இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.
தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; சங் 62:1சங் 76:11சங் 116:17-18சங் 21:131 நாளாக 25:1-31சங் 56:121 நாளாக 11:71 நாளாக 15:29
பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.
ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள். எரே 29:12-13ஏசா 65:241 யோவா 5:14-15ஏசா 66:23சங் 66:19சங் 86:9அப் 10:31சங் 145:18-19
அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; சங் 38:4ஏசா 6:7சங் 79:91 யோவா 1:7-9எபி 9:14கலா 5:17யோவா 1:29சங் 40:12
தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர்.
உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; எபே 1:4சங் 106:4-5சங் 23:6சங் 84:4சங் 33:12சங் 36:8வெளி 3:12சங் 4:3
உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
பூமியின் கடைசி எல்லைகளிலும் உபா 10:21ஏசா 45:22சங் 66:3வெளி 15:3-4சங் 45:4ஏசா 51:5சங் 22:27சங் 68:19-20
தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற
எங்களுடைய இரட்சிப்பின் தேவனே,
நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.
வல்லமையைக் கட்டிக்கொண்டு, சங் 93:1ஆப 3:6மீகா 6:2சங் 119:901 சாமு 2:4ஏசா 51:9சங் 24:2
உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி,
கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், சங் 89:9ஏசா 17:12-13சங் 93:3-4யோவா 18:6சங் 107:29யோபு 38:8-11மத் 8:26-27சங் 2:1-4
மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.
பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; சங் 148:3சங் 104:20-23சங் 136:8சங் 74:16உபா 4:19ஆப 3:3-19சங் 126:2சங் 48:5-6
காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.
தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; சங் 46:4வெளி 22:1எரே 5:24சங் 104:13-15யோவே 2:23-26சங் 68:9-10உபா 11:11-12யோபு 5:10-11
தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்;
இப்படி நீர் அதைத் திருத்தி,
அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, 1 கொரி 3:6-7சங் 147:8உபா 32:2
அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; யோவே 2:21-26சங் 103:4சங் 5:12சங் 36:8ஆகா 2:19மல்கி 3:10நீதி 14:18எபி 2:7-9
உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது.
வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; யோபு 38:26-27யோவே 2:22சங் 104:10-13ஏசா 61:10-11சங் 65:6ஏசா 55:9-13
மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது.
மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; ஏசா 55:12ஏசா 35:1-2அப் 14:17ஏசா 30:23ஏசா 44:23சங் 96:11-13சங் 98:7-9ஏசா 35:10
பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது;
அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.