21:21-35

சாலொமோனுக்கு ஒதுக்கப்பட்ட அனுதின உணவு

யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். 1 இராஜா 3:8ஆதி 22:17ஆதி 32:121 நாளாக 12:391 சாமு 30:16அப் 2:46பிரச 2:24ஆதி 13:16 நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள். ஆதி 15:18யோசு 1:4சங் 68:291 இராஜா 4:242 நாளாக 9:26-31யாத் 23:312 நாளாக 17:52 நாளாக 32:23 ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும். நெகே 5:17-18 நதிக்கு இந்த பக்கத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு காசாவரை உள்ளவைகள் எல்லாவற்றையும், நதிக்கு இந்தப்பக்கத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாக இருந்தது. 1 நாளாக 22:9சங் 72:111 இராஜா 4:211 இராஜா 5:4ஆதி 10:19எபி 7:1-2ஏசா 9:7லூக் 2:14 சாலொமோனுடைய நாட்களெல்லாம் தாண் துவங்கி பெயெர்செபாவரையும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சைச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள். மீகா 4:4சகரி 3:102இராஜா 18:31நியாயாதி 20:1எரே 23:5-6எரே 33:15-162 சாமு 17:112 சாமு 24:15 சாலொமோனுக்கு 4,000 குதிரைலாயங்களும், 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். 2 நாளாக 1:142 நாளாக 9:252 சாமு 8:41 இராஜா 10:25-26உபா 17:16சங் 20:7 மேற்சொல்லிய அதிகாரிகளில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவிற்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் தேவையானவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து, குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தேவையான வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவருவார்கள். எஸ்த 8:10எஸ்த 8:14மீகா 1:13

சாலொமோனின் ஞானம்

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார். 1 இராஜா 3:12யாக் 3:171 இராஜா 4:20பிரச 2:26யாக் 1:17யாக் 1:52 நாளாக 1:10-12ஏசா 60:5 சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது. தானி 5:11-12ஆதி 25:6அப் 7:22தானி 1:20யோபு 1:3ஏசா 19:11-12மத் 2:1மத் 2:16 அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது. 1 நாளாக 15:191 நாளாக 2:61 இராஜா 3:121 நாளாக 6:33லூக் 11:31மத் 12:42சங் 89:1-521 நாளாக 15:17 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. மத் 13:35நீதி 1:1-31உன்னத 1:1-17பிரச 12:9 லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான். 2இராஜா 19:23சங் 51:7சங் 92:12யாத் 12:22ஆதி 1:20-25எபி 9:19எண் 19:18எண் 24:6 சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள். 2 நாளாக 9:231 இராஜா 10:12 நாளாக 9:1ஏசா 2:2சகரி 8:23