மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது: 1 யோவா 3:181 கொரி 1:14ரோம 16:232 யோவா 1:1-13அப் 19:29அப் 20:4 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன். 2 பேது 1:3-92 பேது 3:18கொலோ 1:4-61 பேது 4:8சங் 20:1-51 தெச 2:13-142 தெச 1:31 தெச 1:3-10 சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன். 2 யோவா 1:41 தெச 3:6-91 தெச 2:19-202 கொரி 7:6-72 யோவா 1:23 யோவா 1:4சங் 119:11ரோம 1:8-9 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. கலா 4:191 தீமோ 1:22 தீமோ 1:2நீதி 23:242இராஜா 20:31 இராஜா 2:4கலா 2:141 இராஜா 3:6 பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய். கலா 6:10கொலோ 3:17லூக் 12:42லூக் 16:10-122 கொரி 4:1-3மத் 24:451 பேது 4:10-11 அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும். 1 தெச 2:12அப் 15:3தீத் 3:13பிலே 1:5-7கொலோ 1:10பிலி 4:14ரோம 15:241 பேது 2:20 ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். 2 கொரி 4:52இராஜா 5:15-16வெளி 2:31 கொரி 9:182 கொரி 11:7-92 கொரி 12:13கொலோ 1:241 கொரி 9:12-15 ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 1 கொரி 16:10-111 கொரி 3:5-91 தெச 3:22 கொரி 6:12 கொரி 7:2-32 கொரி 8:23கொலோ 4:11பிலே 1:24 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தீத் 1:7-16லூக் 22:24-27லூக் 9:48மத் 23:4-8மத் 10:40-42மாற் 9:34பிலி 2:3-5ரோம 12:10 ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான். ஏசா 66:52 கொரி 13:2லூக் 6:22நீதி 10:10நீதி 10:81 கொரி 5:1-52 கொரி 10:1-113 யோவா 1:5 பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைப் பார்த்தது இல்லை. ஏசா 1:16-17சங் 37:27எபே 5:11 பேது 3:111 பேது 3:13யோவா 3:20சங் 34:141 யோவா 3:6-9 தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள். 1 தீமோ 3:7யோவா 21:24அப் 10:22அப் 22:12யோவா 19:351 தெச 4:12 எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை. 2 யோவா 1:12 சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம். 1 பேது 5:14தானி 4:1எபே 6:23கலா 5:16ஆதி 43:23ரோம 16:1-16 உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர் பெயராக வாழ்த்துவாயாக. யோவா 10:3
3 யோவான் 1
3 John 1அத்தியாயம் 1