ரோமர் 6

Romans 6
அத்தியாயம் 6

பாவத்தினால் மரணம்

ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே. 1 பேது 2:16கலா 5:13ரோம 6:15ரோம 2:4ரோம 3:5-8ரோம 5:20-21யூதா 1:4ரோம 3:31 பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்? 1 யோவா 3:9கொலோ 3:31 பேது 2:24ரோம 7:4கலா 2:19ரோம 7:61 பேது 1:141 பேது 4:1-3 கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா? கலா 3:27கலா 2:20-21ரோம 6:81 கொரி 12:13ரோம 6:4-51 பேது 3:21அப் 2:38யாக் 4:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம். 2 கொரி 5:17கொலோ 3:10எபே 4:22-241 பேது 3:21ரோம 7:6ரோம 6:92 கொரி 13:4ரோம 6:3 ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். பிலி 3:10-11கொலோ 2:122 கொரி 4:10கொலோ 3:1ரோம 6:8-12எபே 2:5-6யோவா 15:1-8ஏசா 5:2 நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். கலா 2:20கலா 5:24எபே 4:22கலா 6:14யோவா 8:34-36கொலோ 3:5கொலோ 3:9-10ரோம 8:13 மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 1 பேது 4:1ரோம 8:1கொலோ 3:1-3ரோம 7:4ரோம 6:2ரோம 6:8ரோம 7:2 எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 2 தீமோ 2:11-12கொலோ 3:3-42 கொரி 4:10-142 கொரி 13:4யோவா 14:19ரோம 6:3-51 தெச 4:14-17 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை. ரோம 6:14வெளி 1:18அப் 2:24-28எபி 10:12-13எபி 2:14-15சங் 16:9-11எபி 7:25ரோம 5:14 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 2 கொரி 5:211 பேது 3:181 பேது 4:62 கொரி 5:15எபி 9:26-28ரோம 14:7-9ரோம 8:3லூக் 20:38 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். கொலோ 3:3-51 கொரி 6:20ரோம 6:2கொலோ 3:17ரோம 6:13கலா 2:19-20ரோம 8:18எபே 2:7 ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும். கலா 5:16ரோம 6:161 யோவா 2:15-17கலா 5:24ரோம 8:132 தீமோ 2:22சங் 19:131 பேது 2:11 நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். ரோம 12:1ரோம 6:16கொலோ 3:51 பேது 2:241 கொரி 6:201 பேது 4:2கொலோ 2:13ரோம 7:5 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது. கலா 5:18ரோம 8:2ரோம 7:4-11எபி 8:10கலா 4:4-5ரோம 6:12ரோம 3:19-20யோவா 8:36

நீதிக்கு அடிமைகள்

இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே. தீத் 2:11-14எபே 2:8-102 கொரி 7:1ரோம 6:1-2யூதா 1:41 கொரி 9:20-21கலா 2:17-18ரோம 3:9 மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா? யோவா 8:34மத் 6:242 பேது 2:19யோசு 24:15ரோம 6:12-13ரோம 6:19-23ரோம 6:17 முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். 1 பேது 2:92 கொரி 2:142 தீமோ 1:133 யோவா 1:3எபே 2:5-10ரோம 1:8ரோம 16:26அப் 11:18 பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். ரோம 6:22கலா 5:1ரோம 8:2யோவா 8:32ஏசா 54:17ரோம 6:14ரோம 6:71 பேது 2:16 உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள். 1 பேது 4:2-4ரோம 6:13கொலோ 3:5-7எபே 2:2-31 கொரி 6:11ரோம 3:5ரோம 6:16-17கலா 3:15 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள். ரோம 6:16-17யோவா 8:34

பாவத்தின் சம்பளம் மரணம்

இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. ரோம 1:32ரோம 7:5ரோம 6:23கலா 6:7-8நீதி 14:12எரே 8:12நீதி 16:251 யோவா 2:28 இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். 1 பேது 2:16ரோம 6:18ரோம 8:2கலா 5:13யோவா 8:32ஏசா 54:171 கொரி 7:22ரோம 6:14 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். யோவா 3:36ரோம 5:12யாக் 1:15யோவா 6:40எசேக் 18:20மத் 25:46யோவா 5:24எசேக் 18:4