சங்கீதங்கள் 45

Psalms 45
சங்கீதம் 45

கோராகு குமாரர்கள் எழுதின சங்கீதம்.

என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; சங் 49:32 சாமு 23:2யோபு 33:3நீதி 16:23யோபு 32:18-202 பேது 1:21ஏசா 5:1உன்னத 1:1-7

நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்;

என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; லூக் 4:22உன்னத 5:10-16யோவா 7:46சங் 21:6எபி 7:26யோவா 1:14உன்னத 2:3நீதி 22:11

உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது;

ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய எபி 4:12ஏசா 49:2வெளி 1:16வெளி 19:15ஏசா 63:1-6சங் 21:5சங் 96:6எபி 1:3

உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,

சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், சங் 65:5வெளி 19:11வெளி 6:2ஏசா 59:17-18மத் 11:29சகரி 9:91 தெச 1:51 தெச 2:13

உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்;

உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும்.

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், சங் 21:12எண் 24:8சங் 38:2சங் 22:27சகரி 9:13-14சங் 66:3-4ரோம 15:18-19அப் 4:4

அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்;

மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.

உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, 1 எபி 1:8-9சங் 93:2யோவா 1:1ஏசா 9:6-7எரே 23:5-6எரே 33:15-16சங் 145:131 தீமோ 3:16

உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; எபி 1:9சங் 21:6ஏசா 61:1-3சங் 33:5கொலோ 1:18-19எபே 1:3லூக் 4:18-21யோவா 3:34

ஆதலால் தேவனே, உம்முடைய தேவன்

உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.

தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, உன்னத 1:32 கொரி 2:14-16யோவா 19:39மத் 2:11உன்னத 4:6யாத் 30:23-24சங் 16:11உன்னத 5:1

நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம்

வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.

உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, 1 இராஜா 2:19வெளி 21:9எபே 5:26-27வெளி 19:7வெளி 21:2ஏசா 60:10-11யோவா 3:29உன்னத 6:8-9

இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னத 2:10-13ஆதி 12:1மத் 10:37மத் 19:292 கொரி 6:17உபா 21:13ஆதி 2:242 கொரி 5:16

உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்; சங் 95:6ஏசா 54:5உன்னத 4:1-5செப்ப 3:17பிலி 2:10-11லூக் 24:52உன்னத 1:8பிலி 3:8

அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; சங் 22:29ஏசா 60:3ஏசா 23:17-18ஏசா 49:23மத் 2:11சங் 72:10ஏசா 60:10-11சங் 68:29

மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள்.

இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; ஏசா 61:10வெளி 19:7-8லூக் 11:40மத் 5:16ரோம 13:14ரோம 3:221 பேது 2:92 கொரி 5:17

அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது.

வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, 2 கொரி 11:2உன்னத 8:13யாத் 28:39உன்னத 1:3-5உன்னத 2:7உன்னத 6:1உன்னத 6:13உன்னத 6:8

ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்;

அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள்

உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து, வெளி 7:15-17ஏசா 35:10ஏசா 61:10யூதா 1:24ஏசா 55:12-13ஏசா 56:5ஏசா 60:19-20வெளி 3:12

ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள்.

உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்; வெளி 5:101 பேது 2:9வெளி 1:6ஏசா 60:1-5ஏசா 49:21-22ஏசா 54:1-5மத் 19:29மாற் 10:29-30

அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; ஏசா 62:3மல்கி 1:11சங் 72:17-19ஏசா 61:9ஏசா 59:21மத் 26:13சங் 138:4சங் 22:30-31

இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள்.