ஆராதனைசெய்ய ஒரே இடம்
“உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக உங்களுக்கு கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியமங்களுமாவன: 1 இராஜா 8:40யோபு 7:1உபா 12:19உபா 4:1-2உபா 4:19உபா 4:45உபா 4:5உபா 4:9-10 நீங்கள் துரத்திவிடும் மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கிய உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து, உபா 7:52இராஜா 16:4எண் 33:51-522இராஜா 17:10-11உபா 7:25-26யாத் 34:12-17எசேக் 20:28-29எரே 3:6 அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, தெய்வங்களின் சிலைகளை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள். நியாயாதி 2:2எண் 33:52சகரி 13:2சங் 16:4உபா 7:5யாத் 23:131 இராஜா 15:132 நாளாக 19:3 உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல், லேவி 20:23உபா 20:18உபா 12:30-31உபா 16:21-22 உங்கள் தேவனாகிய யெகோவா தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் இடமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய், உபா 12:112 நாளாக 7:12உபா 26:2உபா 16:21 இராஜா 8:29உபா 12:13சங் 132:13-14சங் 78:68 அங்கே உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், பொருத்தனைகளையும், உற்சாகபலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து, உபா 15:19-20உபா 12:17உபா 14:22-26உபா 26:2எசேக் 20:40லேவி 17:3-9லேவி 27:32-33லூக் 11:42 அங்கே உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்ததுமான எல்லாவற்றிக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக. உபா 12:18உபா 14:26லேவி 23:40உபா 12:12பிலி 4:4சங் 128:1-2உபா 14:23உபா 15:20 இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக. நியாயாதி 21:25நியாயாதி 17:6நீதி 21:2அப் 7:42எண் 15:39ஆமோ 5:25 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும், தேசத்திலும் நீங்கள் இன்னும் நுழையவில்லையே. 1 இராஜா 8:56உபா 25:19சங் 95:11எபி 4:8-9மீகா 2:101 நாளாக 23:251 பேது 1:3-4 நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்களுடைய எதிரிகளையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறச்செய்கிறதினால் நீங்கள் சுகமாக வாழ்ந்திருக்கும்போதும், எசேக் 34:28எரே 33:11உபா 11:31உபா 3:27உபா 4:221 இராஜா 4:251 சாமு 7:12உபா 33:12 உங்கள் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் யெகோவாவுக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து, உபா 12:5உபா 15:20உபா 16:2-8உபா 17:8உபா 18:6யோவா 4:20-231 இராஜா 8:131 இராஜா 8:29 உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நீங்களும், உங்களுடைய மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், உங்களுடன் பங்கும் சொத்தும் இல்லாமல் உங்களுடைய வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக. உபா 12:7உபா 10:9உபா 26:12உபா 12:19உபா 14:291 இராஜா 8:662 நாளாக 29:362 நாளாக 30:21-26 நீ நினைத்த இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாதபடி எச்சரிக்கையாயிரு. 1 இராஜா 15:342 நாளாக 15:17உபா 12:6லேவி 17:2-51 இராஜா 12:28-32 உன் கோத்திரங்களின் ஒன்றில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக. 2 கொரி 5:19உபா 12:11உபா 12:5எபி 10:19-22எபி 13:15சங் 5:7சங் 9:11 “ஆனாலும் உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நீ உன் வாசல்களிலெங்கும் உன் விருப்பப்படியே மிருகஜீவன்களை அடித்து சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல சாப்பிடலாம். உபா 14:5உபா 12:20-23உபா 14:26உபா 15:22-23லேவி 17:3-5 இரத்தத்தை மாத்திரம் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும். ஆதி 9:4உபா 15:23அப் 15:29உபா 12:23-241 தீமோ 4:4லேவி 17:10-13லேவி 7:26-27 உன்னுடைய தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் சாப்பிடவேண்டாம். உபா 26:14உபா 12:6உபா 14:22-29உபா 12:11உபா 12:26உபா 26:12லேவி 27:30-32எண் 18:21-24 உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக. உபா 12:7உபா 14:23உபா 12:51 கொரி 10:31அப் 16:34அப் 2:46உபா 12:11-12உபா 12:19 நீ உன் தேசத்திலிருக்கும் நாட்களெல்லாம் லேவியனைக் கைவிடாதபடி எச்சரிக்கையாயிரு. 