யோவேல் 2

Joel 2
அத்தியாயம் 2

யெகோவாவுடைய நாள்

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த மலையிலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிமக்கள் எல்லோரும் தத்தளிப்பார்களாக; ஏனெனில் யெகோவாவுடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. யோவே 1:15யோவே 2:151 பேது 4:7மல்கி 4:1யோவே 3:17செப்ப 1:141 தெச 5:2எரே 5:22 அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை. யோவே 1:6செப்ப 1:14-15ஆமோ 5:18-20யோவே 2:10-11யோவே 2:5யோவே 2:25தானி 12:1யாத் 10:6 அவைகளுக்கு முன்னாக நெருப்பு எரிக்கும், அவைகளுக்குப் பின்னாக தழல் எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்திரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. ஏசா 51:3ஆதி 2:8யோவே 1:19-20சகரி 7:14ஆமோ 7:4சங் 50:3யாத் 10:15யாத் 10:5 அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல இருக்கும்; அவைகள் குதிரை வீரர்களைப்போல ஓடும். வெளி 9:7 அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும். ஏசா 5:24வெளி 9:9ஏசா 30:30மத் 3:12நாகூ 2:3-4நாகூ 3:2-3 அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும். நாகூ 2:10ஏசா 13:8எரே 30:6புலம் 4:8எரே 8:21சங் 119:83 அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். நீதி 30:272 சாமு 1:232 சாமு 2:18-192 சாமு 5:8ஏசா 5:26-29எரே 5:10யோவே 2:9சங் 19:5 ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும். 2 நாளாக 23:102 நாளாக 32:5யோபு 33:18நெகே 4:23யோபு 36:12நெகே 4:17உன்னத 4:13 அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும். எரே 9:21யோவா 10:1யாத் 10:6 அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும். மத் 24:29ஏசா 13:10யோவே 3:15-16சங் 18:7அப் 2:20எசேக் 32:7-8மாற் 13:24-25எரே 4:23 யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? மல்கி 3:2நாகூ 1:6எரே 30:7யோவே 3:16சங் 46:6வெளி 18:8வெளி 6:17ஆமோ 5:20

மனந்திரும்ப அழைப்பு

ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். யாக் 4:8-9ஏசா 55:6-72 நாளாக 7:13-14ஓசி 12:6எரே 29:12-13எரே 4:1ஓசி 6:1உபா 4:29-30 நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார். சங் 86:15சங் 34:18ஏசா 57:15யாத் 34:6-7மத் 5:3-4மீகா 7:18யாக் 1:19-20சங் 86:5 ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். யோனா 3:9ஆகா 2:192இராஜா 19:42 சாமு 12:22ஆமோ 5:15யாத் 32:30யோவே 1:13யோனா 1:6 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள். யோவே 1:141 இராஜா 21:12யோவே 2:1எண் 10:31 இராஜா 21:92இராஜா 10:20எரே 36:9 மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக. 2 நாளாக 20:132 நாளாக 29:51 கொரி 7:51 சாமு 16:5யாத் 19:10யாத் 19:22யோவே 1:14சகரி 12:11-14 யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. சங் 115:2எசேக் 8:16சங் 79:101 இராஜா 6:3ஆமோ 7:2தானி 9:18-19யாத் 34:9ஓசி 14:2 அப்பொழுது யெகோவா தமது தேசத்திற்காக வைராக்கியங்கொண்டு, தமது மக்கள்மேல் இரக்கம் காட்டுவார். சகரி 8:2சங் 103:13சகரி 1:14யாக் 5:11புலம் 3:22ஏசா 63:15ஏசா 63:9ஏசா 60:10 யெகோவா மறுமொழி கொடுத்து, தமது மக்களை நோக்கி: இதோ, நான் உங்களை இனி அந்நிய மக்களுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள். எசேக் 34:29எசேக் 36:15ஏசா 62:8-9எரே 31:12ஆமோ 9:13-14யோவே 2:24எசேக் 39:29ஆகா 2:16-19 வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மத்திய தரைக் கடலுக்கு, நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது. சகரி 14:8ஆமோ 4:10உபா 11:24ஏசா 34:3யாத் 10:19எசேக் 39:12-16எசேக் 47:18எரே 1:14-15 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; யெகோவா பெரிய செயல்களைச் செய்வார். செப்ப 3:16-17ஏசா 41:10ஏசா 54:4சங் 126:1-31 சாமு 12:16எரே 33:31 சாமு 12:24ஏசா 35:1 வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; மரங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சைச்செடியும் பலனைத்தரும். சகரி 8:12ஏசா 51:3சங் 65:12ஆமோ 9:14-15ஏசா 30:23-24யோவே 1:18-20சங் 107:35-38சங் 145:15-16 சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி 1 அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார். யாக் 5:7-8பிலி 4:4லேவி 26:4உபா 11:14ஓசி 6:3ஏசா 12:2-6ஏசா 41:16சங் 149:2 களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சைரசமும் எண்ணெயும் வழிந்தோடும். ஆமோ 9:13மல்கி 3:10யோவே 3:18யோவே 3:13நீதி 3:9-10லேவி 26:10 நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். சகரி 10:6யோவே 1:4-7யோவே 2:2-11 நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாக நடத்திவந்த உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. ரோம 10:11சங் 22:26உபா 12:7ரோம 5:5ஏசா 45:17ஏசா 49:23லேவி 26:51 யோவா 2:28 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய யெகோவா, வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. எசேக் 37:26-28லேவி 26:11-12செப்ப 3:17எசேக் 39:28ஏசா 45:5யோவே 3:17உபா 23:14ஏசா 12:6 அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள். 2 அப் 2:16-21எசேக் 39:29ஏசா 32:15அப் 2:39அப் 2:2-4ஏசா 44:3சகரி 12:10அப் 11:15-18 ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். 1 கொரி 12:13கலா 3:28கொலோ 3:11 வானத்திலும் பூமியிலும் இரத்தம் நெருப்புப் புகைத்தூண்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். அப் 2:19-20லூக் 21:11மத் 24:29லூக் 21:25-26நியாயாதி 20:40மாற் 13:24-25வெளி 6:12-17ஆதி 19:28 யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்குமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். வெளி 6:12-13மத் 24:29மல்கி 4:1மல்கி 4:5யோவே 3:15யோவே 2:10மாற் 13:24-25செப்ப 1:14-16 அப்பொழுது யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; யெகோவா சொன்னபடி, சீயோன் மலையிலும் எருசலேமிலும், யெகோவா வரவழைக்கும் மீதியாக இருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும். ரோம 10:11-14அப் 2:20-21ஏசா 46:13எரே 31:7எரே 33:3சங் 50:15ரோம 11:26ரோம 9:27