2 பேதுரு 1

2 Peter 1
அத்தியாயம் 1

நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது: தீத் 2:13ரோம 3:21-262 கொரி 4:13யோவா 12:26தீத் 1:4ரோம 1:122 பேது 1:41 பேது 1:1 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும். 2 பேது 3:18யோவா 17:3பிலி 3:81 பேது 1:2ஏசா 53:11எண் 6:24-26யூதா 1:2ரோம 1:7

தேவனுடைய அழைப்பும், தெரிந்துகொள்ளுதலும்

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல், 1 பேது 5:102 தீமோ 1:9ரோம 8:28-301 கொரி 3:21-23சங் 84:11ரோம 8:32எபே 1:19-212 கொரி 12:9 இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எபே 4:23-24எசேக் 36:25-272 கொரி 3:18கொலோ 3:10எபி 12:102 கொரி 6:171 யோவா 3:2கலா 6:8 இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும், பிலி 4:8நீதி 4:232 பேது 3:182 பேது 1:2-3எபி 6:112 பேது 1:10பிலி 1:92 பேது 3:14 ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும், எபி 10:36ரோம 5:3-4லூக் 21:192 பேது 1:3எபி 12:11 கொரி 9:252 கொரி 6:4கலா 5:23 தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள். எபி 13:1ரோம 12:101 தெச 3:12கொலோ 3:14யோவா 13:34-351 கொரி 13:1-81 யோவா 3:161 யோவா 4:21 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள். தீத் 3:14யோவா 15:2கொலோ 3:16எபி 6:12பிலி 1:91 தெச 3:121 கொரி 15:581 தெச 4:1 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான். 1 யோவா 2:9-112 பேது 2:18-20தீத் 2:141 யோவா 1:7எபே 5:26யாக் 2:14-26ரோம 6:1-4ரோம 6:11 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை. 2 பேது 3:17லூக் 6:47-49எபி 6:111 யோவா 3:19-21சங் 121:32 பேது 1:52 தீமோ 2:19மத் 7:24-25 இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். வெளி 5:10மத் 25:34வெளி 3:212 தீமோ 4:8தானி 7:27எபி 6:17யோவா 10:10தானி 7:14

சத்தியத்தின் தீர்க்கதரிசனம்

இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். 1 யோவா 2:21ரோம 15:14-15பிலி 3:1கொலோ 2:72 யோவா 1:2யூதா 1:52 பேது 1:131 பேது 5:10 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து, 2 பேது 1:142 பேது 3:1எபி 13:32 கொரி 5:82 தீமோ 1:62 கொரி 5:1-42 பேது 1:12ஆகா 1:14 நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன். 2 தீமோ 4:6யோவா 21:18-19உபா 31:14உபா 4:21-221 இராஜா 2:2-3அப் 20:25யோசு 23:14 மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன். உபா 31:19-29சங் 71:182 பேது 1:12யோசு 24:24-291 நாளாக 29:1-202 பேது 1:4-72 தீமோ 2:2எபி 11:4 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 1 யோவா 4:14யோவா 1:141 தீமோ 1:41 கொரி 2:41 யோவா 1:1-31 தீமோ 4:7எபே 4:14லூக் 9:28-32 இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, மாற் 9:7மத் 17:5மத் 3:17லூக் 3:22லூக் 9:34-35மாற் 1:11மத் 12:18யோவா 3:35 அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். மத் 17:6யாத் 3:5யோசு 5:15ஏசா 11:9ஆதி 28:16-17யாத் 3:1சகரி 8:3ஏசா 56:7 அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும். ஏசா 9:2சங் 119:105வெளி 22:16யோவா 5:392 கொரி 4:4-6ஏசா 8:20யோவா 1:7-9நீதி 6:23 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும். 2 பேது 3:3ரோம 12:6யாக் 1:3ரோம 13:111 தீமோ 1:9ரோம 6:6 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள். 2 தீமோ 3:15-172 சாமு 23:21 பேது 1:11லூக் 1:70அப் 1:16அப் 3:18எபி 10:15வெளி 19:10