அப்போஸ்தலருடைய நடபடிகள் 2

Acts 2
அத்தியாயம் 2

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வருகை

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள். ரோம 15:6பிலி 2:2அப் 1:13-15பிலி 1:271 கொரி 16:8அப் 4:32செப்ப 3:9அப் 4:24 அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அப் 4:311 இராஜா 19:11யோவா 3:8சங் 18:10அப் 16:25-26எசேக் 3:12-13எசேக் 37:9-10ஏசா 65:24 அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. மத் 3:11யோவா 1:32-33அப் 2:4எரே 23:29ஏசா 11:2-3லூக் 24:32ஆதி 11:61 கொரி 12:10 அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். மாற் 16:17அப் 13:52அப் 4:31எபே 5:181 கொரி 12:101 கொரி 14:21-23யோவா 14:26அப் 7:55 வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள். அப் 8:2லூக் 2:25கொலோ 1:23அப் 10:2அப் 10:7அப் 13:50அப் 2:1அப் 22:12 அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 1 கொரி 16:92 கொரி 2:12அப் 2:2அப் 3:11மத் 2:3 எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா? அப் 2:12அப் 1:11அப் 14:11-12யோவா 7:52அப் 3:10மத் 21:11மத் 26:73மத் 4:18-22 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 1 பேது 1:12 தீமோ 1:15அப் 16:6அப் 18:2வெளி 1:42இராஜா 17:6அப் 19:10அப் 19:31 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், அப் 16:6சகரி 8:23அப் 13:13அப் 13:43அப் 15:38அப் 18:23சகரி 8:202 தீமோ 1:17 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 1 கொரி 12:10யாத் 15:11எபி 2:4எரே 25:24யோபு 9:10சங் 26:7சங் 78:4தீத் 1:12 எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப் 17:20லூக் 15:26லூக் 18:36அப் 10:17அப் 2:7 மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள். 1 கொரி 14:231 சாமு 1:14அப் 2:15சகரி 10:7ஏசா 25:6யோபு 32:19எபே 5:18சகரி 9:15

பேதுருவின் பிரசங்கம்

அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள். ஏசா 51:7அப் 2:22அப் 5:35அப் 7:2உபா 27:9ஓசி 8:1ஏசா 51:1ஏசா 52:8 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே. 1 தெச 5:5-81 சாமு 1:15மத் 20:3 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது. யோவே 2:28-32

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் யோவே 2:28-32ஏசா 44:3தீத் 3:4-6அப் 10:45யோவா 7:39சகரி 12:10எசேக் 11:19எபி 1:2

என் ஆவியைப் பொழிவேன்,

அப்பொழுது உங்களுடைய குமாரர்களும்

உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்;

உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்;

உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;

என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், கொலோ 3:11கலா 3:281 கொரி 7:21-22அப் 21:10

என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன்,

அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.

அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், யோவே 2:30-31செப்ப 1:14-18மல்கி 4:1-6

கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், 2 பேது 3:10ஆமோ 8:9மத் 24:291 தெச 5:2மல்கி 4:5யோவே 2:12 பேது 3:7யோவே 3:14

சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ ரோம 10:12-13யோவே 2:32சங் 86:5அப் 22:16எபி 4:161 கொரி 1:2மத் 28:19அப் 9:15

அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார்.

“இஸ்ரவேலர்களே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். யோவா 3:2அப் 4:10யோவா 14:10-11லூக் 11:20மத் 12:28மத் 9:8எபி 2:42 கொரி 12:12 அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். அப் 4:28அப் 3:18ஆதி 50:20லூக் 22:22ஏசா 46:10-111 பேது 1:20அப் 3:13-15அப் 13:27 தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது. 1 கொரி 6:141 பேது 1:21அப் 2:32கொலோ 2:12ரோம 8:11ரோம 6:42 கொரி 4:14யோவா 10:18 அவரைக்குறித்து தாவீது: சங் 16:8-11ஏசா 41:13சங் 109:31சங் 62:6ஏசா 50:7-9சங் 62:2சங் 110:5சங் 73:23

கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்;

நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்;

அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, சங் 16:9சங் 63:5சங் 71:23சங் 30:11சங் 22:22-24

என் நாக்கு களிகூர்ந்தது,

என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், சங் 16:10அப் 2:31வெளி 1:18வெளி 20:131 கொரி 15:521 கொரி 15:55யோவா 11:39சங் 86:13

உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்;

ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; சங் 16:11சங் 21:6சங் 25:4சங் 42:5யோவா 11:25-26நீதி 2:19நீதி 8:20சங் 17:15

உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

சகோதரர்களே, “கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது. அப் 13:361 இராஜா 2:10அப் 7:8-9எபி 7:4நெகே 3:16அப் 26:26 அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால், சங் 132:11-18சங் 89:3-4எரே 33:14-152 சாமு 7:11-162 சாமு 23:22 பேது 1:21ஏசா 9:6-7லூக் 1:31-33 அவன் அப் 2:27சங் 16:10அப் 13:351 பேது 1:11-12

கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும்,

அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து,

அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம். அப் 3:15அப் 1:8அப் 1:22அப் 2:24அப் 4:33லூக் 24:46-48யோவா 15:27யோவா 20:26-31 அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார். அப் 1:4அப் 5:31அப் 2:17யோவா 14:26யோவா 16:7-151 பேது 3:22அப் 10:45கலா 3:14

தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. சங் 110:1மத் 22:42-45எபி 1:13எபே 1:221 கொரி 15:25லூக் 20:42-43மாற் 12:36

நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும்,

நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று வெளி 19:19ரோம 16:20ஏசா 60:14ஏசா 59:18வெளி 20:8-15ஆதி 3:15ஏசா 63:4-6லூக் 20:16-18

கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான். அப் 5:30-31ரோம 14:8-122 கொரி 5:10அப் 4:11-12எசேக் 34:302 தெச 1:7-10சகரி 13:1அப் 10:36-42 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். லூக் 3:10அப் 22:10அப் 16:29-31எபி 4:12-13லூக் 3:12லூக் 3:14யோவா 8:9அப் 24:25-26 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள். அப் 22:16மாற் 16:16அப் 8:12லூக் 24:47அப் 10:48அப் 3:191 பேது 3:21அப் 10:44-45 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; ஏசா 44:3ரோம 8:30ஆதி 17:7-8யோவே 2:321 பேது 5:10அப் 15:8எபே 4:4வெளி 19:9 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். பிலி 2:15உபா 32:51 தீமோ 4:162 கொரி 6:17எபே 4:17மத் 17:17எபி 3:12-13மத் 16:4 அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அப் 4:4அப் 2:47அப் 16:31-34யோவா 14:12அப் 1:15அப் 2:37அப் 13:48அப் 8:6-8

விசுவாசிகளின் ஐக்கியம்

அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள். எபி 10:25அப் 1:141 யோவா 1:31 யோவா 1:7அப் 2:46அப் 20:7கொலோ 1:23எபே 6:18 எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது. யோவா 14:12லூக் 7:16லூக் 8:37மாற் 16:17எரே 33:9அப் 3:6-9அப் 4:33அப் 5:15-16 விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். அப் 4:321 யோவா 3:16-182 கொரி 8:14-152 கொரி 8:92 கொரி 9:6-15அப் 6:1-3அப் 5:4 நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 1 யோவா 3:171 தீமோ 6:18-19அப் 4:34யாக் 2:14-16லூக் 18:22நீதி 19:172 கொரி 9:9அப் 11:29 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு, அப் 5:42அப் 2:42அப் 20:7சங் 86:112 கொரி 1:12அப் 16:34கொலோ 3:22அப் 1:13-14 தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். அப் 16:5அப் 5:13-14அப் 2:411 கொரி 1:18அப் 2:39ரோம 14:18அப் 11:24அப் 13:48