2 நாளாக 31:4-21நெகே 10:34-391 கொரி 9:10-142 நாளாக 11:13-14உபா 14:27-29 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, அவர் உன் எல்லையை விரிவாக்கும்போது, நீ இறைச்சியைச் சாப்பிட ஆசைகொண்டு, இறைச்சி சாப்பிடுவேன் என்பாயானால், நீ உன் விருப்பப்படி இறைச்சி சாப்பிடலாம். உபா 19:8உபா 11:24யாத் 34:241 நாளாக 4:10ஆதி 28:14உபா 12:15யாத் 23:31ஆதி 15:18-21 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொள்ளும் இடம் உனக்குத் தூரமானால், யெகோவா உனக்குக் கொடுத்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீ அடித்து, உன் விருப்பப்படி உன் வாசல்களிலே சாப்பிடலாம். உபா 12:51 இராஜா 14:212 நாளாக 12:13உபா 12:11உபா 12:15உபா 14:23-24உபா 16:11உபா 16:6 வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல நீ அதைச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம். உபா 12:15-16 இரத்தத்தை மாத்திரம் சாப்பிடாதபடி எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம். லேவி 17:11ஆதி 9:4லேவி 17:13-14உபா 12:16லேவி 3:16-17மத் 20:28வெளி 5:9 அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும். உபா 12:16உபா 15:23 நீ யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடக்கூடாது. 1 இராஜா 11:38உபா 4:40யாத் 15:26ஏசா 3:10உபா 13:18உபா 6:18உபா 12:28உபா 5:16 உனக்குரிய பரிசுத்த பொருட்களையும், உன் பொருத்தனைகளையும் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்கு நீ கொண்டுவந்து, எண் 18:19எண் 5:9-101 சாமு 1:21-24உபா 12:11உபா 12:17-18உபா 12:21உபா 12:6ஆதி 28:20 உன் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்ற பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படுவதாக; மாம்சத்தையோ நீ சாப்பிடலாம். லேவி 1:13லேவி 1:9லேவி 17:11லேவி 1:5லேவி 4:30 நீ உன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள். உபா 12:25உபா 4:40யோவா 15:10யோவா 15:142 நாளாக 7:17உபா 24:8யாத் 34:11எசேக் 37:24 “நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தின் மக்களை உன் தேவனாகிய யெகோவா உனக்கு முன்பாக அகற்றும்போதும், நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கி அதிலே குடியிருக்கும்போதும், யோசு 23:4உபா 19:1உபா 9:3யாத் 23:23சங் 78:55 அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கியதுபோல நானும் வணங்குவேன் என்று சொல்லி அவர்களுடைய தெய்வங்களைக்குறித்துக் கேட்டு விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. எசேக் 20:32எரே 10:2உபா 7:16எபே 4:17யாத் 23:31-33எசேக் 20:28சங் 106:34-381 பேது 4:3-4 உன் தேவனாகிய யெகோவாவுக்கு அப்படிச் செய்யாமலிருப்பாயாக; யெகோவா வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்து தங்கள் மகன்களையும், மகள்களையும் தங்கள் தெய்வங்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே. எரே 32:352இராஜா 17:15-172இராஜா 21:2உபா 18:9-10எரே 7:31உபா 12:4உபா 9:5யாத் 23:2 “நான் உனக்குக் கொடுக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனுடன் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். உபா 4:2வெளி 22:18-19யோசு 1:7நீதி 30:6உபா 13:18மத் 28:20