தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். எபி 12:151 கொரி 3:91 பேது 4:102 கொரி 5:18-20கலா 2:21ரோம 12:12 கொரி 8:1-2கலா 4:11-12 சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள். ஏசா 49:8எபி 4:7எபி 3:13ஏசா 61:2எபி 3:7லூக் 19:42-44லூக் 4:19எசேக் 16:8
பவுலின் உபத்திரவங்கள்
இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம். ரோம 14:131 கொரி 9:121 கொரி 10:32-331 கொரி 9:22மத் 17:27மத் 18:61 கொரி 10:23-241 கொரி 8:9-13 அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், 2 கொரி 12:102 கொரி 4:82 கொரி 11:271 கொரி 4:11-12ரோம 8:35-36ரோம 5:3-4பிலி 4:11-121 கொரி 3:5 அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், 2 கொரி 11:23-252 கொரி 11:27அப் 17:5அப் 19:23-34எபி 11:361 கொரி 15:101 கொரி 4:111 கொரி 7:5 கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும், எபே 4:32கொலோ 1:27எபே 4:2கலா 5:222 கொரி 12:152 கொரி 2:42 கொரி 3:3கலா 3:5 சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும், 2 கொரி 4:22 கொரி 10:4-52 தீமோ 2:15எபே 6:11-201 தெச 5:82 கொரி 13:4எபே 3:202 தீமோ 4:7 கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும், 1 பேது 4:14மத் 27:631 தீமோ 4:10அப் 24:5அப் 28:22வெளி 3:93 யோவா 1:12அப் 10:22 அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், 2 கொரி 4:10-11ரோம 8:362 கொரி 1:8-102 கொரி 4:21 கொரி 4:92 கொரி 11:6சங் 118:17-181 கொரி 11:32 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். யோவா 16:222 கொரி 8:9யாக் 2:5வெளி 2:91 பேது 1:6-81 தீமோ 4:8எபி 10:34பிலி 4:4 கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது. 2 கொரி 12:152 கொரி 7:3-4சங் 119:32பிலி 1:82 கொரி 2:41 சாமு 2:1கலா 3:1பிலி 4:15 எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது. 2 கொரி 7:2மீகா 2:7பிலி 1:81 யோவா 3:17யோபு 36:16பிரச 6:9நீதி 4:12 எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன். 1 யோவா 3:183 யோவா 1:41 கொரி 4:14-151 யோவா 2:11 யோவா 3:71 தெச 2:111 யோவா 2:12-141 யோவா 5:14-15
அவிசுவாசிகளுடன் இணைந்திருத்தல்
அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? 1 கொரி 15:331 கொரி 10:21யாக் 4:4எபே 5:6-14லேவி 19:191 பேது 2:9-10சங் 26:4-5உபா 22:9-11 கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது? 1 கொரி 10:20-211 யோவா 5:11-131 இராஜா 18:211 சாமு 5:2-4அப் 5:14அப் 8:20எஸ்றா 4:3மாற் 16:16 தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே. வெளி 21:3யாத் 29:45எபி 8:10லேவி 26:12எசேக் 37:26-27எரே 32:381 கொரி 3:16-17எசேக் 11:20 எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசா 52:11வெளி 18:42 கொரி 7:1சங் 1:1-3எண் 16:26எஸ்றா 10:11நீதி 9:6அப் 2:40 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். யோவா 1:12வெளி 21:72 சாமு 7:14ரோம 8:14-17கலா 4:5-7கலா 3:26எரே 31:9ரோம 8:29