கோராகு, தாத்தான் மற்றும் அபிராம்
லேவிக்குப் பிறந்த கோகாத்தின் மகனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் மகனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, யூதா 1:11உபா 11:6யாத் 6:21யாத் 6:18ஆதி 49:3-4எண் 26:9-10எண் 27:31 நாளாக 5:1-2 இஸ்ரவேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி, எண் 26:9எசேக் 23:101 நாளாக 5:24ஆதி 6:4எண் 1:161 நாளாக 12:30எசேக் 16:14 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள். சங் 106:16யாத் 19:6எண் 14:14அப் 7:51எண் 16:7அப் 7:39யாத் 29:45-46எஸ்றா 9:2 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். எண் 14:5எண் 20:6யோசு 7:6எண் 16:45 பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: “நாளைக்குக் யெகோவா தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார். சங் 65:4எண் 17:52 தீமோ 2:19லேவி 10:3எண் 16:31 பேது 2:5-91 சாமு 2:282 தீமோ 2:3-4 ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லோரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, லேவி 10:11 இராஜா 18:21-23லேவி 16:12-13எண் 16:35-40எண் 16:46-48 நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, யெகோவாவுடைய சந்நிதியில் தூபவர்க்கம் போடுங்கள்; அப்பொழுது யெகோவா எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாக இருப்பான்; லேவியின் சந்ததியாராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள்” என்றான். எண் 16:31 இராஜா 18:17-181 பேது 2:92 தெச 2:13எபே 1:4மத் 21:23-27எண் 16:5 பின்னும் மோசே கோராகை நோக்கி: “லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்; யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், உபா 10:8ஏசா 7:13எசேக் 44:10-111 சாமு 18:23நெகே 12:44எண் 1:53எண் 16:13எண் 3:6 அவர் உன்னையும் உன்னோடு லேவியின் சந்ததியாராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரச்செய்ததும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ? 3 யோவா 1:9லூக் 22:24மத் 20:21-22எண் 18:7எண் 3:10பிலி 2:3நீதி 13:10ரோம 12:10 இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் யெகோவாவுடைய விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார்” என்றான். யாத் 16:7-8யாத் 17:21 கொரி 3:5எண் 16:31 சாமு 8:7அப் 5:4யோவா 13:20லூக் 10:16 பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: “நாங்கள் வருகிறதில்லை; 1 பேது 2:13-14ஏசா 3:5யூதா 1:8நீதி 29:9 இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ? அப் 7:35யாத் 16:3யாத் 2:14எண் 11:5அப் 7:25-27யாத் 1:11யாத் 1:22யாத் 17:3 மேலும் நீ எங்களைப் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? 1 நாங்கள் வருகிறதில்லை” என்றார்கள். 1 சாமு 11:2நியாயாதி 16:21லேவி 20:24எண் 36:8-10யாத் 22:5யாத் 23:11யாத் 3:17யாத் 3:8 அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான். ஆதி 4:4-52 கொரி 7:21 கொரி 9:151 சாமு 12:3-41 தெச 2:102 கொரி 1:122 கொரி 12:14-17அப் 20:33-34 பின்பு மோசே கோராகை நோக்கி: “நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் யெகோவாவுடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள். 1 சாமு 12:31 சாமு 12:72 தீமோ 2:14எண் 16:6-7 உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய 250 தூபகலசங்களையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள்” என்றான். 1 சாமு 12:7 அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள். அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது. எண் 14:10எண் 16:42யாத் 16:7லேவி 9:23யாத் 16:10லேவி 9:6எண் 12:5எண் 16:1-2 யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி: “இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிடத்திலே அவர்களை அழித்துப்போடுவேன்” என்றார். யாத் 32:10எண் 16:45யாத் 33:5சங் 73:19வெளி 18:42 கொரி 6:17அப் 2:40எபே 5:6-7 அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள். எண் 27:16யோபு 12:10சகரி 12:1பிரச 12:7எபி 12:9ஆதி 18:23-25ரோம 5:182 சாமு 24:17 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார். எண் 16:21 உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள். எண் 11:16-17எண் 11:25எண் 11:30 அவன் சபையாரை நோக்கி: “இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள்” என்றான். ஏசா 52:112 கொரி 6:17வெளி 18:41 தீமோ 5:22அப் 13:51அப் 8:20உபா 13:17ஆதி 19:12-15 அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தைவிட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்களுடைய மனைவிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்களுடைய கூடாரவாசலிலே நின்றார்கள். 