யூதா 1

Jude 1
அத்தியாயம் 1

இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: 1 பேது 1:51 தெச 5:231 பேது 2:92 தீமோ 1:9யோவா 14:22யோவா 17:15ரோம 1:11 பேது 5:10 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும். 2 பேது 1:21 பேது 1:2வெளி 1:4-6ரோம 1:7

பக்தியற்றவர்களும் பாவமும்

பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது. 1 தீமோ 6:12பிலி 1:27யூதா 1:202 தீமோ 1:13தீத் 1:42 தீமோ 4:7-8வெளி 12:11வெளி 2:10 ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது. 2 பேது 2:1-3கலா 2:42 பேது 2:10தீத் 1:15-161 பேது 2:161 யோவா 2:222 பேது 2:18-221 பேது 2:8 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார். எபி 3:16எண் 26:64-651 கொரி 10:1-12சங் 106:26எண் 14:22-37உபா 2:15-162 பேது 1:12-132 பேது 3:1 தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். 2 பேது 2:4மத் 25:41எபே 6:12மத் 8:292 பேது 2:9எபி 10:27வெளி 20:10யோவா 8:44 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். உபா 29:232 பேது 2:6ரோம 1:26-27ஆதி 18:20ஆதி 19:24-26ஆதி 13:131 கொரி 6:9எரே 50:40 அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள். எபி 13:172 பேது 2:10-121 பேது 2:171 தீமோ 1:10யாத் 22:281 கொரி 3:17பிரச 10:20யூதா 1:9-10 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான். சகரி 3:22 பேது 2:11உபா 34:6தானி 12:1வெளி 12:7தானி 10:21தானி 10:131 தெச 4:16 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். 2 பேது 2:12ரோம 1:21-22 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். 2 பேது 2:151 யோவா 3:12வெளி 2:14ஆதி 4:3-14எபி 11:4எண் 16:1-35எண் 26:9-10உபா 23:4 இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும், 2 பேது 2:17-20மத் 15:13எசேக் 34:8எபே 4:14பிலி 3:19நீதி 25:141 கொரி 11:20-222 பேது 2:13-14 தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. 2 பேது 2:17பிலி 3:19ஏசா 57:20சங் 65:72 தீமோ 3:13வெளி 14:10-11வெளி 20:10எரே 5:22-23 ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும், உபா 33:2சங் 50:3-52 தெச 1:7-8எபி 11:5-61 தெச 3:13மத் 16:27மத் 24:30-31மத் 25:31 தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான். 1 கொரி 4:51 தீமோ 1:9பிரச 11:9வெளி 22:12-15ரோம 14:101 சாமு 2:3அப் 17:31யாத் 16:8 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள். 2 பேது 2:18பிலி 2:142 பேது 2:101 தீமோ 6:51 கொரி 10:101 பேது 2:111 பேது 4:22 பேது 3:3

எச்சரிக்கைகள்

நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள். 2 பேது 3:21 யோவா 4:6எபே 4:11அப் 20:35மல்கி 4:4எபே 2:20 கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. 2 பேது 3:32 தீமோ 4:32 தீமோ 3:1-52 தீமோ 3:131 தீமோ 4:1-22 பேது 2:1அப் 20:29யூதா 1:16 இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே. 1 கொரி 2:14நீதி 18:1ரோம 8:9யாக் 3:15எபி 10:25ஓசி 9:10யோவா 3:5-6எசேக் 14:7 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி, எபே 6:18ரோம 8:26-271 கொரி 14:15கொலோ 2:71 தெச 5:111 கொரி 14:4-5ரோம 8:151 கொரி 14:26 தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். 1 யோவா 4:16எபி 9:28புலம் 3:25-262 பேது 3:12யோவா 15:9-102 தெச 3:5வெளி 12:11யோவா 14:21 அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து, யாக் 5:19-20கலா 6:11 யோவா 5:16-18எபி 6:4-8யூதா 1:4-13எசேக் 34:17கலா 4:20 பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள். 1 தீமோ 4:161 கொரி 15:33வெளி 3:42 கொரி 7:10-122 தெச 3:14ரோம 11:14சகரி 3:2-5வெளி 3:18

தேவனைப் புகழுதல்

உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும், 2 தீமோ 4:18எபே 3:20கொலோ 1:22யோவா 10:29-30எபி 13:20-21எபே 5:272 கொரி 4:14ரோம 16:25-27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். 1 தீமோ 1:17வெளி 5:13-14யோவா 5:441 பேது 5:10-11வெளி 4:9-11ரோம 11:36ஏசா 12:2எபி 13:8