நியாயாதிபதிகள் 2

Judges 2
அத்தியாயம் 2

போகீமில் யெகோவாவுடைய தூதன்

யெகோவாவுடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும், யாத் 20:2யாத் 23:20ஆதி 17:7-8லேவி 26:42சங் 105:44-45அப் 7:30-33யாத் 14:14யாத் 14:19 நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்? உபா 7:2-4எரே 2:36உபா 7:16எஸ்றா 9:1-3எரே 2:5எண் 33:52-532 கொரி 6:14-17உபா 12:2-3 ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார். யோசு 23:13எண் 33:55சங் 106:36உபா 7:16யாத் 23:33யாத் 34:12நியாயாதி 2:21நியாயாதி 3:6 யெகோவாவுடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள். 2 கொரி 7:10யாக் 4:91 சாமு 7:6எஸ்றா 10:1எரே 31:9லூக் 6:21லூக் 7:38நீதி 17:10 அந்த இடத்திற்கு போகீம் 1 என்று பெயரிட்டு, அங்கே யெகோவா வுக்குப் பலிசெலுத்தினார்கள். 1 சாமு 7:9ஆதி 35:8நியாயாதி 13:19நியாயாதி 6:24யோசு 7:26

கீழ்ப்படியாமையும், தோல்வியும்

யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள். யோசு 24:28-31யோசு 22:6 யோசுவாவின் எல்லா நாட்களிலும் யெகோவா இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் யெகோவாவைத் தொழுது கொண்டார்கள். பிலி 2:122இராஜா 12:2யோசு 24:312 நாளாக 24:14-222 நாளாக 24:2 நூனின் மகனான யோசுவா என்னும் யெகோவாவின் ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக இறந்துபோனான். யோசு 24:29-30 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள். யோசு 19:50யோசு 24:30 அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது. 1 சாமு 2:12தீத் 1:16யாத் 5:21 நாளாக 28:9அப் 13:36எரே 31:342 சாமு 7:12உபா 31:16 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது, நியாயாதி 10:6நியாயாதி 3:7நியாயாதி 4:1நியாயாதி 6:11 இராஜா 18:18நியாயாதி 8:33நியாயாதி 13:11 சாமு 7:4 தங்களுடைய முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய யெகோவாவைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். யாத் 20:5உபா 13:5உபா 29:25உபா 6:14-15உபா 29:18உபா 5:9உபா 31:16-17உபா 32:15 அவர்கள் யெகோவாவைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள். நியாயாதி 10:6சங் 106:361 கொரி 10:20-22நியாயாதி 3:71 கொரி 8:51 இராஜா 11:331 இராஜா 11:51 சாமு 31:10 அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார். 2இராஜா 17:20சங் 106:40-42உபா 32:30உபா 31:17-182 நாளாக 36:16நியாயாதி 10:7நியாயாதி 3:7-8நியாயாதி 4:2 யெகோவா அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்களெல்லாம் யெகோவாவுடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள். உபா 28:15-68யோசு 23:15-16லேவி 26:14-461 சாமு 13:61 சாமு 14:241 சாமு 30:62 கொரி 4:8உபா 32:40-41 யெகோவா நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள். அப் 13:201 சாமு 12:11சங் 106:43-45நியாயாதி 3:15நெகே 9:27நியாயாதி 3:9-10நியாயாதி 4:5நியாயாதி 6:14 அவர்கள் தங்களுடைய நியாயாதிபதிகளின் சொல்லைக் கேட்காமல், அந்நிய தெய்வங்களுக்குத் தங்களை விலைமாதர்களைப்போல ஒப்புக்கொடுத்து, அவைகளைத் தொழுதுகொண்டார்கள்; தங்களுடைய பிதாக்கள் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, பிதாக்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள். உபா 9:12கலா 1:6நியாயாதி 2:7ஓசி 2:2வெளி 17:1-51 சாமு 12:121 சாமு 12:171 சாமு 12:19 யெகோவா அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, யெகோவா நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, யெகோவா துக்கப்படுவார். உபா 32:36யோசு 1:5யாத் 2:242இராஜா 13:22-23ஓசி 11:8சங் 106:44-452இராஜா 13:4ஆதி 6:6 நியாயாதிபதி மரித்தவுடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, பணிவிடை செய்யவும், தொழுதுகொள்ளவும், தங்களுடைய பிதாக்களைவிட இழிவாக நடந்து, தங்களுடைய தீய செய்கைகளையும் தங்களுடைய முரட்டாட்டமான வழிகளையும் விடாதிருப்பார்கள். நியாயாதி 8:33நியாயாதி 4:12 நாளாக 24:17-18நியாயாதி 3:11-12மத் 23:32எரே 23:171 சாமு 15:23நியாயாதி 2:7 ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி: இந்த மக்கள் தங்களுடைய பிதாக்களுக்கு நான் கற்பித்த என்னுடைய உடன்படிக்கையை மீறி என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனதினால், நியாயாதி 2:14யோசு 23:16உபா 29:10-13உபா 32:22யாத் 24:3-8யாத் 32:10-11எசேக் 20:37நியாயாதி 10:7 யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன். யோசு 23:13எசேக் 20:24நியாயாதி 2:3நியாயாதி 3:3 அவர்களுடைய பிதாக்கள் யெகோவாவின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார். உபா 8:2உபா 8:16உபா 13:3நீதி 17:3ஆதி 22:12 நாளாக 32:31நியாயாதி 3:1-4யோபு 23:10 அதற்காகக் யெகோவா அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.