எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, 1 யோவா 4:111 பேது 1:15-16எபே 4:32மத் 5:48லூக் 6:35-36கொலோ 3:12லேவி 11:451 யோவா 3:1-2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள். யோவா 13:34கலா 2:20கொலோ 3:142 கொரி 2:151 கொரி 16:14மத் 20:28தீத் 2:141 பேது 4:8 மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. கொலோ 3:5எபே 5:5கலா 5:19-211 கொரி 6:181 தெச 4:31 தெச 4:71 கொரி 6:13எபே 5:12 அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது. கொலோ 3:8எபே 4:291 தெச 5:18நீதி 15:2யாக் 3:4-8மத் 12:34-37பிரச 10:13கொலோ 3:15-17 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. கலா 5:211 கொரி 6:9-10கொலோ 3:5எபே 5:3வெளி 22:15வெளி 21:8கலா 5:19எபி 13:4 இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; ரோம 1:18மத் 24:4கொலோ 2:81 யோவா 4:12 தெச 2:10-12கொலோ 3:6கலா 6:7-8மத் 24:24 அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள். வெளி 18:41 தீமோ 5:22எபே 5:11எண் 16:26நீதி 1:10-17சங் 50:18நீதி 13:20நீதி 9:6 முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். யோவா 8:121 யோவா 1:7யோவா 12:46அப் 26:18கொலோ 1:131 பேது 2:9-11ஏசா 42:6-7எபே 4:18 வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும். கலா 5:22-233 யோவா 1:111 யோவா 3:9-10எபே 6:14ரோம 15:141 தீமோ 6:11பிலி 1:111 பேது 2:24-25 கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். ரோம 12:1-2எபி 12:28சங் 19:141 பேது 2:51 பேது 2:201 தெச 5:21நீதி 21:31 தீமோ 2:3 கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள். ரோம 13:121 தீமோ 5:202 தெச 3:62 யோவா 1:10-11ரோம 16:172 தெச 3:14சங் 1:1-2வெளி 18:4 அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே. எபே 5:3ரோம 2:16பிரச 12:14எரே 23:242 சாமு 12:121 பேது 4:3நீதி 9:17வெளி 20:12 அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது. யோவா 3:20-211 கொரி 4:5ஓசி 2:10ஓசி 7:1மீகா 7:9புலம் 2:14எபி 1:13 எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார். ஏசா 60:1ரோம 13:11-12ஏசா 26:191 தெச 5:6ஏசா 52:12 கொரி 4:6யோவா 5:25-29கொலோ 3:1 எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு, கொலோ 4:5யாக் 3:13பிலி 1:271 கொரி 14:20நீதி 14:81 தீமோ 6:91 பேது 1:22மத் 10:16 நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கொலோ 4:5ஆமோ 5:13யோவா 12:35பிரச 12:1எபே 6:13கலா 6:10ரோம 13:11பிரச 9:10 எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள். ரோம 12:21 தெச 5:18கொலோ 1:9எபே 5:151 பேது 4:2எரே 4:221 தெச 4:1-3கொலோ 4:5 பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து; லூக் 1:15நீதி 20:1ரோம 13:13கலா 5:21-25அப் 11:24ஏசா 5:221 கொரி 5:11லூக் 11:13 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, கொலோ 3:161 கொரி 14:26சங் 95:2அப் 16:25சங் 147:7யாக் 5:13சங் 105:2-3யோவா 4:23-24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, கொலோ 3:171 தெச 5:18எபி 13:15பிலி 4:6எபே 5:42 தெச 1:3சங் 34:1ஏசா 63:7 தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். பிலி 2:3எபே 5:24எபே 5:22எபி 13:171 பேது 5:51 பேது 2:171 தீமோ 3:4கலா 5:13
கணவன் மனைவி உறவு
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள். கொலோ 3:181 பேது 3:1-6தீத் 2:5ஆதி 3:16எபே 5:22எஸ்த 1:201 தீமோ 2:11-12எஸ்த 1:16-18 கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார். 1 கொரி 11:3-10கொலோ 1:18எபே 1:22-23எபே 5:25-26எபே 4:151 தெச 1:10வெளி 5:91 கொரி 6:13 எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். எபே 5:33கொலோ 3:20தீத் 2:7தீத் 2:9கொலோ 3:22யாத் 23:13யாத் 29:35 கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து, 1 பேது 3:7கொலோ 3:19எபே 5:28ஆதி 2:24எபே 5:33எபே 5:2கலா 1:4வெளி 5:9 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும், எபி 10:22யோவா 15:3எசேக் 36:25யோவா 3:5யோவா 17:17-191 கொரி 6:11தீத் 3:5-71 பேது 1:22-23 கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். கொலோ 1:22எபி 9:141 பேது 1:192 கொரி 11:2எபே 1:42 கொரி 4:14உன்னத 4:7யூதா 1:24 அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான். எபே 5:25மத் 19:5ஆதி 2:21-24எபே 5:33எபே 5:31 தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான். எபே 5:31எசேக் 34:14-15பிரச 4:5யோவா 6:50-58நீதி 11:17ஏசா 40:11மத் 23:37எசேக் 34:27 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம். 1 கொரி 6:151 கொரி 12:12-27ரோம 12:5ஆதி 2:23எபே 1:23கொலோ 2:19 இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். ஆதி 2:24மத் 19:5மாற் 10:7-81 கொரி 6:16 இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். 2 கொரி 11:2வெளி 21:2ஏசா 54:5வெளி 19:7-8கொலோ 2:2ஏசா 62:4-51 தீமோ 3:16யோவா 3:29 எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும். 1 பேது 3:2-7எஸ்த 1:20எபே 5:22எபே 5:25கொலோ 3:19எபே 5:28-29எபி 12:91 இராஜா 1:31