யோவேல் 1

Joel 1
அத்தியாயம் 1

யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம்

பெத்துவேலின் மகனாகிய யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம். அப் 2:16எரே 1:22 பேது 1:21எசேக் 1:3ஓசி 1:1 முதியோர்களே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் அனைத்துக் குடிமக்களே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் முன்னோர்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? யோவே 2:2ஓசி 5:1எரே 30:7யோபு 8:8ஆமோ 3:1ஆமோ 4:1ஆமோ 5:1தானி 12:1 இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக. உபா 6:7சங் 145:4சங் 71:18யாத் 13:14சங் 78:3-8யாத் 10:1-2ஏசா 38:19யோசு 4:21-22 பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. யோவே 2:25ஆமோ 4:9ஆமோ 7:1சங் 78:46உபா 28:38யாத் 10:4ஏசா 33:4சங் 105:34 மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது. யாக் 5:1லூக் 21:34-36ஏசா 32:10-12ஆமோ 6:3-7ஏசா 24:7-11எரே 4:8எசேக் 30:2யோவே 1:11 எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம் 1 என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் 2 அதற்கு உண்டு. யோவே 2:25ஏசா 8:8யோவே 2:2-11நீதி 30:14வெளி 9:7-10ஓசி 9:3ஏசா 32:13நீதி 30:25-27 அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று. ஆமோ 4:9ஏசா 5:6யோவே 1:12யாத் 10:15ஆப 3:17ஓசி 2:12ஏசா 24:7எரே 8:13 தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும். ஏசா 22:12மல்கி 2:15யாக் 5:1ஆமோ 8:10ஏசா 24:7-12ஏசா 32:11யாக் 4:8-9எரே 3:4 உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள். யோவே 2:14யோவே 2:17ஓசி 9:4யோவே 1:13ஏசா 61:6புலம் 1:162 நாளாக 13:10யோவே 1:16 வயல்வெளி பாழானது, பூமி துக்கம் 3 கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது. ஓசி 4:3ஓசி 9:2எரே 12:11யோவே 1:5ஆகா 1:11எரே 12:4எரே 14:2-6எரே 48:33 பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது. எரே 14:3-4ஏசா 17:11எரே 9:12ஆமோ 5:16ரோம 5:5 திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது. ஏசா 16:10ஏசா 24:11ஆப 3:17-18ஓசி 9:1-2யோவே 1:10யோவே 1:16உன்னத 2:3ஆகா 2:19

தேசத்திற்காகப் புலம்புதல்

ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. எரே 4:8யோவே 1:8-91 இராஜா 21:27எசேக் 7:18எரே 9:10யோவே 2:17யோனா 3:5-81 கொரி 4:1 பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள். யோவே 2:15-162 நாளாக 20:132 நாளாக 20:3-4உபா 29:10-11யோனா 3:8லேவி 23:36நெகே 9:2-3நெகே 8:18 அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது. ஏசா 13:6-9எரே 30:7செப்ப 1:14-18எசேக் 7:2-12யாக் 5:9யோவே 2:11யோவே 2:31வெளி 6:17 நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ? உபா 12:6-7சங் 105:3சங் 43:4ஆமோ 4:6-7உபா 12:11-12உபா 16:10-15ஏசா 3:7ஏசா 62:8-9 விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போனது; பயிர் காய்ந்துபோகிறதினால் கிடங்குகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோனது. ஆதி 23:16ஏசா 17:10-11 மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது. ஓசி 4:3எரே 12:4எரே 14:5-61 இராஜா 18:5யோவே 1:20ரோம 8:22 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்தது, நெருப்புத்தழல் தோட்டத்தின் மரங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது. எரே 9:10சங் 50:15ஆமோ 7:4மீகா 7:7ஆப 3:17-18யோவே 2:3லூக் 18:7சங் 91:15 வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது. சங் 104:211 இராஜா 17:71 இராஜா 18:5யோபு 38:41சங் 145:15சங் 147:9