2இராஜா 9:30-31ஏசா 28:14யோபு 40:10-11யோபு 9:4நீதி 16:18நீதி 18:12 அப்பொழுது மோசே: “இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் யெகோவா என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என்னுடைய மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால், யாத் 3:12யோவா 6:38எசேக் 13:17எரே 23:16யோவா 14:11யோவா 5:361 இராஜா 18:36உபா 18:22 எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். 1 இராஜா 22:28புலம் 4:222 நாளாக 18:27பிரச 3:19யாத் 32:34ஏசா 10:3எரே 5:9யோபு 35:15 யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். சங் 55:15எண் 16:33யோபு 31:3ஏசா 28:21ஏசா 43:19ஏசா 45:12ஏசா 45:7எரே 31:22 அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; உபா 11:6எண் 27:3சங் 106:17-18எண் 26:10-11 பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது. எண் 26:11சங் 106:17வெளி 12:161 நாளாக 6:22ஏசா 5:141 நாளாக 6:37உபா 11:6எண் 16:17 அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். எசேக் 32:18எசேக் 32:30ஏசா 14:15ஏசா 14:9யூதா 1:11சங் 143:7சங் 55:23சங் 69:15 அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள். ஏசா 33:3எண் 17:12-13வெளி 6:15-17சகரி 14:5 அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது. லேவி 10:2எண் 26:10சங் 106:18எண் 11:1-3எண் 16:17எண் 16:2 பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நெருப்பிற்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது. லேவி 27:28எண் 16:18எண் 16:7 தங்களுடைய ஆத்துமாக்களுக்கே கேடு உண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடும் தட்டையான தகடுகளாக அடிக்கவேண்டும்; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததால் அவைகள் பரிசுத்தமானது; அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்” என்றார். 2 பேது 2:6எசேக் 14:8எண் 26:10நீதி 20:21 இராஜா 2:23ஆப 2:10எண் 17:101 கொரி 10:11 அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து, ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் யெகோவாவுடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, யெகோவா மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான். எண் 3:102 நாளாக 26:16-21எண் 18:4-71 இராஜா 13:1-3யாத் 30:7-10யூதா 1:11லேவி 22:10எண் 1:51 மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள். எண் 16:1-7எண் 14:2சங் 106:23சங் 106:25-481 இராஜா 18:172 சாமு 16:7-8அப் 21:28அப் 5:28 சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது. எண் 16:19லேவி 9:23எண் 20:6யாத் 16:10யாத் 16:7யாத் 24:16யாத் 40:34-35எண் 14:10 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்; அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். எண் 16:21-22எண் 16:241 நாளாக 21:16மத் 26:39எண் 16:26எண் 20:6 மோசே ஆரோனை நோக்கி: “நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்”; யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான். எண் 8:191 நாளாக 27:24லேவி 10:6எண் 11:33ஏசா 6:6-7எண் 18:5சங் 106:29வெளி 8:3-5 மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; மக்களுக்குள்ளே வாதை துவங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, உபா 33:10-11ஏசா 53:10-12மத் 5:44எண் 16:46எண் 25:6-8சங் 106:29ரோம 12:21 செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது. 2 சாமு 24:25எண் 25:8-11சங் 106:301 நாளாக 21:26-271 தெச 1:101 தீமோ 2:5-62 சாமு 24:16-17எபி 7:24-25 கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் 14,700 பேர். எண் 16:32-35எண் 25:91 நாளாக 21:14எபி 10:28-29எபி 12:25எபி 2:1-3 வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான். 1 நாளாக 21:26-30எண் 16:43