நியாயாதிபதிகள் 3

Judges 3
அத்தியாயம் 3

யெகோவா இஸ்ரவேலர்களின் போர்த்திறமையை சோதித்தல்

கானான் தேசத்தில் நடந்த எல்லா யுத்தங்களையும் அறியாமலிருந்த இஸ்ரவேலர்களாகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், நியாயாதி 2:21-22உபா 7:22நீதி 17:31 பேது 4:12உபா 8:16உபா 8:2நியாயாதி 2:10எரே 6:27 இஸ்ரவேலின் புதிய சந்ததியாரும், அதற்கு முன்பு யுத்தம் செய்ய அறியாமலிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் யெகோவா விட்டுவைத்தவர்கள் யாரென்றால்: 2 தீமோ 2:31 கொரி 9:26-271 தீமோ 6:122 நாளாக 12:82 தீமோ 4:7எபே 6:11-18ஆதி 2:17ஆதி 3:5 பெலிஸ்தர்களின் ஐந்து அதிபதிகளும், எல்லா கானானியர்களும், சீதோனியர்களும், பாகால் எர்மோன் துவங்கி ஆமாத்திற்குள் நுழையும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியர்களுமே. யோசு 13:3யோசு 13:51 சாமு 13:19-231 சாமு 13:51 சாமு 29:21 சாமு 4:1-21 சாமு 6:18உபா 1:7 யெகோவா மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள். நியாயாதி 2:22நியாயாதி 3:11 கொரி 11:19உபா 33:8உபா 8:2யாத் 15:252 தெச 2:9-12 இப்படி இஸ்ரவேல் மக்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களாகிய இவர்களின் நடுவே குடியிருந்து, சங் 106:34-38யாத் 3:17யாத் 3:8ஆதி 10:15-18உபா 7:1ஆதி 15:19-21நியாயாதி 1:29-32யோசு 9:1 அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள். யாத் 34:16உபா 7:3-41 இராஜா 11:1-5எசேக் 16:3எஸ்றா 9:11-12நெகே 13:23-27

முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்

இப்படி இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் தொழுதுகொள்கிறபோது, யாத் 34:132இராஜா 23:6உபா 4:91 இராஜா 16:331 இராஜா 18:192 நாளாக 15:162 நாளாக 24:182 நாளாக 33:19 யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம் கொண்டு அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் மக்கள் கூசான்ரிஷதாயீமை எட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள். நியாயாதி 2:14ஆப 3:7நியாயாதி 4:9சங் 85:31 சாமு 12:9உபா 29:20உபா 32:30யாத் 22:24 இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா இஸ்ரவேல் மக்களை காப்பாற்றும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய மகனான ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பச்செய்தார். நியாயாதி 3:15நியாயாதி 1:13சங் 22:5நியாயாதி 10:10நியாயாதி 6:7நியாயாதி 2:16நியாயாதி 4:3சங் 107:13-19 அவன்மேல் யெகோவாவுடைய ஆவி வந்து அவனை பெலப்படுத்தியதால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்செய்யப் புறப்பட்டான்; யெகோவா மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவனுடைய கை கூசான்ரிஷதாயீமின்மேல் பெலங்கொண்டது. 1 சாமு 11:6நியாயாதி 11:29நியாயாதி 13:25நியாயாதி 14:19நியாயாதி 14:62 நாளாக 15:1நியாயாதி 6:34எண் 24:2 தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான். நியாயாதி 3:30நியாயாதி 5:31நியாயாதி 8:28யோசு 11:23எஸ்த 9:221 நாளாக 4:13நியாயாதி 3:9யோசு 15:17

நியாயாதிபதியாகிய ஏகூத்

இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அவர்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தபடியால், யெகோவா எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு எதிராக பெலனடையச் செய்தார். 1 சாமு 12:9நியாயாதி 2:19யோவா 19:112இராஜா 5:1தானி 4:22தானி 5:18யாத் 9:16எசேக் 38:16 அவன் அம்மோனிய மக்களையும் அமலேக்கியர்களையும் அழைத்துக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறியடித்தான்; பேரீச்சை மரங்களின் பட்டணத்தையும் பிடித்தான். நியாயாதி 1:16உபா 34:3நியாயாதி 5:14சங் 83:6-7 இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள். லேவி 26:23-25உபா 28:40உபா 28:47-48 இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பச்செய்தார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்தான்; அவனுடைய கையிலே இஸ்ரவேல் மக்கள் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள். நியாயாதி 3:9சங் 78:34ஏசா 36:16நியாயாதி 20:16எரே 33:31 நாளாக 12:21 சாமு 10:27எரே 29:12-13 ஏகூத், இருபுறமும் கூர்மையான ஒரு முழ நீளமுமான ஒரு பட்டயத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஆடைக்குள்ளே தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டிக்கொண்டு, எபி 4:12சங் 45:3வெளி 2:12நியாயாதி 3:21சங் 149:6வெளி 1:16உன்னத 3:8 காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் பருமனான மனிதனாக இருந்தான். எசேக் 34:20யோபு 15:27நியாயாதி 3:29எரே 5:28எரே 50:11சங் 73:191 சாமு 2:29சங் 73:7 அவன் காணிக்கையைச் செலுத்தி முடிந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த மக்களை அனுப்பிவிட்டான். அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற அனைவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள். யோசு 4:202இராஜா 9:5-6அப் 23:18-19நியாயாதி 3:20ஆதி 45:1 ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான். எரே 10:7ஆமோ 3:152 சாமு 12:1-152 சாமு 24:12நியாயாதி 3:19மீகா 6:9சங் 29:1 உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான். 1 சாமு 15:332 கொரி 5:16யோபு 20:25எண் 25:7-8சகரி 13:3 கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; கத்தி முனை பின்புறமாக வந்தது. ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான். அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள். 1 சாமு 24:3 அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல்வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே செத்துக்கிடந்தான். அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான். அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனோடு மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து: 1 சாமு 13:3நியாயாதி 6:342இராஜா 9:132 சாமு 20:22நியாயாதி 17:1நியாயாதி 19:1நியாயாதி 5:14நியாயாதி 7:24 என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; யெகோவா உங்கள் எதிரிகளாகிய மோவாபியர்களை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைமுகத்தைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவிடாமல், நியாயாதி 12:51 சாமு 17:47நியாயாதி 7:15நியாயாதி 7:9யோசு 2:7நியாயாதி 7:24நியாயாதி 4:10நியாயாதி 7:17 அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் 10,000 பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. உபா 32:15நியாயாதி 3:17யோபு 15:27சங் 17:10 இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் 80 வருடங்கள் அமைதலாக இருந்தது. நியாயாதி 3:11நியாயாதி 5:31

நியாயாதிபதியாகிய சம்கார்

அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் 600 பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான். நியாயாதி 5:61 கொரி 1:171 சாமு 17:471 சாமு 17:501 சாமு 13:19-22நியாயாதி 15:15நியாயாதி 2:16நியாயாதி 5:8